மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மணிப்பூரை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர் அரிபாம் சியாம் சர்மா மத்திய அரசு அளித்த பத்ம ஸ்ரீ விருதை திரும்ப அளித்திருக்கிறார்.

“குடிமக்கள் மசோதாவை தீவிரமாக எதிர்த்து வரும் வடகிழக்கு மாநில மற்றும் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்திய அரசு எனக்கு அளித்த பத்ம ஸ்ரீ விருதை திரும்ப அளிக்கிறேன். உத்தர பிரதேசத்தைவிட மக்கள் தொகையில் குறைந்த மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களுக்கு இந்த மசோதா அச்சுறுத்தலாக இருக்கும்” என அரிபாம் சியாம் சர்மா தெரிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு திரைத்துறை பங்களிப்பிற்காக அவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.

திரைப்பட இயக்குநர் அரிபாம் சியாம் சர்மா.

இந்த மசோதா சட்டமாக்கப்படுமானால், மணிப்பூரின் அடையாளமும் கலாச்சாரமும் திரிபுராவில் நடந்ததுபோல அழியும் நிலைக்குப் போய்விடும் என அச்சம் தெரிவிக்கிறார் இந்தத் திரைப்படக் கலைஞர்.

அதோடு, குடிமக்கள் மசோதாவை எதிர்க்கும் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு போராடும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். “உங்களுடைய கலாச்சாரம் இருளில் சிக்கி இருக்கும்போது, வாழ்க்கைக்கு எந்தவித பொருளும் இல்லை. வடகிழக்கு மக்களின் குரல்களிலிருந்து இந்திய அரசு வேறுபடுவது எனக்கு வலியை உண்டாக்குகிறது” எனவும் வேதனையை வெளிப்படுத்துகிறார்.

படிக்க:
மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !
குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை

மணிப்பூரின் பூர்வகுடி மக்களை பாதுகாக்கும்பொருட்டு மசோதாவில் உட்பிரிவை சேர்க்கும் மணிப்பூர் அரசின் முயற்சி பலனளிக்காது என்கிற அரிபாம் சியாம் சர்மா, மக்களைவை மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின் அது சாத்தியமில்லை என்கிறார்.  மணிப்பூர் அரசு இந்த மசோதாவை முழுமையாக எதிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் என். பைரன் சிங்கிற்கு கோரிக்கை வைக்கிறார் இவர்.

ஆனால், மோடி – அமித் ஷா கும்பலோ மசோதாவை எந்த விலை கொடுத்தேனும் சட்டமாக்கியே தீருவோம் என தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்குகிறது.  கிழக்கு இந்திய மாநிலங்களைத் தங்களது பார்ப்பனிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கிறது, மோடி அரசு. இதை கிழக்கு இந்திய மாநில மக்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்சினையாகப் பார்க்காமல், பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டமாக உணர்ந்து ஆதரவுக்கரம் நீட்டுவோம்.


கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

1 மறுமொழி

 1. தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்த இந்தியா
  பார்ப்பன பாசிச ஆட்சியில்
  தேசிய இனங்களின் சித்திரவதைக்கூடமாக முன்னேறியிருக்கிறது.
  ஏனெனில் அது தேசிய இனங்களை அழித்தொழித்து
  அகண்ட பாரதக்கனவுப்படி இதை ஏக இந்தியாவாக்க விரைகிறது.

  அட்டைக்கத்தி தேசிங்கு ராஜனுக்கோ
  சவாரி செய்ய மண்குதிரை மட்டுமே தேவைப்படுகிறது
  பார்ப்பன பனியா பன்னாட்டு நிறுவனத் தலை உருட்டி
  கொட்டையிலே கொடியேற்றுவதற்கும்
  கோட்டையிலே செல்வாக்கு செலுத்துவதற்கும்!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க