சபரிமலை : பாலின ரீதியான ஒடுக்குமுறை | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

முத்தலாக் பற்றி, இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பேசுவது இருக்கட்டும்... பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?

க்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருச்சி கிளையின் சார்பில் சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா? என்ற தலைப்பில் கடந்த ஜன-23 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி  மஹாலில்  நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் T.A.  புனிதன் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்  சே. வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில், தோழர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கிய வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களது உரையின் காணொளி இப்பதிவில் இடம் பெறுகிறது.

அவரது உரையிலிருந்து சில பகுதிகள்…

* சபரிமலை பிரச்சினை என்பது மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல அது பாலின ரீதியான ஒடுக்குமுறை.

* இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி. பேசுகிறது. முத்தலாக் பிரச்சினையில் முஸ்லீம் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி சட்டம் கொண்டு வந்திருக்கிற… பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?

* தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் வந்தா கோவிலின் புனிதம் கெட்டுடும்னு நீ மனசுல நினைச்சிக்கலாம்… ஆனா, வரக்கூடாதுனு தடுத்தால் அது குற்றம்.

* தனிமனித கண்ணியத்திற்கு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு பழக்க வழக்கம் மரபு எதுவாக இருந்தாலும் அது செல்லாது.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க