க்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருச்சி கிளையின் சார்பில் சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

வருகின்ற 23-01-2019 அன்று மாலை 5.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி  மஹாலில்  இந்தக் கருத்தரங்கம்  நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல் :
தலைமை : வழக்கறிஞர் ப.முருகானந்தம்
வரவேற்புரை : வழக்கறிஞர் மா.சிவசங்கர்
கருத்துரை : மூத்த வழக்கறிஞர் T.A.  புனிதன்
வழக்கறிஞர் : சே. வாஞ்சிநாதன்
கலைநிகழ்ச்சி : தோழர். கோவன் – ம.க.இ.க கலைக்குழு
நன்றியுரை : வழக்கறிஞர். சி. சாருவாகன்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி கிளை செயலாளர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில், மூத்த வழக்கறிஞர் T.A.புனிதன்   மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தோழர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

படிக்க:
சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்
சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தகவல்:
ப.முருகானந்தம்,
மாவட்ட செயலாளர்,
திருச்சி கிளை.
தொடர்புக்கு: 94875 15406


இதையும் பாருங்க …

சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

ஏத்திவிடு ஐயப்பா … தூக்கிவிடு ஐயப்பா … கோவன் பாடல்

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க