து என்ன மாயமோ தெரியல.. இந்தியப் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலே #GoBackModi உலக அளவில Trending ஆகிறது. ட்ரோல் படையை வைத்திருக்கும் பாஜகவினராலேயே இந்த போக்கை தடுக்க முடியல. சங்கிகள் #TNWelcomesModi -யை இறக்கினாலும் முடியல. ஏதாவது ஒரு முறைன்னா பரவாயில்லை. மோடி வரும்போதெல்லாம்  #GoBackMod உலக அளவில், இந்திய அளவில், சென்னை அளவில் முதலிடத்தில் வருவதே வாடிக்கையாப் போச்சு.

இதெல்லாம் மோடி கவனத்திற்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. இந்த வாட்டி மக்கள் புதுசா #GoBackSadistModi -ன்னு ஒரு ஹேஷ்டேக்கை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதுவும் உலக, இந்திய, சென்னை அளவில் முதலிடத்தில் வந்து விட்டது.

அதிமுக கூட்டணின்னு இரட்டை அடிமைகள் சொன்னாலும் இது தேசிய ஜனநாயகக் கூட்டணின்னு அமித்ஷா உத்திரவே போட்டிருக்கிறார். இன்று சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து கூட்டணி தலைவர்களும் வரவேண்டும் என்று ஆணையும் பிறப்பித்திருக்கிறார் அன்னார். ஆனாலும் தமிழகம் மட்டும் இந்தியப் போக்கிலிருந்து விலகி மோடியை வெச்சு செய்கிறது. ஏன்? ஏன்? ஏன்?

சமூகவலைத்தளங்களில் மோடியையும், பாஜகவையும் பின்னி பெடலெடுக்கும் நண்பர்கள் உதவியோடு இந்த  நேரலை பதிவை வெளியிடுகிறோம். இணைந்திருங்கள். இது தொடர்பான உங்கள் செய்திகள், படங்கள், ஒலி – ஒளிப்பதிவுகளை அனுப்புங்கள்.

பதிவுகள் முடியும் இடத்தில் Show more posts-ஐ அழுத்துக

1 மறுமொழி

  1. மோடி அய்யா அடிக்கல் எங்க நாட்டுறாரு?… ரிமோட்ட வச்சுக்கிட்டு பஸ்கியில்ல போடுறாரு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க