பாஜக ஆட்சியின் கீழ் உள்ள அரியானா மாநிலத்தில் பட்டப்பகலில் கைகளில் வாள் ஏந்தி இந்துத்துவ குண்டர்கள் ஊர்வலம் செல்கின்றனர். அப்பகுதியில் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை ஒட்டி, கடைத்தெருவில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடும்படி வாளேந்திய குண்டர்கள் வியாபாரிகளை மிரட்டுகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

கையில் கத்தியுடன் வலம்வரும் இந்து சேனா குண்டர்கள்.

கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் வடமாநிலங்களில் மேற்கண்ட காட்சி அடிக்கடி காணக் கிடைத்த காட்சிதான் என்றாலும், தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் குண்டர்கள் சுதந்திரமாக திரிந்து கொண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இந்து சேனா என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 40 ஆண்கள் கைகளில் வாள், இரும்புத் தடி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அரியானாவின் குருகிராமில் உள்ள கடைப் பகுதிகளில் வலம் வந்தனர். அப்போது அங்கிருந்த இறைச்சி கடைகளுக்குச் சென்று கடையை மூடும்படி எச்சரித்தனர். கடையை மூடாவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

படிக்க:
♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகப் பரவியதை அடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக துணை கமிஷனர் தெரிவிக்கிறார். தேர்தல் காலத்தில் கணக்குக் காட்டவே இந்தக் கண் துடைப்பு நடவடிக்கைகள் எல்லாம்..

இறைச்சி கடைகளுக்குச் சென்று மூடும்படி மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றுக்காக ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கும்பலில் இருந்த 25 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளதாகவும் போலீசு தகவல் சொல்கிறது.

அரியானாவின் ‘இந்து சேனா’ அமைப்பின் தலைவரான ரிது ராஜ், இந்த வழக்கில் கைதாகியுள்ள ராஜேஷ் மற்றும் பிரமோத் ஆகியோர் கடந்த ஆறு மாதங்களாக இந்த அமைப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று கிட்டத்தட்ட 200 இறைச்சிக் கடைகளை மூடியிருப்பதாகத் தெரிவிக்கும் இவர், இது குருகிராம் மாநகராட்சி செய்ய வேண்டிய வேலை என பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.

அனுமதி பெறாத இறைச்சிக் கடைகளை மூட வைக்கிறோம் என்ற பெயரில் தாங்கள் செய்த ரவுடித்தனத்தை மூடி மறைக்கிறது இந்தக் கும்பல். சரியாக சொல்லப்போனால், பாஜக ஆட்சியில் அரசோ, காவல்துறையோ இன்னபிற ஜனநாயக அமைப்புகளோ இருக்காது; கும்பல் ஆட்சிதான் நடக்கும் என தேர்தல் நேரத்தில் மக்களுக்கு உணர்த்துகிறார்கள் இவர்கள்.


கலைமதி
நன்றி: ஸ்க்ரால் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க