மீபத்தில் மெக்சிகன் கால்பந்து அணியின் வெற்றியை வெனிசுலா மக்களுக்கும் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுராவிற்கும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவரான டீகோ மரடோனா உரித்தாக்கினர். மேலும் அவர் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் விமர்சனம் செய்தார்.

“நான் இந்த வெற்றியை நிக்கோலஸ் மதுராவிற்கும் துயரத்திலிருக்கும் வெனிசுலா மக்களும் உரிதாக்குகிறேன். யார் இந்த அமெரிக்கர்கள் – உலக நாட்டாமைகள். பெரிய குண்டுகள் வைத்திருப்பதாலேயே இவர்கள் நம்மை விட முன்னேறியவர்கள் என்று கூறிவிட முடியாது” என்று கால்பந்து வெற்றிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

சிரோலிட்டா பொம்மையும் டிரம்பும்

மேலும் நாங்கள் ஒன்றும் சிரோலிட்டா (chirolita) கைப்பாவையை விலைக்கு வாங்கவில்லை. சிரோலிட்டா 1970-களில் அர்ஜென்டினாவில் பிரபலமான ஒரு காமெடி உருவம். டிரம்ப் இந்த உருவத்தை பிரதிபலிப்பதாக மரடோனா கூறியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக மரடோனாவிற்கு மெக்சிகன் கால்பந்து அமைப்பு அபராதம் விதித்துள்ளது. டிரம்பை விமர்சித்ததும் மதுராவை ஆதரித்ததும்தான் இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது. சட்டப்படி மெக்சிகன் கால்பந்து அணியைச் சேர்ந்தவர், அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

படிக்க:
♦ வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்
♦ கரும்பு வெட்ட கருப்பையை காவு கேட்கும் லாபவெறி !

20-ம் நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக பிரேசிலின் பீலேவும் மரடோனாவும் ஃபிஃபா (FIFA) அமைப்பினால் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மெக்சிகன் கால்பந்து அணியின் தொழில்நுட்ப பயிற்சியாளராக 2018-ம் ஆண்டு முதல் மரடோனா பணியாற்றி வருகிறார். மரடோனாவிற்கு நெருங்கிய நண்பர் மதுரா. மேலும் வெனிசுலாவின் முன்னாள் அதிபர் சாவேசும், காஸ்ட்ரோவும் மரடோனாவிற்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

டீகோ மரடோனா

ஜனவரி முதலாக மதுரா அரசாங்கத்தை கவிழ்க்கவும் அமெரிக்க ஆதரவு தொழிலதிபரான ஜுவான் கியோடோவை அதிபராக்கவும் அமெரிக்கா கடுமையாக முயற்சி செய்து வருகிறது. மேலும் 2017-ம் ஆண்டு முதலாகவே மதுராவிற்கு எதிராக திரைமறைவு ஆட்சிக்கவிழ்ப்பு சதிவேலைகளை நடத்தி வருவதுடன் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா தொடர்ந்து சுமத்தி வருகிறது. இது வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள வெனிசுலாவின் பொருளாதாரம் அமெரிக்க – சவூதியின் சதி வேலைகளால் ஏற்பட்ட எண்ணெய் வீழ்ச்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: telesure 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க