கலையரசன்
  இல‌ங்கையில் இன்று (21.04.2019) ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 290 பேர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்துள்ள‌ன‌ர்.

இல‌ங்கை ம‌க்க‌ள் அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டியுள்ள‌ இந்த‌ த‌ருண‌த்தில், வ‌த‌ந்திக‌ளை கிள‌ப்பி பிரிவினையை தூண்டும் தீய‌ ச‌க்திக‌ள் குறித்தும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும். அர‌ச‌ கைக்கூலிக‌ளான‌ இந்த‌ தீய‌ச‌க்திக‌ள் இல‌ங்கையில் ஒரு பாஸிச‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியைக் கொண்டு வ‌ருவ‌தை நோக்க‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌.

இந்த‌ நிமிட‌ம் வ‌ரையில் எந்த‌ இய‌க்க‌மும் தாக்குத‌லுக்கு உரிமை கோர‌வில்லை. அதே நேர‌ம் அர‌சும் யாரையும் குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால், அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து.

தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், இத‌னால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பின் விளைவுக‌ளை ஆராய்ந்து, த‌ம‌து இல‌க்குக‌ளைத் தெரிவு செய்துள்ள‌ன‌ர்.

1) குண்டுவெடிப்பில் ப‌லியான‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்கள். த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இதில் அட‌ங்குவார்க‌ள். ஈஸ்ட‌ர் நாள் விசேட‌ பூஜை என்ப‌தால் பெருந்தொகையின‌ர் ப‌லியாகியுள்ள‌ன‌ர்.

2) கொழும்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று ஒரே நேர‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டுக‌ள் வெடித்துள்ள‌ன‌. ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல், ஆட்ப‌ல‌ம், ஆயுத‌ ப‌ல‌ம், நிதி போன்ற‌ வ‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இது சாத்திய‌மில்லை.

3) மேற்க‌த்திய‌ ப‌ண‌க்கார‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து த‌ங்கும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஹொட்டேல்க‌ளில் குண்டுக‌ள் வெடித்து ப‌ல‌ வெளிநாட்ட‌வ‌ரும் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அத‌னால் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின், குறிப்பாக‌ மேற்க‌த்திய‌ நாட்ட‌வ‌ரின் க‌வ‌ன‌த்தை இல‌ங்கையின் ப‌க்க‌ம் ஈர்த்துள்ள‌து.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் !

இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளைப் பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.

♦ சிறில‌ங்கா குண்டுவெடிப்பின் எதிரொலியாக‌ நாளை ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளின் ஆர்ப்பாட்ட‌ம் ஒன்று அறிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. நெத‌ர்லாந்தில் உள்ள‌ அனைத்து தேவால‌ய‌ங்க‌ளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ வேண்டுமென‌ கோரிக்கை விடுக்கின்ற‌ன‌ர். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி இஸ்லாமிய‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. பிற‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளிலும் இதே பாணியிலான‌ போக்குக‌ள் தென்ப‌டுகின்ற‌ன‌.

♦ இல‌ங்கையில் போர் முடிந்து, க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ஒரு துப்பாக்கிச் சூடு கூட‌ ந‌ட‌க்காம‌ல் அமைதியாக‌ இருந்த‌ கால‌த்தில் மீண்டும் இந்த‌ப் ப‌டுகொலைக‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. அண்மைக் கால‌த்தில் அர‌சு கொண்டு வ‌ந்த‌ புதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு ச‌ட்ட‌த்திற்கு க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பி இருந்த‌து. இனிமேல் அதை ந‌டைமுறைப்ப‌டுத்த எந்த‌த் த‌டையும் இல்லை.

♦ இல‌ங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழ‌ல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ க‌ட்டைக‌ள் விழுவ‌து மாதிரி தெற்காசிய‌ நாடுக‌ள் நீண்ட‌ நெடும் போர்க‌ளுக்குள் த‌ள்ள‌ப் ப‌ட‌லாம். ம‌த்திய‌ கிழ‌க்கிலும் அமைதியாக‌ இருந்த‌ நாடுக‌ளில் திடீர் போர்க‌ள் உருவான‌ வ‌ர‌லாற்றை நாம் ஏற்கென‌வே க‌ண்டுள்ளோம்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

22 மறுமொழிகள்

 1. வினவின் நிலை மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது போல, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் இருவருமே வினவின் கூட்டாளிகள் அவர்களில் யார் ஒருவர் இது போன்ற செயல்களை மற்ற கூட்டாளிக்கு எதிராக செய்தாலும் கண்டிக்க முடியாது, இதுவே ஒரு இஸ்லாமிய அமைப்பு ஹிந்துக்களுக்கு எதிராக இந்த மாதிரியான ஒரு செயலை செய்து இருந்தால் உடனே இது மோடியே ஒட்டு வாங்குவதற்காக செய்த சதி திட்டம் என்று பொய்களை அவிழ்த்து விட்டு இருக்கலாம் ஆனால் இப்போது அதுமாதிரி எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால் இலங்கை அரசின் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பை முறியடிக்க அரசே செய்த செயல் என்பது போல் பிரச்சாரங்களை ஆரம்பித்து இருக்கிறது வினவு.

  • மணி மாமா…

   இதெல்லாம் காலங்காலமா அரசாங்கங்கள் செய்யுறதுதான்.. உனக்கு தெரியாதா மாமா ? இந்தியா எல்.டி.டி.ஈ.-க்கும் பிற ஈழத் தமிழ் போராளிக் குழுவையும் வளர்த்து விட்டதெல்லாம் என்ன கதையா ?

   ஏதேனும் ஒரு அரசுக்குத் தெரியாமல் எந்த வெடிகுண்டும் வெடிப்பது கிடையாது மணிமாமா !

 2. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இலங்கை அரசே திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்புகளை நடத்தி இருக்கிறார்கள் என நம்ப வேண்டும் போல. ஆனால் வெளிவரக்கூடிய தகவல்களோ வேறு மாதிரியாக உள்ளன. உள்ளூர் தீவிரவாதிகள்தான் இதை நடத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என ஆராயப்பட்டு வருகிறது. இந்த உள்ளூர் தீவிரவாதிகளின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு விட்டன. ஆகையால் இனி எதை வைத்து ஜோடிப்பது என கொஞ்சம் மூளையை கசக்கி அடுத்த கட்டுரையை வெளியிடவும். இஸ்லாமிய தீவிரவாதம் தான் இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதத்தை ஊக்குவித்தது. ஆட்சியைப் பிடிக்கவும் வழி செய்தது. இனி இலங்கையில் பௌத்த தீவிரவாதம் முன்னைவிட மேலோங்கும். இப்போது மீண்டும் அவசரநிலைப் பிரகடனத்தை அந்நாட்டு அரசு வெளியிட்டிருக்கிறது. ராணுவத்துக்கும் போலீசுக்கும் அதிக அதிகாரங்களை கொடுத்துள்ளது. இனி சர்வசாதாரணமாக மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும். இவை தான் இந்த வெடி தாக்குதல்களால் ஏற்பட்ட பலன்கள். சாதாரண மக்களின் நிலை தான் பரிதாபம்.

 3. அடடடா…. வெனவுக்கு டெலிகேட் பொசிசன். செத்தது இந்துவா இருந்தா, உங்க சாமி ஏன் காப்பாத்தலன்னு கேட்டுருக்கலாம். ஆனா செத்தது கிருஸ்தவன். அதனால ஏசு ஏன் காப்பாத்தலன்னு கேக்க முடியாது. செஞ்சது பார்ப்பணீய இந்துத்வ ஆர் எஸ் எஸ்னு சொல்லலாம்னு பாத்தா, நடந்தது இலங்கையில. பௌத்தர்கள் மேல திருப்பலாம்னு பாத்தா, நேசனல் தவ்ஹீத் ஜமாத்னு அறிவிச்சிட்டாங்க. இப்போ, உங்க கூட்டாளிகள எப்படி காப்பாத்த போறீங்களோ தெரில

  • ஏதேனும் ஒரு அரசுக்குத் தெரியாமல் எந்த வெடிகுண்டும் வெடிப்பது கிடையாது சான்..
   அது எந்த அரசு என்பது பல சமயங்களில் வெளிவருவதில்லை. அவ்வ்வளவுதான் வித்தியாசம்.

   இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிரா வினவுல வந்த கட்டுரையெல்லாம் படிச்சதில்லையா ?

 4. கட்டுரையின் தலைப்பே தவறு. இலங்கை குண்டு வெடிப்பு என்பதற்கு பதில் குண்டு வெடிப்புக்கள் என பன்மையில் இருந்திருக்க வேண்டும். உங்கள் பாசம் புரிகிறது. இந்த தாக்குதல்கள் கோட்டாபய ராஜபக்ச என்னும் போர் குற்றவாளி ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

  • கருப்பு பார்ப்பார் பெரியசாமி அவர்களே…

   வார்த்தைகளில் லெஃப்ட் புகுந்து ரைட் வந்து விளையாடும் உங்கள் திறமை கண்டு வியந்து போனேன்…

   அது சரி அதுக்கு ஏன்யா ராஜ பக்சேவ கோட்டா பயன்னு திட்டுறீங்க…

   போர் குற்றவாளி என்று ஒருமையில் சொல்லி ராஜபக்சேவைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் .. நீங்கள் ராஜபக்சேவின் அடிவருடியாகத்தான் இருக்க முடியும். அவனது ஆட்சிக் காலத்தில் எத்தனைப் போர்களை தமிழர்களுக்கு எதிராக எடுத்திருப்பான். போர்கள் குற்றவாளியா ? போர்க் குற்றவாளியா ? ராஜபக்சேவை ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் … சொல்லுங்கள் அவனிடமிருந்து எத்தனை கோடி வாங்கினீர்கள் ?

   (வார்த்தை சித்து விளையாட்டுப் பயிற்சி எங்கள் அண்ணன் கருப்போ கருப்புப் பார்ப்பான் பெரியசாமியிடம் எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

   • போர்கள் குற்றவாளி என்னும் புதிய சொல்லாடலை தமிழ் மொழிக்கு வழங்கிய தமிழ்ப் புலமைக்கு நன்றி. ஆனால் இலக்கணப்படி இந்தப் போர்கள் குற்றவாளி என்னும் சொல்லாடல் சரியா என தெரியவில்லை. கருப்பு பார்ப்பான் மஞ்சள் பார்ப்பான் என எத்தனை சித்து விளையாட்டுகளை செய்தாலும் உண்மை மாறாதது. உள்ளத்தில் நேர்மை இல்லாமல் பேடித்தனமான கட்டுரை எழுதுபவர்களுக்கு இது தெரியாது.

    • ////போர்கள் குற்றவாளி என்னும் புதிய சொல்லாடலை தமிழ் மொழிக்கு வழங்கிய தமிழ்ப் புலமைக்கு நன்றி ////

     கருப்பு பார்ப்ஸ் பெரிசு ஜி, உங்களிடம் கற்றுக் கொண்டதுதான் குருஜி.. மேலே உங்களுக்கு போட்ட பதிலில் டிஸ்கி ஒன்று போட்டிருந்தேனே படிக்கவில்லையா ?

     என்ன இருந்தாலும், இலங்கை குண்டுவெடிப்பு என்று சொல்வதன் பின்னணியில் ஒரு பெரிய ராஜதந்திர அரசியலையே கண்டுபிடித்த உங்கள் அளவுக்கு வரமுடியவில்லை. அன்னார் பொறுத்தருள வேண்டும்…

     • எல்லா தமிழ் மற்றும் ஆங்கில செய்தி மீடியாக்களில் குண்டு வெடிப்புகள்
      அல்லது குண்டு தாக்குதல்கள் (bomb blasts) என தான் வந்துள்ளன. அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். பாசம் கண்ணை மறைப்பதால் உண்மையை சுட்டிக் காட்டிய என் மீது கோபம் வருகிறது. உங்கள் அளவுகோலின் படி நாட்டில் தொன்னூறு சதம் பேர் கருப்பு பார்ப்பனர் தான்.

 5. மணி மாமா, பெரியசாமி, ஷா என்ற பெயரில் உளறி கொட்டும் அம்பிகளுக்கு !! வினவில் எத்தனை கிறித்துவ, இஸ்லாமிய எதிர்ப்பு கட்டுரைகள் வந்துள்ளன என்று படிக்கவும். இந்த கட்டுரை எழுதப்படும் வரை, எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. அதைதான் கலை சொல்லி இருக்கின்றார். பாதுகாப்பு நிறைந்த கொழும்பு முதலிய பகுதிகளில் நடந்துள்ள குண்டுவெடிப்புகள், ஆசிரியர் அச்சப்படுவது போல, பாசிசம் தன் இருப்பினை நிலைபடுத்த அனுமதிக்கப்பட்ட முறைகளாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் எப்படி இஸ்லாமியர்களின் மீது தாக்குதல் நடத்தி எதிர்தாக்குதலை விரும்பி வரவேற்று, தன் நிலையினை உறுதிப்படுத்த பிரச்சாரம் செய்கிறதோ, அது மாதிரி. ஆசிரியர் சொன்னது போல, அதன் பயன்கள் தெரிய ஆரம்பித்து விட்டன – பாசிசம் தன் அடக்குமுறைகளுக்கு நியாயம் பெறத் தொடங்கிவிட்டது !!!

  • ஆதவன்,

   மேலே நீங்கள் சொன்னவர்கள் வெறும் தலைப்பைப் படித்து கமெண்டு போடுபவர்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை…

   நீங்கள் என்ன கேட்டாலும், அவர்கள் 4 விசயங்கள் மட்டுமே பதில் தருவார்கள்.

   1. பாகிஸ்தான் கைக்கூலி, சீன கைக்கூலி
   2. சர்ச் பணம் வருது, பாய்கள் பணம் வருது
   3. ரசியாவைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா ? சீனாவப் பத்தி எங்களுக்குத் தெரியாதா ?
   4. தேசவிரோத கும்பல், கம்யூனிஸ்ட் தீவிரவாத கும்பல்…

   இந்த 4 ஐட்டத்த வச்சிக்கிட்டுதான் இவங்க அத்தனை பேரும் இத்தனை வருசமா வினவு பின்னூட்டத்துல வண்டி ஓட்டிட்டு இருக்காங்க ..

   இந்த எழவுனாலதான் இப்போலாம் பின்னூட்டம் பகுதிக்கு வராம விட்டுட்டேன் நான்…

 6. இந்துவுக்கு சாதகமா பேசனா அம்பிகளாத்தான் இருக்கனும்னு நினைக்கிற மண்டுகளுக்கு. இஸ்லாம், கிருஸ்தவம், கம்யூனிசம்லாம் பாசிசம் இல்ல, ஆர் எஸ் எஸ் மட்டும்தான் பாசிசம். இதென்ன கம்யூனிச லூசுத்தனமா? ஆர் எஸ் எஸ் உருவானதே மாப்ளா கலவரத்தில் 1 லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டதனாலதான். அது இஸ்லாமிய, கிருஸ்தவ, கம்யூனிச தீவிரவாதம் இருக்கும்வரை இருக்கும். வெனவு இஸ்லாம், கிருஸ்தவத்துக்கு எதிரா பதிவு போட்டுச்சாம். நக்கி குடுத்து போட்ட பதிவுகள நாங்களும்தான் பாத்தோமே. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு இஸ்லாம்தான் முழு முதல் காரணம்னு போட்ட பதிவு இருக்கா? அதுக்கு ஆதாரமா குரான் ஹதீஸ் வசனங்களே இருக்கே? அத போட்டு அதுதான் காரணம்னு சொல்ற கொட்ட தைரியம் வினவுக்கு இருக்கா? முஸ்லிம் செத்தா ஒடனே இந்து பாசிசம் பாயாசம்னு கதற்ற வெனவுதான் இப்போ யாருன்னு தெரிலயே, நான் என்ன பன்ணுவேன், எங்க போவேன், எனக்கு யார தெரியும்னு அழுவுது. வெனவோட நடு நிலைய ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கோம். மொதல்ல 10 லட்சம் சொந்த மக்கள, விவசாயிகள கொன்ன ஸ்டாலின பத்தி பதிவு போட சொல்லு.

  • மாமா … சான் மாமா.. மொதல்ல இந்தியா வரலாறு படிச்சுட்டு வா … அப்புறமா ரசிய வரலாறெல்லாம் நம்ம படிக்கலாம்… சரியா ?..

   மொதல்லா மாப்ளா கலவரம் எங்க நடந்ததுன்னு சொல்லுப்பா பாப்போம்…

   ரசியா எங்க இருக்குன்னு தெரியுமா நைனா ?

   மாப்ளா கலவரத்துல் இந்துக்கள் செத்தாங்களாம் … அங்க இருந்து ஆர்.எஸ்.எஸ். வந்துச்சாம்… எவன் உனக்கு வரலாறு சொல்லிக் கொடுத்தாம்பா /// கூப்பிடு அவனை… என்ன சாப்பிட்டு இப்படி வாந்தி எடுத்தான்னு தெரியலையே ?

 7. வினவு ஒரு ஊடக விபச்சாரி என்பது இந்த கட்டுரை மூலம் புலனாகிறது. எவனாவது உண்மையைச் சொன்னால் அவனை அம்பி கிம்பி என வசை பாடுவது.

  • ஆமா பெரியசாமி… அம்பின்னா பூணூல் போட்டிருக்கனும்ல…

   ஆனா பாருங்க .. சில கருப்புப் பாப்பானுங்க இருப்பானுங்க … அவங்க பூணூல்லாம் போட மாட்டாங்க.. ஆனா அவனுங்கள விட அதிகமா பார்ப்பனியத்துக்கு கால் கழுவி விடுற வேலைய பாப்பானுங்க…

   அப்படி செய்யிறவாளையும் அவா சூத்திராளா இருந்தாலும் அவாளை அம்பின்னு கூப்பிடலாம்…. அப்படின்னு மனு சாஷ்திரத்திலே சொல்லிருக்கா..

   படிச்சுப் பாரும்யா …

 8. //இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளைப் பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.//
  Surely MODI will take advantage of it in his remaining ELECTION speeches

 9. தினமலரில் வந்த செய்தியில் இந்த தாக்குதல்கள் ஏப்ரல் 18 க்கு முன்னர் நடத்தப்பட்டிருக்க படாதா என மாய்ந்து இருந்தது. இப்போதும் ஒன்றும் மோசமில்லை. இன்னும் சில கட்ட தேர்தல்கள் மீதமுள்ளன.

 10. //ஆர் எஸ் எஸ் உருவானதே மாப்ளா கலவரத்தில் 1 லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டதனாலதான்.// மாங்கா மடையன்களா ? மாப்ளா கலவரம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும், அவர்களை ஆதரித்த இந்திய அடிவருடிகளுக்கும எதிராக நடந்தது.
  //வினவு ஒரு ஊடக விபச்சாரி என்பது இந்த கட்டுரை மூலம் புலனாகிறது. எவனாவது உண்மையைச் சொன்னால் அவனை அம்பி கிம்பி என வசை பாடுவது.// உண்மைக்கும் உங்களுக்கும் ஈரேழு பதினான்கு லோகத்திலேயும் பொருந்தி வராதே அத்திம்பேர் !!!

  • General resentment amongst the Muslim population led to a long series of violent outbreaks beginning in 1836. These always involved the murder of Hindus, an act which the disgruntled Mappilas regarded as religiously meritorious and as part of their larger obligation to establish an Islamic state. In 1921, for instance, the stated aim was not to oust the Janmi system, but to establish an Islamic nation in Malabar.[7] The British administration referred to the outbreaks as “Moplah outrages”, but modern historians tend to treat them as religious outbreaks[18] or expressions of agrarian discontent.[19] The massacre of Hindus and widespread sexual violence in 1921–22 sustained this tradition of violence in Malabar but with one crucial difference: this time it had also a political ideology and a formal organisation.[12][4][14]

   Appendix IX of the book[20] captures the nature of the atrocities

   (a) Brutally dishonoring women,

   (b) Flaying people alive,

   (c) Wholesale slaughter of men, women and children,

   (d) Forcibly converting people in thousands, and murdering those who refused to be converted in utter cold blood.

   (e) Throwing half-dead people into wells, and leaving the victims for hours, to struggle till finally released from their sufferings by death.

   (f) Burning a great many and looting practically all Hindu and Christian houses, in the disturbed area, in which even Mopla women and children took part, and robbing women, of even the garments on their bodies, in short reducing the whole non-Moslem population to abject destitution.

   (g) Cruelly insulting the religious sentiments of the Hindus, by desecrating and destroying numerous temples, in the disturbed area, killing cows within the temple precincts, putting their entrails on the holy images and hanging the skulls on the walls and roofs.[20]

 11. மற்ற நேரங்களில் எல்லாம் தி.க மற்றும் திமுக சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி கட்சிகளே. ஆனால் இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு statement சொன்னால் போதும்.

  உடனே ஜாதி வந்துவிடும். இது தான் சிறப்பு பகுத்தறிவாதம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க