புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி அழைப்பு 

மது நியாயமான உரிமைகளுக்காகவும் ஜனநாயக அடிப்படையிலான கோரிக்கைகளுக்காகவும் குரல் எழுப்பிப் போராடுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக, ஜனநாயக விரும்பிகளை அச்சுறுத்தும் வகையில் இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) கொண்டுவரப்படுகிறது.

ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் பாதுகாத்து வருவதாக உரத்துக் கூறிக் கொண்டே ரணில் தலைமையிலான இன்றைய அரசாங்கம் மிக மோசமான காட்டுச் சட்டமாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன் நிற்கிறது.

படிக்க:
இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ?
இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !

போலீசாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச்சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன. தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு இறங்கி, நீதி நியாயம் கேட்கும் எவரையும் இச்சட்டத்தின் மூலம் இருபது வருடச் சிறைத்தண்டனை வரை தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இச்சட்ட மூலத்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து எதிர்த்து, அதனை மீளப் பெறுவதற்கு வலியுறுத்த வேண்டும் என இந்த அறிக்கையானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் அவர்கள் வெளியிடப்பட்டு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1979-ம் ஆண்டில் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் (PTA) கொண்டுவந்தது. கடந்த நாற்பது வருடங்களில் அக்கொடூர சட்டத்தினால், மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறப் போராடிய தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர். இன்றும் நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் அச்சட்டத்தின் கீழ் நீண்ட பல வருடங்களாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இன்றைய ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மும்முரம் காட்டி நிற்கிறது. இத்தகைய ஒடுக்குமுறைச் சட்டத்தினைப் பொறுத்தவரையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவுக் கரங்களை உயர்த்தி வரும் தமிழ், முஸ்லீம், மலையகப் பாராளுமன்றக் கட்சிகள் எத்தகைய நிலைபாட்டினை எடுக்கப் போகின்றன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்காட்டுமிராண்டிச் சட்டத்தை ஆதரிக்கப் போகிறதா? அதே போன்று மலையகத்தின் கட்சிகளும் முஸ்லீம் கட்சிகளும் தமது மக்களுக்குத் தமது புற முதுகுகளைக் காட்டித் துரோகமிழைக்கப் போகின்றனவா?

படிக்க :
நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

எனவே, தத்தமது கோரிக்கைகளுக்காகப் போராடிவரும் தொழிலாளர்களும் ஏனைய உழைக்கும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும், தமது நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் ஒன்றிணைந்து “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (CTA) கொண்டு வருவதை நிறுத்து” என உரத்துக் குரல் கொடுத்துப் போராடுவது அவசியமாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி,
இலங்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க