டந்த சனிக்கிழமை முன்னிரவுப் பொழுதில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள ஆர்.டி.நகர் என்ற பகுதியிலுள்ள மசூதி அருகே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 38 வயதான சஜ்ஜித் கான் என்ற முசுலீம் நபரைப் பயங்கரவாதி எனக் கூறிக் கைது செய்த பெங்களூரு போலீசார், பெங்களூரு நகரில் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் சஜ்ஜித் பெங்களூருவிற்கு வந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தினர். சஜ்ஜித்துக்கு உதவியாக வந்த 50 வயதான மற்றொருவரை பெங்களூரு போலீசார் வலைவீசித் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் வரக்கூடும் அல்லவா! சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாகப் பீதி பரவியது.

தீவிரவாதி சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்து பீதி பரப்பிய தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித் பெங்களூரு நகருக்குள் ஊடுருவியிருப்பதை முதலில் கண்டுபிடித்தவர்கள் போலீசார் அல்ல. அதனை “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்தவைக் கன்னடத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித், தான் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, மே 6 அன்று பெங்களூரு-கெம்பேகௌடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, அந்த ரயில் நிலையத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் நிலை பீப் என்ற ஒலியை ஏற்படுத்தியது. எனினும், அவர் அந்நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்தப் பதிவை ஒளிபரப்பிய கன்னட டி.வி.சேனல்கள், முசுலீம் தீவிரவாதியொருவர் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக பிரேக்கிங் நியூஸ் போட்டன. அதே காட்சியை ஒளிபரப்பிய மற்றொரு தொலைக்காட்சி ஊடகம், சஜ்ஜித்தைத் தொடர்ந்து அந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த மற்றொரு முசுலீமை, “முதலில் வெளியேறிய தீவிரவாதியின் உதவியாளர்” என அடையாளப்படுத்தியது.

மேலும், அத்தீவிரவாதி அந்த ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு துப்பரவு பணியாளரிடம், தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும், அதை வாங்கிக்கொண்டு தன்னை வெடிகுண்டோடு உள்ளே விட்டுவிட வேண்டுமென்று பேரம் பேசியதாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த கதையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட இந்தச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பெங்களூரு போலீசு தீவிரவாதியையும் அவரது உதவியாளரையும் தேடியலைந்து, ஆறு நாட்கள் கழித்து சஜ்ஜித் கானை மட்டும் ஆர்.டி. நகர் மசூதிக்கு அருகே வைத்துக் கைது செய்தது.

சஜ்ஜித்தை இரண்டு நாட்கள் போலீசு காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், சஜ்ஜித் தாடி வைத்திருந்த, குல்லாவும், குர்தாவும், கைலியும் அணிந்திருந்த முசுலீம் என்பதைத் தாண்டி, அவர் எந்தவொரு முசுலீம் தீவிரவாத அமைப்போடும் தொடர்பில் இருந்ததற்கோ, அவர் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் பெங்களூருவிற்கு வந்ததற்கோ மயிரளவு ஆதாரம்கூட போலீசுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, சஜ்ஜித் பற்றிக் கிடைத்த உண்மைத் தகவல்கள் இவைதான்:

சஜ்ஜித், இராசஸ்தானிலுள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் பிச்சை எடுப்பதற்காக பெங்களூரு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இப்பொழுதும் அவர், தனது மனைவியோடு மசூதி வாசல்களில் நின்றுகொண்டு தொழுகை முடித்துவரும் முசுலீம்களிடம் பிச்சை எடுப்பதற்காகவே பெங்களூரு வந்திருக்கிறார். அப்படியான பரம ஏழையான சஜ்ஜித்தைத்தான் ஊடகங்கள் தீவிரவாதியாகச் சித்தரித்துள்ளன. அதை நம்பிக்கொண்டு பெங்களூரு போலீசும் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தியிருக்கிறது.

சஜ்ஜித், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், தான் பிச்சை எடுத்துச் சேர்த்த 150 ரூபாயை, நாணயங்களாகத் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்தார். அந்தப் “பிச்சைக் காசுகள்”தான் பீப் ஒலி எழும்பவுதற்குக் காரணம். இந்த உண்மைகள் புறந்தள்ளப்பட்டு, தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

சஜ்ஜித்தின் உதவியாளர் என ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் ரியாஸ் அகமது. அவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பெங்களூரு நகரிலுள்ள மெஜஸ்டிக் பகுதியின் சாலையோரங்களில் கடை போட்டு கடிகாரங்களை விற்றுவரும் சிறிய வியாபாரி. தான் தீவிரவாதியின் உதவியாளராகச் சித்தகரிப்பட்டது தெரிந்தவுடன், தானே போலீசு நிலையத்திற்கு வந்து, தன்னைப் பற்றிய தகவல்களை போலீசிடம் தெரிவித்துச் சென்றார், அவர்.

“அன்றாடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவரும் தன்னால் யாருக்கேனும் ஒரு பைசாவாவது இலஞ்சம் தர முடியுமா?” எனக் கேள்வி எழுப்பும் சஜ்ஜித், “நடந்தவற்றை நினைத்து நான் அழத்தான் முடியும், இறைவனிடம் முறையிட முடியும், இதைத்தாண்டி, ஒரு சாதாரண ஏழையான என்னால் யார் மீதாவது கோபங்கொள்ள முடியுமா?” எனத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியோ, தனது கணவர் விடுவிக்கப்பட்ட பின்னர்கூட, போலீசு விசாரணை ஏற்படுத்திய அச்சத்திலிருந்து விடுபடவில்லை.

“தொலைக்காட்சிகளில் தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட என்னை, அந்தக் காட்சிகளைப் பார்த்த யாராவது ஒருவர் அடித்தே கொன்றுவிடக் கூடுமோ?” என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார், ரியாஸ் அகமது.

“சந்தேகப்படுபவர்களை விசாரிக்காமல் இருக்க முடியுமா?” என சங்கிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த விடயத்தை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், சஜ்ஜித் மீது ஊடகங்களும், போலீசும் சந்தேகப்படுவதற்கு அவரது மத அடையாளங்களைத் தாண்டி வேறெந்த அடிப்படையும் இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என்ற வரலாற்று உண்மையை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சொன்னதற்காக, அவரது நாக்கை அறுத்துப் போடுமாறும், அவரை வீதியில் நடமாடவிடக் கூடாதென்றும் சங்கப் பரிவாரங்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூச்சல் போடுகிறார்கள். இந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது என ஆவேசப்படுகிறார், பிரதமர் மோடி. மதத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தக் கூடாது என நடுநிலையாளர்கள் போல வாதிடுகிறார்கள், ஆர்.எஸ்.எஸ்.-இன் அல்லக்கைகள்.

இந்து பயங்கரவாதி சாத்வி பிரக்யா சிங்

ஆனால், முசுலீம்கள் விடயத்திலோ தீவிரவாதம், பயங்கரவாதங்கள் குறித்த இந்த நியாயங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது சங்கப் பரிவாரம். “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல; ஆனால், தீவிரவாதிகள் அனைவரும் முசுலீம்களாக இருக்கிறார்கள்” எனக் குதர்க்க நியாயம் பேசி, முசுலீம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம், பயங்கரவாதத்தோடு முசுலீம் மதத்தைத் தொடர்புபடுத்துவதற்குத் தயங்காத சங்கப் பரிவாரமும் அவர்களது ஆதரவாளர்களும் இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவே முடியாது என வாதிடுகிறார்கள்.

தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்ட சஜ்ஜித், தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, பீதியில் உறைந்து போன தனது மனைவியைத் தேற்ற முயன்று வருகிறார். சஜ்ஜித் மட்டுமல்ல, பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி முசுலீம்கள், செய்யாத குற்றத்திற்குப் பல பத்தாண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு, அதற்குப் பிறகு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட பிறகு, நடைப் பிணங்களாக காலந்தள்ள வேண்டியிருக்கிறது. நேர்மையற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் தண்டிக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கக்கூட நீதிமன்றங்களும் அரசும் மறுத்து வருகின்றன.

ஆனால், மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரவாத வழக்கை எதிர்கொண்டுவரும் இந்து பயங்கரவாதியான சாத்வி பிரக்யா சிங்கோ போபால் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பா.ஜ.க.வால் நிறுத்தப்பட்டிருக்கிறார். இத்தகைய அநியாயத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற தார்மீக எண்ணம்கூட இன்றிப் பெரும்பான்மையான இந்துக்கள் இந்த விடயத்தைக் கடந்து போகிறார்கள். சட்டப்படி இல்லையென்றாலும், தார்மீக அடிப்படையிலாவது பிரக்யா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதைத் திரும்பப் பெறுங்கள் எனக் கூறும் மனதிடமின்றி, இந்திய அதிகார அமைப்புகள் அறவுணர்ச்சியை இழந்து நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து பயங்கரவாதத்தை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்குப் பெரும்பான்மையான இந்துக்கள் ஆட்பட்டிருப்பதை பிரக்யா சிங்கின் போட்டி உள்ளிட்ட பல விடயங்கள் அடுத்தடுத்து எடுத்துக்காட்டுகின்றன. இந்த சகஜ மனநிலைதான் நமது காலத்தின் மிகப் பெரும் அபாயமாகும்.

– கீரன்

17 மறுமொழிகள்

 1. இஸ்லாமிய பிச்சைக்காரனை தீவிரவாதி ஆக்கிய ஊடகங்கள் தான் இந்து “பயங்கரவாதிகளை” இந்திய அரசியலின் உச்சியில் அமர்த்துகிறது….
  இவைகள் தொடரே செய்யும்….

 2. வினவு சந்தடி சாக்கில் கம்யூனிச பயங்கரவாதத்தை மூடி மறைக்கிறார்கள்

 3. அப்பாவியையும் பயங்கரவாதியையும் தீர விசாரிக்காமல் எப்படி கண்டுபிடிப்பது?

  அதுதவிர இலங்கை ISIS பயங்கரவாதிகள் சிலர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கும் கேரளாவின் கொச்சினுக்கும் அடிக்கடி விசிட் அடித்திருப்பதும் அங்கே சில குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் இலங்கை புலனாய்வு துறையால் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ராணுவ தளபதியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இலங்கை ஜமாத் அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு ஜமாத் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருப்பது பொதுமக்களான எங்களுக்குமே தெரியும்.

  எதற்கெடுத்தாலும் RSS கண்ணாடியை மாட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக இருக்காமல் சொந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டியது உங்களினதும் கடமை இல்லையா?

  ISIS, RSS, LTTE என எல்லா பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டியது, எதற்காகவும் நியாயப்படுத்த முடியாதது. இந்தியாவில் RSS பயங்கரவாதிகளை உருவாக்கியது இஸ்லாமும் கிறிஸ்தவமும் தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

   • நான் இந்தியாவில் RSS பயங்கரவாதிகளை உருவாக்கியது முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் என்று தான் சொல்லியிருக்கிறேன்,
    RSS ஐ உருவாக்கியது அவர்கள் என்று சொல்லவில்லை.

    இலங்கையில் பவுத்தர்களையும் இந்தியாவில் இந்துக்களையும் உசுப்பேற்றி பயங்கரவாதிகளாக மாற்றியது இவர்கள் தான்.
    பாம்பு பயத்தினால் தான் கடிக்கிறது. அதுபோல இதுவும் தங்களை அழித்து விடுவார்கள் என்ற பயத்தினால் உருவான உளவியல் சிக்கல் என்று நினைக்கிறேன்.

 4. இஸ்லாமும் கிறிஸ்தவமும்தான் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்கியதாக ஒற்றை வரியில் கொளுத்திப் போட்டுச் செல்லும் நண்பர் ராஜ்ஸ்ரீ, அதற்கான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு விவாதிக்க முன்வருவாரா? உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் தோற்றம், காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை மதரீதியாகச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அதன் வழியாக, காலனிய ஆட்சி/ஆட்சியாளர்களின் திரைமறைவு நண்பனாக ஆர்.எஸ்.எஸ். வேலை செய்தது.

  பாபர் மசூதி இடிப்புக்கு முன்பே இந்தியாவில் முசுலீம் அடிப்படைவாதம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலால் சட்டவிரோதமாக அம்மசூதி இடிக்கப்பட்ட பிறகும், அதனைத் தொடர்ந்து முசுலீம்களுக்கு எதிரான மும்பய்க் கலவரத்தை சிவசேனா தலைமையில் இந்து பயங்கரவாதிகள், மாநில காங்கிரசின் ஆதரவோடு நடத்திய பிறகும்தான் இந்தியாவில் முசுலீம் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடங்கின என்பதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளன. இந்த வாதத்தை வைத்தால், செத்துப் போன சோ இராமஸ்வாமி தொடங்கி குருமூர்த்தி வரையிலான ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் அனைவரும் எத்தனை காலத்திற்கு பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினைதான் முசுலீம் பயங்கரவாதம் எனக் கூறிக் கொண்டிருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அதாவது, தமக்கு வழிந்தால் இரத்தம், அடுத்தவனுக்கு வழிந்தால் தக்காளிச் சட்னி என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள், உங்களைப் போன்ற அவர்களது ஆதரவாளர்களின் வாதம்.

  மேலும், கட்டுரையின் நோக்கம் முசுலீம் பயங்கரவாதம் இருப்பதை மறுப்பதல்ல. மாறாக, முசுலீம் பயங்கரவாதிகளைத் தண்டிக்கக் கோரும் இந்துக்கள் அனைவருமே இந்து பயங்கரவாதிகள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதைத்தான் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. அதேசமயம், இந்திய முசுலீம்களோ, தமது மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்திருக்கிறார்கள், வருகிறார்கள்.

  • //அதற்கான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு விவாதிக்க முன்வருவாரா? //
   வரலாற்று தகவல்கள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. ஏதாவதொரு சம்பவம் அந்த நேரத்து உந்துதலை முன்னிட்டு நடந்திருக்கலாம். வரலாற்று தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பிரச்சினையை விவாதிக்க முடியாது. இதில் இரு பாலாரின் உளவியலையும் ஆழமாக ஆராய வேண்டும்.
   இதில் முக்கியமான விடயம் இஸ்லாமியரின் மத சகிப்பின்மை. 99% முஸ்லிம்கள் பிழைப்பதற்காக வெளியில் ஒரு முகமும் அவர்கள் சமூகத்துக்குள் முற்றிலும் வேறுபட்ட ஒரு முகமும் வைத்திருக்கிறார்கள். உங்களை போன்ற நடுநிலைவாதிகள் தடுக்கி விழுவது இந்த பிழைப்புவாத முகத்தை பார்த்துதான்.
   புத்தகயாவுக்கும், திருப்பதிக்கும், வத்திகானுக்கும் யாரும் போகலாம், உங்களால்
   (அதாவது காஃபிர் என்றால்) குறைந்த பட்சம் மக்கா நகர எல்லைக்குள் நுழைய முடியுமா?
   ஆனால் இஸ்லாம் சகோதரத்துவத்தை போதிக்கிறது என்று காலம்காலமாக சொல்லும் பொய்யை நம்பவும் ஒரு கூட்டம் இருப்பது காலத்தின் கொடுமை!

   பவுத்தமும், இந்துமதம் என்று சொல்லப்படும் இந்திய மதங்களும் நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் இல்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் இரண்டும் தங்கள் மதங்களை கபளீகரம் செய்து விடும் என்ற பயத்தினால் தான் இந்த மக்கள் எதிர்வினையாற்ற தொடங்கினார்கள். RSS நீங்கள் சொன்ன காரணத்திற்க்காக தொடங்கப் பட்டிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் மக்களின் இந்த பயத்தை அவர்களின் இருப்பிற்காக பயன்படுத்தி கொண்டிருக்கலாம். இந்துக்களுக்கு தங்களை கபளீகரம் செய்ய துடிக்கும் சக்திகளை தட்டி கேட்க ஒரு ஆள் தேவைப்பட்டது, அதனால் இந்து RSS தீவிரவாதிகளை கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள். இது ஒரு ஆழமான உளவியல் சிக்கல்.

   //முசுலீம் பயங்கரவாதிகளைத் தண்டிக்கக் கோரும் இந்துக்கள் அனைவருமே இந்து பயங்கரவாதிகள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வதில்லை //
   இதற்கு நடுநிலைவாதிகள் என்று சொல்லும் உங்களை போன்றவர்களும் முக்கிய காரணம். இந்து தீவிரவாதத்தை எந்த பாரபட்சமும் இல்லாமல் கண்டிக்கும் நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டும் பூச்செண்டால் அடிக்கிறீர்கள். இந்த செயல் ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் மக்களை மேலும் வெறியூட்டுகிறது. நடுநிலைவாதிகள் முதலில் அவர்களுக்கு நம்பிக்கை வரும்படி நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள்.

   //இந்திய முசுலீம்களோ, தமது மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்திருக்கிறார்கள், வருகிறார்கள்.//
   யார் தண்டிப்பது? முதலில் அவர்கள் தான் தண்டிக்க வேண்டும். உலகத்தில் எங்காவது தண்டித்திருக்கிறார்களா? கண்கட்டி வித்தை தான் காட்டுகிறார்கள்!

   “உலகத்தில் எந்த தீவிரவாதியையும் சீர்திருத்தி விடலாம் முஸ்லீம் தீவிரவாதிகளை தவிர. எப்படி சீர்திருத்தி விட்டாலும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் அவன் மறுபடியும் தீவிரவாதி ஆகி விடுவான்” என்று எங்கள் நாட்டு சிங்கள மக்கள் ஆணித்தரமாக கூறுவார்கள்.
   இது இலங்கை மக்களின் பல ஆண்டுகால அனுபவம். ஆக தீவிரவாதம் இந்த சமூகத்துக்குள் இயற்கையாகவே இருக்கிறது (இதற்கும் ஆதாரம் கேட்பீர்களே? உலகத்தில் வெளிப்படையாக தீவிரவாதத்தில் ஈடுபடுவோரில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள் தான்). இதை அவர்கள் புரிந்து கொள்ள தயாராகவும் இல்லை, RSS கண்ணாடி போட்டிருக்கும் நடுநிலைவாதிகள் கண்டு கொள்வதுமில்லை.

   இஸ்லாமியரும் இந்திய கிறிஸ்தவர்களும் (இலங்கையில் கிஸ்தவர்கள் அந்தளவு மோசமில்லை) மத சகிப்பின்மையற்ற அடிப்படைவாதத்திலிருந்து வெளிவராத வரை இந்து, பவுத்த தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது.

   நான் நாத்திகவாதி, இதில் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. என் கருத்துக்களை சொந்த அனுபவத்திலிருந்து நடுநிலையாகவே எழுதியிருக்கிறேன்.

   • தன்னை நடுநிலைவாதி என்று சொல்லிக் கொள்ளும் ராஜ்ஸ்ரீயே இத்துணை தூரத்திற்கு இந்து, பவுத்த பயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்க முடியுமென்றால், அம்மதங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகளை நினைத்தாலே ஈரக்குலை நடுக்கம் ஏற்படுகிறது.

    ஆர்.எஸ்.எஸ்.வேறு என்றும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் வேறு என்றும் கூறும் உங்களது ஆராய்ச்சி அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. “நாதுராம் கோட்சேவுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை” என்று ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் கூறிவரும் மோசடிக்கும் உங்களது ஆராய்ச்சி முடிவுக்கும் எந்தவொரு வேறுபாடும் காண முடியாது.

    முசுலீம்களிடம் காணப்படும் மதச் சகிப்பின்மையைக் காட்டி இந்து மதத்தைப் புனிதப்படுத்திவிட முடியாது. இந்தியக் கிராமங்கள் இன்னமும் ஏன் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கின்றன? சாதி பாராமல் திருமணம் செய்து கொள்ளும் இளம் காதல் தம்பதிகள் ஆணவக் கொலை செய்யப்படுவது ஏன்? சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வெறியாட்டம் நடத்தியது ஏன்? இவையெல்லாம் சாதி இந்துக்களின் சகிப்புத்தன்மையையா எடுத்துக் காட்டுகின்றன?

    காஃபிர்கள் குறைந்தபட்சம் மக்கா நகருக்குள் நுழைய முடியுமா எனக் கேட்கும் நீங்கள் இந்து சாதி சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாதவரா? முசுலீம்களாவது மற்ற மதத்தினரைத்தான் காஃபிர்கள் எனக் கூறி ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால், சாதி இந்துக்களோ தமது சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே கோவிலுக்குள் நுழைய விடாதபடி, கோவில் தேரை இழுக்கவிடாதபடி, உற்சவ மூர்த்தி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்குள் செல்ல முடியாதபடி ஒதுக்கி வைக்கும் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிக்கிறார்களே! கருவறைக்குள்ளோ பார்ப்பானைத் தவிர வேறு எந்த சாதியைச் சேர்ந்தவனும் நுழைந்துவிடாதபடி, சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறதே! அடுத்தவனைக் குற்றம் சுமத்துவதற்கு முன் நமது முதுகிலுள்ள அழுக்கையும் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா!

    பவுத்த மதம் நிறுவனமயமாக்கப்படவில்லை என்பது சாதிக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறப்படுவதைப் போன்ற மாபெரும் பொய். இந்து மதம் “நிறுவனமயமாகாமல்” இருப்பதற்குக் காரணம் அதன் சாதி அடுக்குதான். அம்பேத்கரின் வார்த்தைகளில் கூறினால், இந்து என்பது மதமேயல்ல, அதுவொரு குற்றவியல் தண்டனைச் சட்டத் தொகுப்பு.

    பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்துக்களிடமும், விவசாய விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் போண்டியாகி நிற்கும் இந்து விவசாயிகளிடமும், ஜி.எஸ்.டி.யால் தொழிலை மூடிவிட்ட இந்து சிறு தொழில் அதிபர்களிடமும் சென்று ஆர்.எஸ்.எஸ்.-ம் மோடியும் உங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்று கூறிப் பாருங்கள்; உங்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனிச் சிறப்பாக இருக்கும்.

    இஸ்லாமியரும் இந்திய கிறித்தவர்களும் மதச் சகிப்பின்மையற்ற அடிப்படைவாதத்திலிருந்து வெளிவராத வரை இந்து, பவுத்த தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்பது இந்து, பவுத்த தீவிரவாதங்களுக்கு வக்கலாத்து வாங்கும் வாத முறையாகும். இந்து, முசுலீம், கிறித்தவ மத பயங்கரவாதங்கள் அனைத்தும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. ஒன்று இல்லாவிட்டால், மற்றொன்று இருக்க முடியாது. இந்து, முசுலீம் பயங்கரவாதங்களுக்கு எதிராக, மதச்சார்பின்மை அடிப்படையில் மக்களைத் திரட்டிப் போராடுவதுதான் இம்மத பயங்கரவாதங்களை ஒழிக்கும் வழியாகும். மாறாக, முதலில் ஒன்றை ஒழித்துவிட்டு, மற்றொன்றை அடுத்து ஒழிக்கப் போராடுவது என்பது மோசடியேயாகும்.

    இறுதியாக, உங்களை நீங்கள் நாத்திகவாதி என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நகர்ப்புறங்களில் வாழும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாகப் பார்ப்பனர்கள், “இப்பொதேல்லாம் யார் சார் சாதி பார்க்கறாங்க?” என வயிற்றெரிச்சலை மறைத்துக்கொண்டு நடிப்பார்கள். அது போன்றதுதான் உங்களது நாத்திக முகமூடியும்.

    1

    • மாறு வேஷத்தில் வந்த நீங்கள் வடிவேலு போல கொண்டையை மறைக்க மறந்துட்டீங்க! நீங்கள் எந்த வேஷம் போட்டாலும் முஸ்லீம் அடிப்படைவாதிகளையும், நடுநிலை வேஷம் போடும் அடிவருடிகளையும் இரண்டு வார்த்தை பேசும் போதே கண்டுபிடித்து விட முடியும். TIT FOR TAT இதுதான் நீங்கள் கையாளும் தந்திரம். அதெல்லாம் இப்போ எங்களுக்கு அத்துப்படி!
     இந்துக்கள் எப்போதும் எங்கள் மதம் சகோதரத்துவத்தை போதிக்கிறது என்று சொல்லவேயில்லை, அது புனிதமானது என்றும் நான் சொல்லவேயில்லை. அதனால் அவனிடம் நாங்கள் கேட்கும் கேள்விகள் வேறு விதமானவை.

     இந்த கேள்விகள் சகோதரத்துவ மதத்தை பின்பற்றுவதாக சொல்லும் உங்களுக்கானவை:

     முஸ்லீம் பெண்கள் சுஃபி முஸ்லீம் பள்ளிவாசல்களை தவிர வேறெந்த பள்ளிவாசல்களுக்குள்ளும் நுழைய அனுமதி உண்டா?

     சகோதரத்துவ மதத்தை பின்பற்றும் முதுகில் அழுக்கில்லாதவனிடம் கேட்கிறேன், மக்கா நாகர எல்லைக்குள்ளாவது முஸ்லிமல்லாதவன் நுழைய முடியுமா?

     பைபிளையோ, பகவத் கீதையையோ, திரிபிடகத்தையோ எல்லோரும் தொடலாம், வாசிக்கலாம். முஹம்மது அரபி மொழியில் எழுதிய குரானை முஸ்லிமல்லாதோர் தொடவேணும் முடியுமா?
     (மொழி பெயர்ப்பு இருக்கிறது படித்துகொள்ளுங்கள் என்று காதில் பூ சுத்த வேண்டாம், யாரையுமே தொடவிடாமல் நீங்களே திருகுதாளம் போட்டு மொழிபெயர்த்த புத்தகத்தை யாரால் நம்ப முடியும்?)

     முடிவாக, இஸ்லாமிய தீவிரவாதத்தை விட மாற்று இன, மத மக்களை அச்சப்பட வைப்பது வத வத என்று குடும்ப கட்டுப்பாடில்லாமல் பெருகும் முஸ்லீம் சனத்தொகை தான். இந்த சனத்தொகை பெருக்கத்தை ஏதோ இஸ்லாம் உலகத்தில் வேகமாக பரவுவதாக முஸ்லிம்களால் சூட்சுமமாக கதை கட்டி விடப்படுகிறது. இஸ்லாம் பரவ உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அண்மையில் இஸ்லாத்தில் சேர்த்தார்கள் என்று கேட்டால் பதிலே இல்லை! கேக்குறவன் எல்லாம் கேனையன் என்று நினைப்பு!

     • //முஸ்லீம் பெண்கள் சுஃபி முஸ்லீம் பள்ளிவாசல்களை தவிர வேறெந்த பள்ளிவாசல்களுக்குள்ளும் நுழைய அனுமதி உண்டா?//
      Yes they can go any mosque, even Makkah and Madinah. In the time of prophets all women use to pray in the masjid itself, for women Islam #allows to pray in the house too.

      //பைபிளையோ, பகவத் கீதையையோ, திரிபிடகத்தையோ எல்லோரும் தொடலாம், வாசிக்கலாம். முஹம்மது அரபி மொழியில் எழுதிய குரானை முஸ்லிமல்லாதோர் தொடவேணும் முடியுமா?//

      Of course you can, someone has given wrong information, or as usual you are talking about something you are not aware completely.
      No one owns the Quran its belongs to whole universe.

      Islam is not a religion its a ‘way of life’ (In Tamil it is said not as ‘Madam’ but ‘Maarkkam’) , just saying I am a Muslim doesn’t make you a Muslim. If you travel in the way its says then you are, without following its teaching you cannot be a Muslim. Thats why it s been always said to know Islam study the Quran and Hadeeth (The life of Muhammed (PBUH).)

      this s not for you the pervert Rajshree_lk. but for the people reading these comments

      • எங்கள் நாட்டு சிங்கள அறிவுஜீவி ஒருவர் சொன்னார்:
       Naturally muslims are clever in convincing anything with talk. Because they are traders! அவர் வாயில் சர்க்கரையை அள்ளிக்கொட்ட வேண்டும்.

       நான் என்ன வீட்டுக்குள் பிரார்த்திக்க அனுமதி உண்டா, மக்கா மதீனாவுக்கு போக அனுமதி உண்டா என்றா கேட்டேன். இந்த நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு உள்ளே முஸ்லீம் பெண்கள் நுழைய முடியுமா என்று தானே கேட்டேன்?
       எங்கள் இலங்கை நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அந்த புத்தகத்தை, அவர்களை தவிர வேறு யாரையும் தொடக்கூட விடமாட்டார்கள். ஏன் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கிறதா?

       இஸ்லாம் இத்தனை சிறந்த மார்க்கம் என்றால் ஏன் உலகத்தில் 90% தீவிரவாதிகள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள்? இலங்கையில் கூட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சுங்கவரி ஏய்ப்பு போன்ற சமூக விரோத செயல்களில் முஸ்லிம்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்!

      • “மக்கா நாகர எல்லைக்குள்ளாவது முஸ்லிமல்லாதவன் நுழைய முடியுமா? ” என்று சகோதத்துவ மதத்தவரிடம் இன்னொரு கேள்வியும் கேட்டிருந்தேன், அதற்கு பதிலையே காணோம்! இதற்கும் ஏதாவது சப்பைக்கட்டு இருக்குமே? எங்கே எடுத்து விடுங்கள் பார்ப்போம்!

 5. முஸ்லிம்களை விடுங்கள். அவர்கள் பொருளாதாரத்தில் வலிமையாக இருப்பவர்கள். தாழ்த்தப்பட்ட சமூகங்கள் என சொல்லிக்கொள்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன யோக்கியமா? நீட் தேர்வை காரணமாக வைத்து தற்கொலைக்கு தூண்டப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட அரியலூர் அனிதாவின் தந்தைக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி எதற்கு ஐந்து உருப்படிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் கேள்வி எழுப்பிவிடக் கூடாது. தப்பித்தவறி அப்படி கேள்வி எழுப்பி விட்டால் உங்களுக்கு சாதி வெறியன், சமூகநீதிக்கு எதிரானவன், பார்ப்பன அடிவருடி முதலிய பட்டங்கள் தாராளமாய் வழங்கப்படும். ஆகவே இந்த தளத்தில் கருத்துக்களை பதியும் போது இந்த மாதிரியான பதில்களை எதிர்பார்த்தே கருத்து பதிய வேண்டும் என்பதை சகோதரி நினைவில் கொள்ள வேண்டும்.

  • பெரியசாமி சார்,
   நீட்டை எப்பிடி பல பின்னூட்டங்களிலும் லாவகமாக நுழைச்சுருரீங்க.
   அநேகமா நீங்களும் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்தவராகத்தான் இருப்பீங்க. வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்த முதல் தலைமுறை கிராமவாசியாகவும் இருக்கக்கூடும். இருந்தும், நீட்டை இவ்வளவு தாங்கிப்பிடிப்பதற்கு அது அப்படியென்ன சமூகநீதியை நிலைநாட்டுது?

  • Mr.Periyasaamy, சமூகத்தில் தாழ்ந்த மட்டத்தில் இருப்பவர்களுக்கு இதுகுறித்த போதிய கல்வியறிவு இருப்பதில்லை, கடந்த யுத்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்தவர்களும் மருத்துவ வசதி குறைபாட்டால் பல குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள், இப்போது போதிய மருத்துவ வசதிகள் இருப்பதால் அப்படி நடப்பதில்லை. நீங்கள் நான் ஏதோ தவறாக எழுதியதாக நினைக்கிறீர்கள். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் பெரும்பான்மையினர் இந்த சனத்தொகை பெருக்கத்தை மிகுந்த அச்சத்துடன் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்போது இலங்கையில் முஸ்லிமல்லாத பொதுமக்கள் தரப்பிலிருந்து அரசாங்கத்திற்கு இதுகுறித்து மிக பலமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதாவது சீனாவை போல கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால் இந்த முஸ்லீம் சனத்தொகை பெருக்கம் அவர்களின் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிர்காலத்தில் மிக பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அஞ்சுகிறார்கள்.
   கீழேயுள்ள கருத்துரையை ஒரு youtube தலத்தில் ஒரு இந்தியர் தெரிவித்திருந்தார். இது எனதும் சொந்த அனுபவம் என்பதால் இங்கே பகிர்கிறேன். இலங்கை முஸ்லிம்கள் தீவிரமாக பின்பற்றுவது இந்த மூன்றாவது முறையைத்தான்.
   There are three types of Muslims.
   1. Abuse, attack and convert them by force. (many of them belong to this type)
   2. Be nice, loving and convert them lovingly. (few belong to this type).
   3. Dont care about converting, but breed more children and become a majority.(most belong to this type) The end goal is the same.

 6. அன்பரே
  நான் நீட்டை தாங்கி பிடிக்கவில்லை. நம்முடைய மாநில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்துக்காக நம்முடைய மாநிலத்தின் பள்ளிக் கல்வியையும் உயர் கல்வியையும் எந்த அளவுக்கு கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை சொன்னேன். அதனால் எந்தெந்த வகையில் நம்முடைய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அவமானப்படுகிறார்கள் என்பதையும் விளக்கினேன். நீங்கள் சொல்வது மாதிரி நான் கிராமப்புறத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். என்னுடைய உயர்கல்வியின் போது ஒரு மத்திய அரசு உயர் கல்வி நிறுவனத்தில் பார்ப்பனிய கலாச்சாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவன். எப்போதும் ஒரு வகையான விசனத்தோடு தான் இருக்க வேண்டியுள்ளது. இந்தத் திராவிட சமூகநீதி பேசும் அரசியல்வாதிகள் மாதிரி மோசமானவர்கள் கீழ்த்தரமானவர்கள் இந்தியாவில் எங்கும் இல்லை என உறுதியாக சொல்லலாம். தங்களுடைய தனிப்பட்ட சுயநலத்துக்காக நம்முடைய மாநிலத்தின் எதிர்காலத்தையே சீரழித்து வைத்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் அவர்கள் தான் மத்தியில்ஆட்சிக்கு வருவார்கள் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. அதை நினைத்தால் இன்னமும் மனம் சங்கடப்படுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க