மெரிக்கா கால் பதிக்கும் இடங்களில் அமைதி கெடுவதும், உள்நாட்டுப் போர் நிலவுவதும் அதைத் தொடர்ந்து மக்கள் பஞ்சம், பசி, பட்டினி, நோயால் வாடுவதும் சகஜமாகிவிட்டது.

குறிப்பாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இவர்களின் ஆக்கிரமிப்பால் சிரியா, ஈராக், ஏமன், லிபியா தொடங்கி இந்தியப் பகுதியை ஒட்டியுள்ள ஆப்கானிலும் அதன் பாதிப்புக்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

போரினால் சில பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நாடுகளில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் ஏதாவதொரு குறைபாட்டுடன்தான் பிறக்கிறது. பிறந்த பிறகாவது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதி என்றால் அதுவும் கிடையாது.

ஆப்கானிஸ்தானில் தற்போது 6 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மருத்துவ சிகிச்சை இல்லாததாலும், ஊட்டச்சத்து குறைபாடு நிலவி வருவதாலும் குழந்தைகளின் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து நிலவிவரும் உள்நாட்டுப் போர், அதன் காரணமாக நிலவிவரும் பஞ்சம், சுகாதாரமான குடிநீர் பற்றாக்குறை, தாய்மார்களிடையே நிலவும் விழிப்புணர்வுக் குறைபாடு போன்றவைதான் நிலைமை மிகவும் மோசமடையக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நன்கார்கர் பகுதியில் மட்டும் சுமார் 15,000 பெண்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் பாதி பேர்தான் குணமடைந்துள்ளனர் என்கிறார் நன்கார்கர் மருத்துவமனையின் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் மக்கீம் ஷா மியாக்கில்.

ஆப்கானில் இப்படி நடப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல என்றாலும், மிக மிக மோசமான ஊட்டச்சத்து குறைபாடுகளால் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பது இம்முறைதான். ஏனென்றால் நிலவிவரும் போர்ச்சூழலில் பஞ்சமும் சேர்ந்து கொண்டு நிலைமையை மோசமாக்கிவிட்டது என்கிறார் யூனிசெஃப் நிறுவனத்தின் தலைமை தொடர்பு அதிகாரி ஆலிசன் பார்க்கர்.

படிக்க :
♦ ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்
♦ 24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !

ஊட்டச்சத்து குறைபாடு உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே ஏற்படவில்லை; சுகாதாரமற்ற குடிநீர், வாழ்நிலைமைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தி வருவதும் பிரதான காரணங்களாகின்றன என்கிறார் பார்க்கர்.

”நிலைமையைக் கையாளுவதற்கு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி தேவைப்படும் நிலையில் உதவி செய்யும் நாடுகளிலிருந்து போதிய நிதி அனுப்பப்படாததால் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. இங்குள்ள நிலைமை எல்லாருக்கும் புரியத்தான் செய்கிறது ஆனால் உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. யாரிடமிருந்தாவது உதவி கூடிய விரைவில் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார் பார்க்கர்.

இயற்கை வளங்களுக்காகவும், சந்தைக்காகவும் ஏகாதிபத்தியங்களுக்கிடையில் நடக்கும் கழுத்தறுப்பு, ஆக்கிரமிப்புப் போரின் காரணமாக பல நாடுகளிலும் பஞ்சம், பட்டினி நிலவுகிறது. வெனிசுலா போன்ற நாடுகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பற்றாக்குறை அந்நாட்டு மக்களை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டாமல், இத்தகைய நிவாரணங்கள் மூலம் தீர்வு கிடையாது!


வரதன்
நன்றி : ஆர்.டி  

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க