கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !

கை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.

0

கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து, காவி கும்பல் தாக்கும் காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  கடந்த ஜூன் 1-ம் தேதி, இராஜஸ்தான் மாநிலம் பாலியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

கை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.

சம்பவம் நடந்து நான்கைந்து நாட்களுக்குப் பின், சிறுவனை தாக்கிய நால்வரை போலீசு கைது செய்துள்ளது.  இது அப்பட்டமாக காவி கும்பலின் சாதி வெறி தாக்குதல் என தெரிந்தபோதும், கோவில் பூசாரியின் மகளிடம் தலித் சிறுவன் தவறாக நடக்க முயன்றதாக பொய்ப் புகார் கொடுக்கச் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூசாரி அளித்த புகாரின் பேரில் கும்பல் வன்முறைக்கு ஆளான அந்தச் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறது போலீசு.

சிறுவன் கைது செய்யப்பட்டபோது, தான் சாதி வெறி கும்பலால் தாக்கப்பட்டது குறித்து அச்சிறுவன் எந்தவித புகாரையும் தெரிவிக்கவில்லை என்கிறது போலீசு. வைரலான வீடியோவை வைத்தே நால்வரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீசு கூறுகிறது.

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
♦ ‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !

காவிக் கும்பலின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்களில் தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தலித் அல்லது முசுலீம்கள் தாக்கப்படும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தாலும்கூட இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற காவி கும்பல் வேர் பிடித்திருக்கும் மாநிலங்களில் அவர்களின் கும்பல் வன்முறைகளை தடுக்கவோ, குறைக்கவோ முடிவதில்லை.

இந்து மதவெறிக் கும்பல் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஊடுறுவி, ஊறிப் போயுள்ளது. தேர்தல் மூலமாக இந்துமத வெறி அபாயத்திலிருந்து ஒருபோதும் இத்தேசத்தை மீட்க முடியாது என்பதை இச்சம்பவம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.


கலைமதி
நன்றி: தி க்விண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க