பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, இந்துத்துவ குண்டர்களுக்கு கொலை பாதகங்களைச் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கள் குடித்த குரங்காக, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தங்களது தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது இக்கும்பல்.

சம்பவம் 1:

பிரக்யா சிங்குடன் சுபம் சிங் (தோளில் காவித் துண்டு அணிந்தவர்)

மத்தியப் பிரதேசம், செனாய் பகுதியில் மே 22 அன்று பசு பாதுகாப்பு குண்டர்கள், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறி சுபம் சிங் தலைமையிலான இந்துத்துவ கும்பல் இம்மூவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. முதலில் ஒரு இளைஞரை இழுத்துப் பிடித்துக் கொண்டு சுற்றி நின்று தாக்கும் கும்பல், அடுத்ததாக அந்த இளைஞரை ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்லக் கூறி மிரட்டி அவர் கையில் செருப்பைக் கொடுத்து அந்தப் பெண்மணியை அடிக்க வைத்துள்ளது. இதனைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்திய சுபம் சிங், போபாலில் போட்டியிட்டு வென்ற இந்து பயங்கரவாதி பிரக்யாசிங்கிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து செனாய் போலீசு வழக்கு பதிவு செய்து 5 பேரைக் கைது செய்துள்ளது. அதே வேளையில் தாக்குதலுக்கு ஆளான மூவர் மீதும் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

படிக்க:
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
♦ கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

சம்பவம் 2 :

குஜராத் வடோதரா மாவட்டத்தில் பாட்ரா(Padra) தலுக்காவில் உள்ள மஹுவத் (Mahuvad ) கிராமத்தைச் சேர்ந்த பிரவின் மாக்வான் என்பவர், தனது முகநூல் பதிவில் “உங்கள் பாஜக அரசு, வடோதரா மாவட்டத்தில் பாட்ரா(Padra) தலுக்காவின் மஹுவத் (Mahuvad ) கிராமத்தில் உள்ள ரான்சோதி கோவிலில், தலித் மக்கள் திருமணங்கள் நடத்த வாடகைக்கு இடம் கொடுக்க மறுக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு குழுமிய 200 முதல் 300 பேர் கொண்ட ஆதிக்கசாதிக் கும்பல் பிரவின் மாக்வான் மற்றும் அவரது மனைவியை கொடுரமாகத் தாக்கியுள்ளது.  இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமையே (20-05-2019) நடந்துள்ளது, ஆனால் புதன்கிழமை (22-05-2019) அன்றுதான் தாக்குதலுக்கு ஆளான பிரவின் மாக்வானாவின் மனைவி, தருலதா பென் தன்னையும் தனது கணவரையும் தாக்கிய குறிப்பான 11 நபர்கள் மீதும், அவர்களுடன் வந்த கும்பல் மீதும் போலீஸ் நிலையத்தில்  புகாரளித்துள்ளார்.

புகாரைப் பதிவு செய்த போலீசு, இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மாறாக, ஆதிக்க சாதி வெறியர்களின் ஆணைக்கிணங்க, பாதிக்கப்பட்டவரின் முகநூல் பதிவை காரணம்காட்டி இரு சமூகங்களுக்கிடையே மோதலைத் தூண்ட முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

சம்பவம் 3 :

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் கஞ்சன்பூர் பஞ்சாயத்தின், 11 வார்ட்டைச் சேர்ந்த அஹ்குனு மியா என்பவரின் மகன் முகமது காசிம். இவர் கும்பி கிராமத்தில் சலவை சோப்பு பவுடர் வியாபரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஞாயிறு (27.05.2019) அன்று தனது தொழில் சம்மந்தமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை ராஜிவ் யாதவ் என்பவர் வழிமறித்து அவரது பெயரைக் கேட்டுள்ளார்.

முகமது காசிம்

காசிம் தனது பெயரைக் கூறியதும் ராஜீவ் யாதவ், “பாகிஸ்தானுக்குப் போ..” எனக் கூச்சலிட்டு தனது கைத்துப்பாக்கியைக் கொண்டு காசிமை சுட்டுள்ளார்.

குடி போதையில் இருந்த ராஜீவ் துப்பாக்கியில் மீண்டும் தோட்டாவை நிரப்பி சுட முற்பட்டுள்ளார், அந்த இடைவெளியில் காசிம் தப்பித்து ஓடியுள்ளார். அதன் பின்னர் செரியா – பரைப்பூர் போலீசு நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார் காசிம்.

போலீசார் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் காசிம் கொடுத்த புகாரை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்துள்ளனர், ஆனால் இதுவரையிலும் தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

சம்பவம் 4 :

அரியானாவில் உள்ள குருகிராம் பகுதியில் கடந்த ஞாயிறு இரவு 10 மணியளவில் அங்குள்ள மசூதியில் தொழுகை முடித்து தனது கடைக்கு திரும்பிக் கொண்டிருந்த, முகமது பர்கத் என்ற இளைஞரை ஆறு மேற்பட்டோரைக் கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு அவரது குல்லாவைக் கழட்டச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது.

முகமது பர்கத்

அத்தோடு நில்லாமல், அவரை “பாரத் மாதா கி ஜே… ஜெய் ஸ்ரீ ராம்” என கூறச் சொல்லியுள்ளது அக்கும்பல்.

அத்தோடு நில்லாது ஆபாச வார்த்தைகளில் திட்டிக் கொண்டே “உன் வாயில் பன்றிக் கறியை திணிப்பேன்” என மிரட்டியிருக்கிறது அக்கும்பல்.

மேலும் சரமாரியாக பர்கத்தை தாக்கிய அக்கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்ற பர்கத்தின் சட்டையைக் கிழித்து கட்டைகளைக் கொண்டு அடித்துள்ளது அக்கும்பல்; பின்னர் அங்கிருந்த தங்களது பைக்குகளிலும்,  நடத்தும் – சாவகாசமாக் சென்றுள்ளனர் அவ்வன்முறையாளர்கள். அதன் பின் அவரது உறவினர் முர்துஜ் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் போலீசு நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

சம்பவம் 5 :

உத்திரப் பிரதேசம், பிஜ்னோர் பகுதியில் உள்ள பஸ்வான்பூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்த் வெற்றிபெற்ற தொகுதிக்கு உட்பட்டது என்பதால், இது பெரிய கலவரம் செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட சதிச் செயலாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேற்சொன்ன வன்முறை சம்பவங்கள் பலவற்றில் வழக்கு பதிவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவற்றுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பது ’உள்ளங்கை நெல்லிக்கனி’. அதே போல இனி நாடு முழுக்கவும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை. “எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?” என்பதுமட்டுமே தற்போது நம் முன் உள்ள கேள்வி !!

அருள்

செய்தி ஆதாரங்கள் :
♦ Muslim man beaten up in Gurugram, told to remove skullcap and chant Jai Shri Ram

♦ Violence Against Dalits,Muslims Reported From Across India

♦ Gujarat: Dalit couple attacked, thrashed by over 200 Upper caste men over Facebook post in Vadodara; case filed

♦ Man shot at in Begusarai after he reveals his ‘Muslim name’

3 மறுமொழிகள்

  1. ஒரு இந்துவும் கண்டிக்க மாட்டான். ஏன் தெரியுமா? உன்ன மாதிரி நாதாரிங்க சைடு எடுக்கறனாலதான்….. இதே காலகட்டத்துல இந்துக்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதும் நிறைய இருக்கு…… ஏன் முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டதே இருக்கு… ஆனா அதுக்கெல்லாம் உன்ன மாதிரி நாதாரிகளோட வாய் திறக்காது….. நடு நிலைன்னு சொல்ற நாய்களே பக்க சார்போட இருக்கும்போது, இந்துன்னு சொல்லிக்கிறவன் என்ன செய்வான்? பேசாமத்தான் இருப்பான்….. முஸ்லிம்கள் இந்துக்களை கொல்ல வந்தால் இந்துக்கள் சாவை தைரிமாக சந்திக்க வேண்டும்னு சொன்ன காந்திக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல….. எல்லாரையும் சமமா பாக்க தெரியாத உங்கள மாதிரி நாதாரி கூட்டம் இருக்கும்பொழுது, வெறித்தனமாக கூட்டு சேரும் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிச்சிக்கிட்டேதான் போகும்….. அது அநியாயத்துக்கு துணை போவதையும் தடுக்க முடியாது… கிருஸ்ணர் ராமரை கேவலமா பேசுவதை பேச்சுரிமைன்னு சொல்லிக்கிட்டே முகமதை பற்றி பேச கொட்டை சுருங்கி போகும் உங்களைப்போன்றவர்களால்தான்…. கடவுள் நம்பிக்கை இல்லாத இந்துவும் இந்துத்வ சித்தாந்தத்த ஏத்துக்க ஆரம்பிக்கறான். மொதல்ல மூஞ்ச கண்ணாடியில பாருங்கடே…. அப்புறமா அடுத்தவன் மூஞ்ச பாக்கலாம்.

    • முட்டா சங்கி Shan,
      ராமன் கிருஷ்ணன் டவுசரை நாங்கதாம்லே அவுக்குறோம்..! தமிழ்நாட்டுல எங்ககிட்ட வந்து உன் வீரத்தை காமிலே..! பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட இருக்குற கோபத்துல பொண்டாட்டிய அடிக்கிற கையாலாகாத புருசன் மாதிரி ஏம்லே வடஇந்திய அப்பாவி சகோதரர்களை அடிக்கிறத ஆதரிக்கிறே.. கோழையே..!

  2. Ange avanai adikkira Motherfuckers, indha pakkam konjam varattum. Naanga Beef than saappidrom. Enge, nalla appanukku porandhavana irundha Chennai kku vara sollu. Summa kidakkira poor peoplea , adikkira pottaipasanga. Inge Paanipoori vikkiravanum, pan masala vikkiravanaiyum adichu thorathuna indha pottaihalukku theriyum, Beef na ennannu.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க