நண்பர்களே…

பொ.வேல்சாமி
ழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கச் சொல்லுவது என்பதை “தமிழ்த் திணிப்பு” என்று சொல்ல வேண்டும் என்ற, ஒரு கொழுத்த முட்டாள்தனமான பதிவு சென்ற வாரம் முகநூலில் வந்ததாக நண்பர்கள் கூறினர். இத்தகைய முழு மூடர்களின் உளறல் கேனத்தனமானது.

இத்தகைய அபத்தமான அறிவுகெட்டதனமான கருத்துக்களின் பொருந்தாமையை விளக்குவது போன்ற ஒரு கட்டுரையை சிங்களப் பேராசிரியர் “விஸ்வநாத் வஜிரசேன”, “இருபத்துமூன்று நூற்றாண்டு கால சிங்கள – பௌத்த கலாசாரம்” என்ற நூலில் 1994-ல் எழுதியுள்ளார்.

இந்தக் கட்டுரை தமிழ்மொழிக்கும் சிங்களமொழிக்கும் உள்ள உறவுகளை ஆராய்கின்றது. முற்காலங்களில் வாழ்ந்த சிங்கள அறிஞர்களில் பலர் தமிழ் இலக்கண இலக்கியங்களை செம்மையாகப் படித்திருந்தனர் என்பதற்கு பல்வேறு சான்றுகளைத் தருகின்றார்.

“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.

இதுபோன்ற விரிவான விவரங்களை “சுனில் ஆரியரத்ன” என்ற சிங்களப் பேராசிரியர் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” என்ற சிங்கள நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இப்படிப்பட்ட பல அரிய செய்திகளைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரையில் கவனிக்கத்தக்க முக்கியமான அம்சம் என்பது “சிங்கள வினைச்சொற்கள் பற்றியும் பெயர்சொற்கள் பற்றியுமான தெளிவான அறிவினைப் பெற்றுகொள்வதற்கு தொல்காப்பியத்தை பயிலுவது இன்றியமையாதது” என்று அவர் கூறுகிற செய்தியாகும்.

இதுபோன்ற சிறந்த கருத்துக்களைக் கூறும் இந்தக் கட்டுரையை நண்பர்கள் படித்துப் பார்ப்பதற்கு உதவியாக இந்த லிங்கைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க