டோக்கியோ மேற்கு புறநகர் பகுதியான ஹிகாஷிமுராயமா, மதுபான விடுதி நடத்தி வருகிறார் 80 வயதான இந்தப் பெண். உணவுகள் பரிமாறுவது நிறுத்தப்பட்டாலும், பானங்கள் இன்னமும் வழிந்தோடியபடியே இருக்கின்றன.

***

தனது சொந்த நகரமான க்யூஷு-விலிருந்து 14 வயதில் நெரிமா நகரத்துக்கு ரயிலேறிவந்த இந்த மதுபான விடுதியின் உரிமையாளருக்கு வயது 83. ஃபிரெஞ்சு சமையல் கலைஞராக சப்போரா மற்றும் டோக்கியோவில் பணியாற்றிய இவர், 39 வருடங்களுக்கு முன் இந்த மதுபான விடுதியைத் திறந்தார். கடந்த ஆண்டு இதய பிரச்சினைகள் காரணமாக சில மாதங்கள் இந்த விடுதி மூடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிய இவர், வாரத்தின் ஆறு நாட்களை இங்கேயே கழிக்கிறார்.

***

அறுபது ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய கணவருடன் இணைந்து இந்த மதுபான விடுதியைத் தொடங்கினார் தற்போது 93 வயதாகும் இந்த மூதாட்டி. இப்போது தனியாக இருக்கும் இவர், பல இரவுகளில் விடுதியைத் திறந்து வைத்திருக்கிறார். டோக்கியோவிலிருந்து மேற்கில் இருக்கும் ஒகுடாமாவில் புதிதாக கட்டப்பட்ட அணைக்காக வசிப்பிடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, இவர் குடும்பத்திலிருந்து பிரிந்து அங்கேயே இருந்துவிட்டார். வாடிக்கையாளர் வரும்வரை வானொலியைக் கேட்டுக்கொண்டிருக்கும் இவர், யார் வந்தாலும் புன்னகையோடு பறிமாறக் காத்திருக்கிறார்.

***

சுஷி சமையல் கலைஞரான இவர், 60 ஆண்டுகளுக்கு முன்பு அடாச்சி நகரத்தில் உணவகத்தைத் தொடங்கினார். அவருடைய மகன் பெரும்பாலான பணிகளைக் கவனித்துக்கொண்டாலும், உணவு தயாரிப்பிலும் பானங்களை பறிமாறுவதிலும் இன்னமும் இவர் உதவிக் கொண்டிருக்கிறார்.

***

நகானோ-வின் அமைதியான பகுதியில் 1935-ம் ஆண்டு இந்த மீன் விற்பனையகம் தொடங்கப்பட்டது. தன்னுடைய குடும்பத் தொழிலை இப்போதும் நடத்தி வருகிறார் இவர்.

***

பாரம்பரியமாக காலணிகளை உருவாக்கும் இந்தக் கடை, அசாகுசா-வில் 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியவரின் கொள்ளுப் பேரன் இவர். ஆனால், இவர்தான் இந்தப் பணியை செய்யப்போகும் இறுதி நபர். இவர் ஓய்வுபெற்றால், இந்தத் தொழிலும் இவரோடு நின்றுவிடும்.

***

அகிமோனே பழைய மீன் சந்தை அருகே உள்ள, இந்த சிறிய காஃபி கடை வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். அதுவும் காலை 7 மணியிருந்து 9 மணிவரை மட்டுமேயான இரண்டு மணி நேரம் மட்டும்தான். ஆனால், 90 வயதான இதன் உரிமையாளர் இதுவே போதுமென சொல்கிறார்.

***

மற்றொரு காஃபி கடையின் இந்த உரிமையாளர், தன்னுடைய 80-களில் இருக்கிறார்.  அனைத்து நாட்களிலும் தன்னுடைய கஃபே-வை திறந்து வைத்திருக்கிறார். இந்தக் கடை இரண்டு அடுக்குகளால் ஆனது. தனியாக இதை நடத்துகிற இவர், நாள் முழுவதும் இரண்டு அடுக்குகளுக்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்.

***

பழைய டோக்கியோவின் கடைத்தெருவான மினோவா-வில் பாரம்பரிய வழிமுறைகளில் ஜப்பானிய காய்கறிகளை வைத்து ஊறுகாய் தயாரிப்பதை தினமும் செய்கிறார் இவர்.

***

92 வயதான இந்தப் பெண், தன்னுடைய குழந்தைகளுக்கான இனிப்பு மற்றும் பொம்மைக் கடையை ஹிகிபுனே-வில் வைத்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறார் இவர். இது தன்னை இளமையாக உணர வைப்பதாக கூறும் இவர், கணவரை அருகே வைத்திருப்பது அப்போதும் இப்போதும் உதவிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.

***

நெரிமா நகரத்தில் 40 ஆண்டுகளாக தன்னுடைய சிறிய மதுபான விடுதியை நடத்தி வருகிற இவருக்கு வயது 82.

***

அகிஹாபாராவில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் இந்தப் பகுதி வெகுவாக மாறிவிட்டது. ஆனால், உண்மையில் சிறிய கடையான இந்தக் கடை மட்டும் மாறவே இல்லை.

***

தொழிலில் ஐம்பது ஆண்டுகளாக உள்ள இந்த உரிமையாளரின் வயது 74. வாரத்தின் ஆறு நாட்களும் நாளின் எட்டு மணி நேரமும் கடை திறந்திருக்கும். அத்தனை பொழுதையும் சிரித்தபடியே கழிக்கிறார் இவர்!

***

கொமகோமில் உள்ள இந்தக் கடை மூடப்பட்டாலும், அதன் உரிமையாளர் தள்ளுவண்டியில் இறைச்சி உணவகத்தை நடத்திவருகிறார்.

***

வயதான ஜப்பானிய மக்கள் பணியாற்றுவதை உற்சாகமாகச் செய்தாலும், யுனோவில் உள்ள இந்த மனிதர், அவ்வளவு மகிழ்ச்சியாக காட்சியளிக்கவில்லை.

***

இடாபாஷியில் உள்ள தன்னுடைய சிறிய உணவகத்தில் கடந்த 46 வருடமாக வாரத்தின் ஆறு நாட்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் இவர். தன்னால் முடிந்தால் இன்னும் 46 ஆண்டுகள் இப்படியே பணி செய்வேன் என்கிறார்.

***

அகிஹாபாராவில் உள்ள பொருட்களால் நிறைக்கப்பட்ட மற்றுமொரு சிறிய கடை.

***

சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்பகுதிகளிலிருந்து தங்களுடைய பொருட்களை டோக்கியோவுக்கு பயணித்து வந்து விற்கும் பெண்களை காண்பது பொதுவாகக் காணக் கூடிய காட்சியாக இருந்தது. இப்போது அது அரிதாகிவிட்டது என்றாலும், யுனோவிலிருந்து பயணிக்கும் இந்த பெண், அப்படிப்பட்டவர்களில் இறுதியானவராக இருப்பார்.


கலைமதி
நன்றி : தி கார்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க