புல்லட் ரயில் திட்டத்திற்காக அழிக்கப்படவிருக்கும் மும்பை சதுப்பு நிலக்காடு!

டிசம்பர் 9-ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் 21,997 சதுப்புநில மரங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) அனுமதியளித்துள்ளது.

0

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மும்பை, தானே மற்றும் பால்கர் ஆகிய இடங்களில் உள்ள 21,997 சதுப்பு நிலங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) மும்பை உயர் நீதிமன்றம் டிசம்பர் 9 ஆம் தேதியன்று அனுமதி அளித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி அபய் அஹுஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஏழு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, திட்டத்தின் “பொது முக்கியத்துவம்” காரணமாக, சதுப்புநில மரங்களை வெட்ட அனுமதி கோரி NHSRCL தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டது.

0-0-0

சதுப்புநிலங்கள் மழைவெள்ளத்தை உள்வாங்கிகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதை தடுக்கின்றன. கார்பன் உமிழ்வை தடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. சதுப்புநிலங்கள் மழைக்காடுகளை விட வளிமண்டலத்தில் இருந்து ஐந்து மடங்கிற்கும் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன.

படிக்க : இருக்கும் ரயில்களுக்கே நாதியில்லை இதில் புல்லட் ரயில் ஒரு கேடா ? முன்னாள் பாஜக அமைச்சர்

இந்நிலையில், அகமதாபாத் மற்றும் மும்பை இடையே அமைய உள்ள இந்த புல்லட் ரயில் திட்டம் ஜப்பான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பவுள்ளது. மணிக்கு 508 கிமீ செல்லும் அதிவேக ரயில் பாதையில் பயண நேரம் ஆறரை மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த திட்டத்திற்காக 2017 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக குறைந்தபட்சம் 54,000 சதுப்புநில மரங்கள் வெட்டப்படவுள்ளதாக 2019 ஆம் ஆண்டில் என்று கூறப்பட்டது. அப்போது மாநில போக்குவரத்து அமைச்சர் திவாகர் ராவ்டே, “வெட்டப்படும் மரங்களை விட ஐந்து மடங்கு மரங்களை அரசாங்கம் நட்டு, பாதிக்கப்படக்கூடிய உள்ளூர் மக்களுக்கு இழப்பீடு வழங்கும். குஜராத்தில் 724.13 ஹெக்டேர் தனியார் நிலமும், மகாராஷ்டிராவில் 270.65 ஹெக்டேரும் என மொத்தம் 1,379 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். பால்கர் மாவட்டத்தில் 188 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது, அதில் 2.95 ஹெக்டேர் மாநிலத்தின் தனியார் பேச்சுவார்த்தை கொள்கையின்படி வாங்கப்பட்டுள்ளது. தானே மாவட்டத்தில் 6,589 விவசாயிகளுக்கு சொந்தமான 84.81 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. மும்பையில், விக்ரோலியில், 1.1 லட்சம் கோடி ரூபாய் செலவில், 39.252 சதுர மீட்டர் தனியார் நிலத்தை அரசு வாங்கும்” என்று சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

இது தொடர்பான 2020-இல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம், NHSRCL-ஐ திட்டத்திற்காக வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி, NHSRCL சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரலாத் பரஞ்சபே மற்றும் மணீஷ் கேல்கர், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை 53,467-ல் இருந்து 21,997-ஆக குறைக்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

NHSRCL வெட்டப்படுவதற்கு முன்மொழியப்பட்ட மொத்த சதுப்புநில மரங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக நடப்படும். குறைவான மரங்கள் வெட்டப்பட்டாலும் எண்ணிக்கை குறையாது என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தது.

படிக்க : மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

மரங்கள் வெட்டப்பட்டபிறகு மீண்டும் நட்டால் வளரும் சாத்தியம் இருக்கிறதா என எவ்வித ஆய்வும் நடத்தப்படவில்லை. மரங்கள் வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் சமர்பிக்கப்படவில்லை என்று பாம்பே சுற்றுச்சூழல் நடவடிக்கை குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இம்மனுவை எதிர்த்து வாதிட்டது.

0-0-0

எனினும், டிசம்பர் 9-ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் 21,997 சதுப்புநில மரங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) அனுமதியளித்துள்ளது.

மகாராட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சதுப்புநிலக்காடுகளின் 21,997 மரங்கள் வெட்டுப்படுமானால் அது இயற்கை சமநிலையையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தி மாபெரும் பேரழிவை உருவாக்கும். இயற்கை வளங்களை அழித்தும், சுற்றுச்சூழலை அழித்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தியும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனிற்காக கொண்டுவரப்படும் திட்டமே இந்த புல்லட் ரயில் திட்டம்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க