மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மௌவா மொய்த்ரா. குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் போது மௌவா மொய்த்ரா உரையாற்றினார்.

நரேந்திர மோடி அரசின் அறுதிப் பெரும்பான்மையான வெற்றியின் ஆபத்து குறித்தும், இந்தியாவில் தென்படத் தொடங்கியுள்ள பாசிசத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் குறித்தும் மொய்த்ரா உரையாற்றினார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மௌவா மொய்த்ரா

‘வாழ்க’ முழக்கங்களுக்கு மத்தியில் நாடு எதிர்கொண்டுள்ள பாசிச நடைமுறைகளை எடுத்துரைத்த மொய்த்ராவுக்கு மாற்றுக் குரல்களை எழுப்புவோரிடமிருந்து ஆதரவு பெருகி வருகின்றது. அமெரிக்காவில் உள்ள ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் ஒட்டப்பட்டுள்ள ஒரு சுவரொட்டியில் பாசிசத்தின் தொடக்க கால அறிகுறிகள் ஏழு சொல்லப்பட்டிருப்பதாக உரையாற்றத் தொடங்கினார் மொய்த்ரா.

“நான் பட்டியலிட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அந்த சுவரொட்டியில் சுட்டிக் காட்டப்பட்டவையே” என்ற மொய்த்ரா, பாசிசத்தின் ஏழு அறிகுறிகளைப் பட்டியலிட்டு அது எவ்வாறு இன்று நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

முதல் அறிகுறி :

இப்போது இங்கே சக்திவாய்ந்த மற்றும் தொடர்ச்சியான தேசியவாதம், எங்கள் தேசியப் பரப்பில் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது மேலோட்டமானதாகவும் இனவெறியுடனும் குறுகிய தன்மையுடனும் இருக்கிறது. இதற்கு பிரித்தாளும் இச்சை இருக்கிறது. ஒன்றிணைக்கும் விருப்பம் இல்லை. நாட்டின் குடிமக்கள் தங்களுடைய இல்லங்களிலிருந்து தூக்கியடிக்கப்பட்டு, சட்டவிரோத குடியேறிகள் என அழைக்கப்படுகிறார்கள்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழும் இந்தியர்களிடம், ஒரு காகிதத்தைக் கொண்டு இந்தியர்கள்தானா என நிரூபிக்கச் சொல்கிறார்கள். ஆனால், இதே நாட்டில் உள்ள அமைச்சர்களால் தாங்கள் இந்தக் கல்லூரியில்தான் பட்டம் பெற்றோம் என்பதை நிரூபிக்க முடியவில்லை. ஆனால், வெளியேற்றப்பட்ட ஏழை மக்களிடம் நீங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரத்தை மட்டும் நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

படிக்க:
பாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது ?
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

இரண்டாவது அறிகுறி :

ஆளுகையின் ஒவ்வொரு மட்டத்திலும் மனித உரிமைகள் மீதான பெரும் அவமதிப்பு ஊடுருவி வருகிறது. 2014-19 வரை வெறுப்புணர்வின் காரணமாக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை பத்து மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு இணைய வர்த்தக நிறுவனத்தின் தொடக்ககால மதிப்பீட்டைப் போன்றது இது. ராஜஸ்தானின் பெக்லு கான் முதல் ஜார்கண்டின் தப்ரேஸ் அன்சாரி வரை இந்தப் பட்டியல் நிறுத்தப்படவே இல்லை.

மூன்றாவது அறிகுறி :

இன்று வெகுஜன ஊடகங்களின் மீது கற்பனைக்கு எட்டாத அடிபணிதலும் கட்டுப்பாடும் உள்ளது. இந்தியாவில் உள்ள ஐந்து மிகப்பெரிய செய்தி ஊடகங்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நாட்டின் ஒரு மனிதருக்கு கடன்பட்டிருக்கிறது. ஆளும் அரசின் கொள்கைகளை பரப்புவதற்கென்றே டிவி சானல்களின் பெரும்பாலான ஒளிபரப்பு நேரம் ஒதுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குறித்த செய்திகள் வெட்டித் தள்ளப்படுகின்றன.

அரசுக்கு எதிரான செய்திகளை கண்காணிப்பதற்கென்றே மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 120-க்கும் அதிகமான நபர்களை நியமித்திருக்கிறது.

நான்காவது அறிகுறி :

தேசிய பாதுகாப்பு குறித்த அதீத ஆர்வம் – எதிரிகளை கண்டறிவதில் உள்ள ஆர்வம். நாம் குழந்தைகளாக இருக்கும்போது அம்மாக்கள் இதை செய்யாதே, அதைச் செய்யாதே இல்லையென்றால் கருப்பு பூதம் வந்துவிடும் என பயமுறுத்துவார்கள். அதுபோலவே இப்போது இந்த நாட்டில் வாழும் நாமும் பெயர் தெரியாத, பெயர் இல்லாத கருப்பு பூதகங்களால் பயமுறுத்தலுக்கு ஆளாகிவருகிறோம். அனைத்து இடங்களிலும் பயம் பரவிக்கொண்டுள்ளது. இராணுவத்தின் சாதனைகள் அனைத்தும் ஒரு நபரின் பெயரில் கைப்பற்றப்படுகிறது. இது சரியா?

ஐந்தாவது அறிகுறி :

அரசும் மதமும் இப்போது இந்த நாட்டில் பின்னிப் பிணைந்துள்ளன. நான் இதுகுறித்து பேச வேண்டுமா என்ன? தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றின் மூலம் ஒரு குடிமகனாக இருப்பதன் பொருளை நாங்கள் மறுவரையறை செய்துள்ளோம் என்பதை நினைவுபடுத்தும் அவசியம் இருக்கிறதா என்ன? குடியேற்றத் தடுப்பு சட்டங்களின் இலக்காக ஒரே ஒரு சமூகம் மட்டுமே இருக்கிறது என்பதை உறுதி செய்கிறோம்.

பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இந்த நாட்களில் 2.77 ஏக்கர் நிலத்தின் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். மீதியுள்ள இந்தியாவில் உள்ள 812 பில்லியன் ஏக்கர் நிலம் குறித்து எவரும் ஆர்வம் கொள்ளவில்லை.

ஆறாவது அறிகுறி :

இது மிகவும் ஆபத்தானது. அறிவுஜீவிகள் மற்றும் கலை மீது இப்போது முழுமையான அவமதிக்கும் போக்கு உள்ளது. அனைத்து எதிர்ப்புகளும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. தாராளவாத கல்விக்கும் அறிவியல் ஆர்வத்துக்கும் நிதி குறைக்கப்படுகிறது. நாம் செய்யும் அனைத்தும் இந்தியாவையும் இருண்ட காலத்துக்கு மீண்டும் இழுத்துச் செல்கின்றன. கேள்வி கேட்பதைக் கூட உங்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

ஏழாவது அறிகுறி :

நம்முடைய சுதந்திரமான தேர்தல் அமைப்பில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு முக்கியமான அதிகாரிகளை தேர்தல் ஆணையம்  இடமாற்றம் செய்துள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் ரூ. 60 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம், ரூ. 27 ஆயிரம் கோடியை ஒரே ஒரு கட்சி செலவு செய்திருக்கிறது.

மௌவா மொய்த்ரா தனது அனல் பறக்கும் உரையின் மூலம், பாராளுமன்றத்தில் பாஜகவினரை வறுத்து எடுத்தது மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாகியிருக்கிறார்.


கலைமதி
செய்தி ஆதாரம்:
டெலிகிராப் இந்தியா 

9 மறுமொழிகள்

  1. இவ்வாறு எல்லாம் அறிவுப்பூரவமா பேசினால் புரிந்துக் காெள்ளக்கூடிய அளவுக்கு இருக்கிறார்களா ….?

    • நமது மணிகண்டன், வினவு கட்டுரையின் தலைப்பை மட்டுமே பார்த்துவிட்டு அறைகுறையாக புரிந்து கொண்டும், புரிந்து கொள்ளாமலும் அரைவேக்காட்டுத்தனமாக பதிலளிப்பதைப் போலத்தான் ஒட்டுமொத்த சங்கிகளும்.. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ..

      மொத்த சங்கிகளுக்கும் … ஒரு மணிகண்டன்….

  2. அவர் கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை பார்த்து சொல்லியிருப்பார், வினவு தவறுதலாக பிஜேபிக்கு எதிராக பேசுகிறார் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த பாசிஸ்ட் அறிகுறிகள் அத்தனையும் கம்யூனிஸ்ட்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் மிக பெரிதாக தெரிகிறது.

    • அப்படியா … எந்தக் கம்யூனிஸ்ட் / கிறிஸ்தவ மந்திரி படித்த பட்டத்தை இன்றுவரை காட்டக் கூட வக்கில்லாமல் இருக்கிறார் ?

      எனக்குத்தெரிந்து அப்படி ஒரே மந்திரி நமது ’புரதம’ மந்திரி நரேந்திர மோடி மட்டும்தான்… பாவம்… டீ ஆத்துனதுக்கெல்லாம் சர்ட்டிபிகேட் கேட்டா அந்தப் பயபுள்ள என்னதான் செய்யும் ?

      • டீ கூட ஆத்தவில்லை என்று முன்னாள் ஆர்.எஸ்.எஸ் .பேர்வழி ” தாெக்காடியாவாே ..நாெக்காடியாவாே ” கூறியதாக செய்தித்தாளில் படித்த ஞாபகம் …!

  3. பெரியாரு வாழ்க, அம்பேத்கர் வாழ்க, தமிழ் வாழ்க, திராவிடம் வாழ்கன்னு பாராளுமன்றத்துல எழுந்த முழக்கத்தால வடமாநிலத்த சேந்தவங்க பெரியார் பத்தின புத்தகம் வேணும்னு தமிழ்நாட்டுல உள்ள பதிப்பகத்திடம் கேக்குறாங்களாம். இருங்கடா வடக்கையும் வர்ரார்ரா பெரியாரு.

    • நெஞ்சில் பாலை வார்க்கிறீர்கள் சகோதரி..!
      இப்போதே பாராளுமன்றத்தில் வங்காள பெண் உறுப்பினர் “நாங்கள் திராவிடர்கள்” என்று முழங்கியிருக்கிறார்.

    • பெரியாரா ? யார் அந்த சைக்கோ ? ஒரு சைக்கோவை மற்ற சைக்கோக்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது இயல்பு தான்.

  4. அனைத்தையும் உள்வாங்கி செரித்த பாரத
    மாதாவினால் செரிக்கப் பெறாத மதமாக இஸ்லாம் உள்ளது என்றார் கோல்வாக்கர். பெரியாரும் சங்கிகள் உள்ளங்களில் குத்திய முள். கடந்த காலங்களில் நடந்தவைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என அடையாறு அறிவாளிகள் நினைத்தால் தமிழர் துயரங்களில் பொறுப்பேற்க முன்வர வேண்டும். நுனிப்புல் மேய்ந்துவிட்டு பொய்புரணி பேசுதல் இன்று உங்கள் பக்கம் இருப்பதாகத் தோன்றும் நாம்தமிழர் தம்பிகளாலேயே கெடுதல் நேரிடும். ஏனெனில் பெரியார் காலத்தில் பார்ப்பன எதிர்ப்பு மேலோங்கியிருந்தும் அவர்கள் யாரும் பாதிப்படைந்ததில்லை. நல்ல தலைவர்கள் இல்லையென்றால், வருங்காலம் துயரமிக்கதாக அமையும்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க