தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் மக்கள் தண்ணீர் இன்றி பரிதவிக்கின்றனர். வடக்கே தருமபுரி தொடங்கி தெற்கே திருநெல்வேலி வரை வறண்டு கிடக்கிறது தமிழகம்.
தண்ணீருக்காக ஐந்து மணிநேரம், ஆறு மணிநேரம் காத்திருந்தாலும் ஒரு குடம் கூட நிறைவதில்லை, எனக் கண்ணீர் மல்கக் குமுறுகின்றனர் கொட்டாம்பட்டி மக்கள். மக்களின் கண்ணீரைக் காசாக்கும் இரசவாதம் தெரிந்த, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இத்துயரத்திலும் பணம் பார்க்கும் அவலமும் நிகழ்கிறது என்பதுதான் கொடூரத்தின் சிகரம். இது ஏதோ ஒற்றை கிராமத்து பிரச்சினை இல்லை ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினை.
தண்ணீர் பஞ்சமும், இந்த அரசின் கையாலாகாத்தனமும் எப்படி வாழ்வின் அனைத்து அசைவுகளையும் பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம். செயலிழந்து போன அரசின் தோல்வியை துலக்கமாகக் காட்டும் இந்தக் காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…
இதையும் பாருங்கள்…
தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் பாடல் !