மிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழங்கள் உள்ளன. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகமும் ஒன்று. இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் சுமார் 800 வழித்தடத்தில் 3,500 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.

இதில் பணிமனை மேலாளர், உதவி பொறியாளர் உள்பட  உயர் அதிகாரிகளும், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்பட கீழ்நிலை தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஊழியர்களுக்கான மாத ஊதியம் அந்த மாதத்தின் இறுதி நாட்களில் (அதாவது 30 அல்லது 31 தேதிகளில்) வங்கி கணக்கில் சம்பளம் போடப்படும். ஆனால் இந்த மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகள் வங்கி விடுமுறை நாளாக இருந்ததால் சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 01.07.2019 அன்று சம்பளம் வழங்கப்படும் என்று ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆனால் இந்த மாத ஊதியத்தில் தற்போது 60 சதவீதம் மட்டும் வழங்குவதாகவும் மீதம் உள்ள 40 சதவீதம் 15 நாட்களுக்கு பின்பு வழங்குவதாகவும் அரசு தரப்பில் கூறி உள்ளனர்.

இந்த காரணத்தால் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் போக்குவரத்து ஊழியர்கள் திடிரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தியாகராய நகர் பணிமனை மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் பேசினோம்.

அப்போது அவர்கள் “ஒரு மாதம் உழைத்தற்கு ஊதியம் தர இந்த அரசு மறுக்கிறது. போக்குவரத்து கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எங்களை போன்ற கீழ்நிலை ஊழியர்களுக்கு தான் சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த மாத சம்பளத்தை வைத்து தான் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்க வேண்டும்.” என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

படிக்க:
ஒரு வரிச் செய்திகள் – 01/07/2019
♦ போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

தமிழகத்தில் உள்ள 7 போக்கு வரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. அதேபோல் சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எங்களுக்கு தான் சம்பளம் வழங்கவில்லை என்றனர். இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களும் கலந்துகொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை நிறுத்தத்தை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டதற்கு சம்பளம் இந்த நிமிடம் வழங்கிவிட்டால் பேருந்தை இயக்க தயாராக இருப்பதாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பளம் வழங்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள். எந்த காரணத்துக்காக சம்பளம் வழங்க வில்லை என்று கேட்டால் “கஜனாவில் காசு இல்லை..” என்கிறார்கள் என்று ஒரு ஓட்டுனர் தெரிவித்தார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (01-07-2019) மாலைக்குள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதாக கூறினார். இந்த தகவலை ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் தெரிவித்தபோது, இப்படித்தான அவர் கூறுவார். அதற்காக எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. சம்பளம் வழங்கினால் மட்டும் தான் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று கூறினார்கள்.

– மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்

1 மறுமொழி

  1. போக்குவரத்து தொழிலாளர்கள் நிலைைமையின் அரசியல் காரணத்தை மக்களிடம் கொண்டு சென்றால் தான் தீர்வு காண முடியும்.

    தீடீர் போராட்டம் எதிர்நிலைக்கு தள்ளிவிடும்,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க