பத்திரிகை செய்தி

நாள் : 02.07.2019

மூன்று (3) நாள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்.
( 02.07.2019, 03.07.2019, 04.07.2019 )

BSNL நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அத்துடன் நிதிநிலையைக் காரணம் காட்டி மறுக்கப்படுகிறது. மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களின் குடும்பத்தினர் பட்டினியாகக் கிடக்கின்றனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில், 5 ஒப்பந்த ஊழியர்கள் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். எனவே இனிமேல் இதுபோன்ற கொடுமை நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் இணைந்து 2/7/2019 முதல் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு M.ஜெயமுருகன் தலைமை தாங்கினார்.

கோரிக்கையை விளக்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு சி. பன்னீர்செல்வம், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி திரு முனியராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் திரு E. ராதாகிருஷ்ணன், BSNL, CCWF-ன்  அகில இந்திய சங்க நிர்வாகி தோழர் சி. பழனிச்சாமி மற்றும் முன்னணியாளர்கள் உரையாற்றினார்கள்.

படிக்க :
பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !
ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 150 பேர் முதல்நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

தகவல் : BSNL ஊழியர் சங்கம் &  தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தூத்துக்குடி.