திருப்பதியில் ஆந்திர ரயில்வே போலீசால் கைது செய்யப்பட்டு, பின்னர் தமிழக சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார் முகிலன். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசு, பின்னர் பாலியல் புகார் ஒன்றை வைத்து கைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் முகிலன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.
அதில் தான் ஸ்டெர்லைட் ஆதரவு ஆட்களால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாகவும், பல ஊசிகள் போட்டு மனநிலையை பாதிக்கச் செய்ய அவர்கள் முயன்றதாகவும் கூறியிருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து அவர் வெளியிட்ட சி.டி போலீசாருக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஏனென்றால் அந்த சி.டி-யின் மூலம் துப்பாக்கி சூடு நடத்திய போலீசின் குற்றம் பகிரங்கமாக; ஆதராப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்போதே சி.டி வெளியீடுக்கு பிறகு தனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியுள்ளார் முகிலன். அது போலவே அந்த வெளியீட்டு நிகழ்வு முடிந்ததும் காணாமல் போனார்.
தமிழகத்தின் ஜனநாயக சக்திகளின் முயற்சியால் இந்த பிரச்சினை நீதிமன்றம், மக்கள் அரங்கம் இரண்டிலும் கொண்டு செல்லப்பட்டது. தற்போது முகிலனை அவரது குடும்பத்திடம் ஒப்படைப்பதற்குப் பதில் சிறையில் அடைத்திருப்பது பல கேள்விகளையும் முகிலன் சொன்னது போல அந்தக் கடத்தல் மிரட்டல் நடந்திருக்கலாம் எனவும் யூகிக்க வைக்கிறது.
ஏனெனில் பாலியல் புகார் குறித்த வழக்கில் எந்த விசாரணையும் இல்லாமலே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதை விட அவர் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது பாரதூரமான விசயம். இதை ஏன் போலீசார் விசாரிக்கவில்லை என்றால், அவர்களுக்கும் இது தெரிந்தே நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இன்றைய கேள்வி:
முகிலன் காணாமல் போனதற்கு யார் காரணம்?
♣ ஸ்டெர்லைட் நிர்வாகம்
♣ தமிழக போலீசு
♣ பாலியல் பிரச்சினை
♣ தானே மறைந்து வாழ்ந்தார்
(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்)
டிவிட்டரில் வாக்களிக்க :
முகிலன் காணாமல் போனதற்கு யார் காரணம்?
* ஸ்டெர்லைட் நிர்வாகம்
* தமிழக போலீசு
* பாலியல் பிரச்சினை
* தானே மறைந்து வாழ்ந்தார்வாக்களியுங்கள் !
— வினவு (@vinavu) July 8, 2019
யூ-டியூப் :
எதுவும் தெரியாமல் அதாவது பொருண்மை இல்லாமல், எப்படி எது குறித்தும் யாரும் கருத்துக்கூற முடியும்? கட்டுரையில் சொல்லப்படுவதைப்போல, அவரே கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டிருந்தாலோ இருட்டறையிலேயே அடைத்துவைக்கப்பட்டிருந்தாலோ போதைப்பொருள் கொடுக்கப்பட்டிருந்தாலோ மனநிலை பாதிப்பு அடையும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். இதில் அவரே வந்து கூறினால்தவிர உண்மை வெளியாகாது என இருக்கையில், வாசகர்கள் தாமாக ஏதாவது ஒன்றைக் கருதிக்கொள்ளமுடியும்/வேண்டும் எனக் கருதுகிறீர்களா?
என்னமோ முகிலன் பேசுவது எல்லாம் உண்மை என்பது போல் சொல்கிறார்கள், சமூகவிரோதிகள் என்றைக்குமே உண்மையை பேசியதாக சரித்திரம் இல்லை, இவரின் பேச்சுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்க வேண்டும்… இவர் மீதான புகாரில் உண்மை இருந்தால் நீதிமன்றம் சட்டப்படி இவரை தண்டிக்க வேண்டும்.
தகாத உறவு தவறில்லை ன்னு ஹை கோர்ட் டே சொல்லிட்டே
அதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்… நீங்களோ நானோ அல்ல.
ஆமாம் நீதிமன்றங்கள் ஆளுக்கு தகுந்தார்போல்தான் தீர்ப்பளிக்கும்
நூல் இருந்தா ஒரு தீர்ப்பு, இல்லன்னா ஒரு தீர்ப்பு அதனாலதான் ஹை கோர்ட்டாவது……… ன்னு சொன்னாப்ல