#TNBeefchallenge #Beef4life #welovebeef

முகமது பைசான் நாகை மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 9-ம் தேதி மாட்டு வால் சூப் சாப்பிட்ட பைசான், அதை செல்பியாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குமார், கணேஷ் குமார், மோகன், அகஸ்தியன் உள்ளிட்ட கும்பல் பைசானின் மேல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

முகமது பைசான்.

முகமது பைசானை சூழ்ந்து கொண்ட இந்த கும்பல், கத்தி இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாக்கிய கும்பல் சங்கப்பரிவார அமைப்பான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

முகமது பைசானின் உறவினர்கள் தாக்கியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களைக் கைது செய்து கொலை முயற்சி வழக்கு தொடர்ந்துள்ளது காவல் துறை. வட இந்தியாவில் பசுப் பொறுக்கிகள் மாட்டுக்கறி சாப்பிட்டனர் என்றும், சாப்பிட்டதாக சந்தேகம் உள்ளது என்றும், மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்றும் குற்றம் சுமத்தி இசுலாமியர்களைக் கொல்வது சாதாரணமாக நடந்து வரும் நிலையில் அதே பயங்கரவாத கலாச்சாரத்தை தமிழகத்திலும் பரப்ப சங்கப்பரிவார கும்பல் முயற்சி செய்கிறது.

முகமது பைசானின் முகநூல் பதிவு.

மாட்டுக்கறியோ வேறு எந்த உணவாக இருந்தாலும் அது தனிப்பட்டவர்களின் உணவு உரிமை. இதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. தமிழகத்தில் துளிர் விடத் துவங்கியிருக்கும் பசு பயங்கரவாத கும்பலை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் நாளை நம் மாநிலத்திலும் வீதிக்கொரு பெஹ்லு கான் கொல்லப்படுவதை தடுக்க முடியாது.

இது வெறுமனே இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரான நடவடிக்கையாக சுருக்கிப் புரிந்து கொள்ளவும் கூடாது. குஜராத் மாநிலம் ஊனாவில் இறந்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சுமத்தி தலித் ’இந்து’க்களையே தாக்கியது இந்துத்துவ பரிவாரங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாட்டிறைச்சி மலிவாக கிடைக்கும் புரதச் சத்து நிறைந்ததாக இருப்பதால் அது தலித்துகளும் மற்ற சாதிகளைச் சேர்ந்த ஏழை உழைக்கும் மக்களும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இருக்கிறது. இன்றைக்கு முகமது பைசானின் நிலையை கண்டும் காணாமலும் கடந்து போனால் நாளை தமிழகத்தையும் வட இந்தியாவாக மாற்ற முயல்வார்கள் – இறைச்சி தின்பதே குற்றம் என்பதாக முத்திரை குத்தும் அளவுக்கும் போவார்கள்.

மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக வினவில் வெளியான கட்டுரைகளை படிக்க இங்கே அழுத்தவும் : மாட்டுக்கறி

முகமது பைசானின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து சமூக வலைத்தளங்களில் #TNBeefchallenge #Beef4life #welovebeef போன்ற ஹேஷ் டேகுகள் வைரலாகி வருகின்றது. சங்கி குண்டர்கள் களத்தில் நிற்கும் போது நாம் மட்டும் சமூக வலைத்தளங்களில் முடங்கி விடுவது சரியல்ல. அவர்கள் நமது உணவு உரிமையை மறுக்கிறார்கள்; எனில் அதை நாம் எதார்த்தத்தில் பகிரங்கமாக மீற வேண்டும்.

முகமது பைசானைத் தாக்கிய இந்துத்துவக் கும்பல்.

இன்று முதல் வரும் நாட்களில் உங்கள் பகுதியிலோ அருகாமையிலோ உள்ள மாட்டிறைச்சி உணவகத்திற்குச் சென்று மாட்டிறைச்சி சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து மேலே குறிப்பிட்ட ஹேஷ்டேகுகளில் பதிவிடுங்கள். அதை எங்களுக்கும் அனுப்புங்கள். முடிந்தால் வீட்டிலும் சமைத்து அதைப் புகைப்படம் எடுத்து வெளியிடுங்கள். வாய்ப்பிருப்பவர்கள் நண்பர்கள் சிலராகச் சேர்ந்து மாட்டிறைச்சி அன்னதானம் செய்து ஒரு திருவிழாவாக கொண்டாடுங்கள். அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து பகிரங்கமாக வெளியிடுங்கள்.

இது சங்கிகளின் நாடல்ல – தமிழ்நாடு என்பதை மண்டையிலடித்து உணர்த்தும் வேளை இது.

வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!


இதையும் பாருங்க !

♦ மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

♦ பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ

♦ தமிழ்நாட்டுல மாட்டுக்கறிய தடை பண்ண முடியாது !

♦ அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி