#TNBeefchallenge #Beef4life #welovebeef

முகமது பைசான் நாகை மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 9-ம் தேதி மாட்டு வால் சூப் சாப்பிட்ட பைசான், அதை செல்பியாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குமார், கணேஷ் குமார், மோகன், அகஸ்தியன் உள்ளிட்ட கும்பல் பைசானின் மேல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

முகமது பைசான்.

முகமது பைசானை சூழ்ந்து கொண்ட இந்த கும்பல், கத்தி இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாக்கிய கும்பல் சங்கப்பரிவார அமைப்பான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

முகமது பைசானின் உறவினர்கள் தாக்கியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களைக் கைது செய்து கொலை முயற்சி வழக்கு தொடர்ந்துள்ளது காவல் துறை. வட இந்தியாவில் பசுப் பொறுக்கிகள் மாட்டுக்கறி சாப்பிட்டனர் என்றும், சாப்பிட்டதாக சந்தேகம் உள்ளது என்றும், மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்றும் குற்றம் சுமத்தி இசுலாமியர்களைக் கொல்வது சாதாரணமாக நடந்து வரும் நிலையில் அதே பயங்கரவாத கலாச்சாரத்தை தமிழகத்திலும் பரப்ப சங்கப்பரிவார கும்பல் முயற்சி செய்கிறது.

முகமது பைசானின் முகநூல் பதிவு.

மாட்டுக்கறியோ வேறு எந்த உணவாக இருந்தாலும் அது தனிப்பட்டவர்களின் உணவு உரிமை. இதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. தமிழகத்தில் துளிர் விடத் துவங்கியிருக்கும் பசு பயங்கரவாத கும்பலை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் நாளை நம் மாநிலத்திலும் வீதிக்கொரு பெஹ்லு கான் கொல்லப்படுவதை தடுக்க முடியாது.

இது வெறுமனே இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரான நடவடிக்கையாக சுருக்கிப் புரிந்து கொள்ளவும் கூடாது. குஜராத் மாநிலம் ஊனாவில் இறந்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சுமத்தி தலித் ’இந்து’க்களையே தாக்கியது இந்துத்துவ பரிவாரங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாட்டிறைச்சி மலிவாக கிடைக்கும் புரதச் சத்து நிறைந்ததாக இருப்பதால் அது தலித்துகளும் மற்ற சாதிகளைச் சேர்ந்த ஏழை உழைக்கும் மக்களும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இருக்கிறது. இன்றைக்கு முகமது பைசானின் நிலையை கண்டும் காணாமலும் கடந்து போனால் நாளை தமிழகத்தையும் வட இந்தியாவாக மாற்ற முயல்வார்கள் – இறைச்சி தின்பதே குற்றம் என்பதாக முத்திரை குத்தும் அளவுக்கும் போவார்கள்.

மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக வினவில் வெளியான கட்டுரைகளை படிக்க இங்கே அழுத்தவும் : மாட்டுக்கறி

முகமது பைசானின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து சமூக வலைத்தளங்களில் #TNBeefchallenge #Beef4life #welovebeef போன்ற ஹேஷ் டேகுகள் வைரலாகி வருகின்றது. சங்கி குண்டர்கள் களத்தில் நிற்கும் போது நாம் மட்டும் சமூக வலைத்தளங்களில் முடங்கி விடுவது சரியல்ல. அவர்கள் நமது உணவு உரிமையை மறுக்கிறார்கள்; எனில் அதை நாம் எதார்த்தத்தில் பகிரங்கமாக மீற வேண்டும்.

முகமது பைசானைத் தாக்கிய இந்துத்துவக் கும்பல்.

இன்று முதல் வரும் நாட்களில் உங்கள் பகுதியிலோ அருகாமையிலோ உள்ள மாட்டிறைச்சி உணவகத்திற்குச் சென்று மாட்டிறைச்சி சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து மேலே குறிப்பிட்ட ஹேஷ்டேகுகளில் பதிவிடுங்கள். அதை எங்களுக்கும் அனுப்புங்கள். முடிந்தால் வீட்டிலும் சமைத்து அதைப் புகைப்படம் எடுத்து வெளியிடுங்கள். வாய்ப்பிருப்பவர்கள் நண்பர்கள் சிலராகச் சேர்ந்து மாட்டிறைச்சி அன்னதானம் செய்து ஒரு திருவிழாவாக கொண்டாடுங்கள். அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து பகிரங்கமாக வெளியிடுங்கள்.

இது சங்கிகளின் நாடல்ல – தமிழ்நாடு என்பதை மண்டையிலடித்து உணர்த்தும் வேளை இது.

வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!


இதையும் பாருங்க !

♦ மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

♦ பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ

♦ தமிழ்நாட்டுல மாட்டுக்கறிய தடை பண்ண முடியாது !

♦ அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி

 

8 மறுமொழிகள்

 1. நல்லது. அப்படித்தான் அடிக்கனும். சாப்டமா வாயயும் இன்னோத்தையும் மூடிக்கிட்டு போனோமான்னு இருந்திருக்கனும். மாட்டுக் கறி சாப்பிடாதவன் பேஜ்ஜுக்கு போய் கடுப்ப்பேத்தனும்ற ஒரே நோக்கத்துல இப்படி பதிவு போட்டா அடி விழத்தான் செய்யும். சண்டைய தூண்டறவன் அடி வாங்க தயாரா இருக்கனும் இல்லன்னா திருப்பி அடிக்க தயாரா இருக்கனும். ரெண்டும் இல்லன்னா இப்படித்தான் கதறனும். என் வீட்டு பக்கத்துலயே விக்கறானுங்க. யாரும் ஒன்னும் சொல்றது இல்ல. ஆனா, என் வீட்டு முன்னாடி வந்து என்ன கடுப்பேத்தனும்னு சாப்ட்டு காட்டனா , மவனே நடு மண்டையிலயே போடுவேன்.

 2. Shan,
  நீங்க நல்லவரு..! அதுலயும் கோவக்காரு வேற..! உங்க வீட்டு முன்னாடி ஏன் பிரச்சினை பண்ணப்போறாங்க..! இங்க சில RSS-BJP மாட்டு மூத்திரம் குடிக்கிற சூத்திர கம்மனாட்டிங்க மாட்டுக்கறி சாப்பிடகூடாதுன்னு சொல்லிக்கிட்டு திரியிரானுங்க..! பீப் சாப்பிடுற மாதிரி பதிவு போட்டதுக்கு அடிச்சிட்டாங்கலாம் வட இந்தியான்னு நெனப்புல..! இப்ப டுவிட்டர்ல டிரண்டு ஆகி, அவனுங்க வீட்டு முன்னாடியே போய் சாப்பிடலாம்னு போனப்ப அவனுங்க மாமியார் வூட்டுக்கு போயிட்டானுங்கலாம்…! 😁

 3. பிஜேபி RSS கலவரத்தை தூண்டுகிறார்களோ இல்லையோ நிச்சயம் உங்களை போன்ற ஆட்கள் வேண்டும் என்றே ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி நடந்துகொண்டு பிரச்சனையை தூண்டி விடுகிறீர்கள். இது வினவு கூட்டங்களின் வக்கிரபுத்தியை தான் காட்டுகிறது.

  காஷ்மீரில் மட்டும் ஏன் பன்றி என் உணவு உன் உரிமை என்று போராட்டம் நடத்தவில்லை ? அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும், அதனால் வாயை மூடி கொண்டு இருக்கிறீர்கள். ஹிந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் அவர்களை எப்படி வேண்டுமானாலும் சீண்டலாம் அவமதிக்கலாம் அப்படி தானே.

  உங்களை போன்றவர்களின் இந்த மாதிரியான செயல்களால் தான் வன்முறை சமூக அமைதி சீர்குலைகிறது.

  வினவு கூட்டங்கள் சமூகவிரோத கூட்டம்.

 4. முகநூலில் பதிவு போடுவது எப்படி பிரச்சனையாகும், உங்களை கட்டாயப்படுத்தினார்களா? வேத காலம் முதல் இப்பொழுது வரை ஹிந்துக்கள் வெட்டி விழுங்குகிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்? தலித்துகள் ஹிந்துக்கள் இல்லையா? பண்டிக்கறி உனக்கு தேவை என்றால் சாப்பிடு, நீ யார் காஷ்மீரிகளை போராட்டம் நடத்த சொல்ல?

  • தஸ்லிமா நஸிரீன், சல்மான் ருஷ்டி போன்ற எழுத்தாளர்கள் இஸ்லாம் பற்றிய புத்தகம் எழுதினார்கள் என்பதற்காக அவர்களை கொலை செய்ய இஸ்லாமியர்கள் நினைத்தார்கள். உங்கள் வார்த்தைபடியே நீங்கள் விரும்பினால் அந்த புத்தகங்களை படியுங்கள் இல்லையென்றால் படிக்க வேண்டாம் யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை ஆனால் நீங்கள் ஏன் கொலை செய்யும் அளவிற்கு சென்றிர்கள் ?

   பாகிஸ்தானில் (இந்தியாவில் கோவையில்) இஸ்லாமை அவமதித்தார்கள் என்று பலரை கொலை செய்து இருக்கிறார்கள்.

   சமீபத்தில் ஆசியா பீபீ என்ற பெண்ணின் மீது பொய்யான ஆதாரம் இல்லாத குற்றசாட்டை சொல்லி அவரை கொலை செய்ய வெறி கொண்டு திரிந்தார்கள்.

   இது எல்லாமே வினவு கூட்டத்திற்கும் தெரியும், அதனால் தான் அவர்கள் இஸ்லாம் கிறிஸ்துவம் பற்றி அவமரியாதை செய்வது போல் எழுத மாட்டார்கள், ஹிந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாம் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இவர்கள் செயல்படுகிறார்கள்…

   நிச்சயம் வினவு கூட்டங்களின் இந்த செயல் தவறு.

  • முகமது பைசானின் செயல் நிச்சயம் கண்டனத்திற்கு உரியது, அவரின் நோக்கம் ஹிந்துக்களை நம்பிக்கைகளை நோகடித்து சீண்டுவது தான், அதனால் தான் அவர் அதை முகநூலில் போட்டு இருக்கிறார்…

   தமிழக சட்டப்படி பசுவையோ அல்லது கன்று குட்டியையோ கொல்வது தவறு சட்டப்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

   காஷ்மீர் சட்டப்படி பன்றி கறியையோ அல்லது கொழுப்பையோ பயன்படுத்துவது தவறு, தண்டனைக்குரிய குற்றம், சும்மா வதந்திக்கே இஸ்லாமியர்கள் போராட்டங்கள் வன்முறையில் இறங்கி இருக்கிறார்கள்…

  • மாட்டை வெட்டி சாப்பிட்டார்கள் என்று நீங்கள் சொல்வது தவறு… இவ்வாறான ஒரு பிரச்சாரத்திற்கு காரணம் சமஸ்கிரதம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அர்த்தம் தெரியாமல் கிறிஸ்துவர்கள் (அல்லது தெரிந்தே) செய்த பொய் பிரச்சாரம்.

   ஹிந்து மதத்தை பொறுத்தவரையில் மரம் செடி கொடிகளுக்கு கூட உயிர் உணர்வு உண்டு, அவைகளை வெட்டுவதே பாவம் என்று வேதம் சொல்கிறது அதனால் தான் அனைத்து ஹிந்து கோவில்களிலும் தலவிருச்சம் என்று சொல்லி ஒரு மரத்தை வைத்து இருப்பார்கள், அந்த மரத்தை அனைவரும் வணங்குவார்கள்…. அப்படிப்பட்ட வேதம் எப்படி மாட்டை கொல்ல சொல்லும் ?

   தமிழில் கரும்பு என்ற ஒரு வார்த்தைக்கு கிட்டத்தட்ட 8 அர்த்தங்கள் உண்டு அது போல தான் சமஸ்கிருதமும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க