ந்துத்துவ சாதி-மத வெறியை ஊட்டி வட மாநிலங்களில் வெகு விரைவாக வளர்ந்து விட்ட ஆர்.எஸ்.எஸ். – பாஜக, தமிழகத்தில் மட்டும் இன்னும் வளரமுடியவில்லை. அதற்காக மக்களிடம் இருக்கும் இயல்பான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை தனது பக்கம் இழுத்துக் கொள்ள கோவிலை ஒரு களமாகப் பயன்படுத்த முடிவு செய்த சங்க பரிவாரத்திற்கு, தமிழகத்தில் அரசு சார்பில் இந்து அறநிலையத் துறையின் கையில் கோவில்கள் இருப்பது மிகப்பெரும் சிக்கலாக இருந்தது. அதனை முறியடிக்க “கோவில்களை மீட்போம்” என்ற பெயரில் ஒரு இயக்கம் எடுத்து நடத்தி வருகிறது. இது ஒரு சதித்திட்டமென்பது ஊரறியும்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென தாமிரபரணி புஷ்கரம் என்று 160 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழா என இல்லாத ஒன்றை களமிறக்கியது சங்கபரிவாரம். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, அத்தி வரதரைக் களமிறக்கினார்கள். இந்திய அளவில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து, அத்திவரதர் நிகழ்வு மூலம் தமிழக பக்தர்களையும் தன் பக்கம் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடுத்ததாக, 24-07-2019 அன்று முதல் வைகைப் பெருவிழா என்ற பெயரில், சாமியார்கள் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளது, ஆர்.எஸ்.எஸ்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது, இசுலாமியர்களும், கிருத்தவர்களும் அவ்விழாவை தமது சொந்த ஊரின் விழாவாகக் கொண்டாடுவதும், கோரிப்பாளையம் தர்காவின் சந்தனக் கூடு திருவிழாவில் இந்துக்கள் கலந்து கொள்வதும் மதுரை நகரின் இயல்பான மரபு.

அந்த மரபைக் காப்பாற்ற, சங்க பரிவாரத்தின் சதிகளை முறியடிக்க #SaveVAIGAIFromRSS என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்குமாறு செய்துள்ளனர் தமிழ் மக்கள். அதன் தொகுப்பை கீழே தருகிறோம்.

*****

தாமிரபரணியைத் தொடா்ந்து வைகை பெரு விழா என்ற பெயாில் அகில பாரத துறவியா்கள் சங்கம் ஜுலை 12 முதல் ஆகஸ்டு 25 வரை மதுரையில் மாநாடு நடத்த உள்ளது.

வைகை நதியின் பெயரில் மதவாத அரசியலை நுழைத்து மதுரை மக்களை பிளவுபடுத்தும் முயற்சி இது. நதி என்பது மக்களின் சொத்து. அதை மத அடிப்படைவாதிகள் துறவியா்கள், ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது.

ஏற்கனவே வைகை சுற்று சூழல் சீா்கேட்டால் மாசுபட்டு நாசமாகிக் கிடக்கையில், அகில பாரத துறவியா்கள் சங்கம் நடத்தும் மாநாடு அதை மேலும் நாசமாக்கவே உதவும். அதோடு அது மதசாா்பின்மைக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கும் எதிரானது என்பதால் துறவியா்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது, என்று மக்கள் உாிமை பாதுகாப்புமையம், மக்கள் சிவில் உாிமைக்கழகம், திராவிடர் கழகம், திமுக வழக்கறிஞா் அணி, சமநீதி வழக்கறிஞா்கள் சங்கம், உள்ளிட்ட பல அமைப்பினரும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ஆனந்த் :

எலேய் மதுரக்காரன்டான்னு சவுண்டு வுட்டா பத்தாதுடே. இந்த அரடவுசர் பயலுக உள்ள வரவே உடாம போராடுங்கடே, என் மதுர மக்கா. மதுர வீரன் சாமியும், கருப்பனும், முருகனும் சூலாயியும், முனியாண்டியும் அய்யனாரும் ஆத்தா மீனாட்சியும் நம்மள காரித்துப்புவாங்கடே. #SaveVAIGAIfromRSS

பாண்டியன் பெரியையா பொறியாளன் :

கங்கை நதியை மாசு படுத்தியவர்கள் இப்போது வைகை நோக்கி வருகிறார்கள். தமிழ் நதியால் பயிர் விளையும். காவி நதியால் உயிர் பிரியும். எச்சரிக்கை தமிழர்களே! #SaveVAIGAIfromRSS

ரவிசங்கர் :

சமத்துவ விழாவான மதுரை சித்திரை திருவிழாவை சனாதன விழாவாக மாற்றும் முயற்சியில் வைகை மாதா விழா, வைகை பெருவிழா என்னும் புது வடிவம் கொடுத்து RSS காவிகும்பல் மாற்ற முயற்சிகிறது. #SaveVAIGAIfromRSS

வெங்கட் :

RSS நடத்தும் வைகை பெருவிழாவிற்கு தயவு செய்து அனுமதி கொடுக்காதீர்கள், ஏனென்றால் இவர்கள் கங்கையை சுத்தமா வச்சிக்கிட்ட லட்சணம் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தெரியும். #SaveVAIGAIfromRSS

கிசான் :

வைகையில் மட்டுமல்ல, இது காவிரி, தாமிரபரணி ஆறுகளிலும் நடக்கிறது. ஆகையால அனைத்து நதிகளையும் ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து காப்பாற்றுங்கள் ! #SaveVAIGAIfromRSS

உதயகுமார்:

இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. அதை மதத்தின் பெயரால் கைப்பற்றி மூடத்தனத்தைப் பரப்பி மக்களை காட்டுமிராண்டிகளாக மாற்றும் முயற்சியில் RSS இறங்கியிருக்கிறது.#SaveVAIGAIfromRSS #savevaigai

இங்கர்சால் சே :

செல்லூர் ராஜீ போன்ற விஞ்ஞானிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்ட மதுரை சங்கீகளினால் அசிக்கப்பட போகிறது.. #SaveVAIGAIfromRSS

மதுரை மன்னன்:

இதுதான் வைகை… இதுதான் மதுரை… இதுதான் தமிழ்நாடு…. பூஜை பண்றேன்னு கண்ட குப்பைகளையும் கொண்டுவந்து கொட்டாம இருந்தாலே போதும் #SaveVaigai

தமிழை விரும்பும் தேவன் :

ஐயர்வால்…. வந்தோமா தட்ல விழுந்த அஞ்சு… பத்த பொறுக்குனோமானு போகனும்….. 40 வருசத்துக்கு முன்னாடி இந்து இஸ்லாமியர் வேறுபாடே கிடையாது… உங்க பரதேசி கூட்டம் வந்த பின்னாடி தான் பிரிச்சு வச்சு விளையாட பாக்குறீங்க….. இதெல்லாம் புரியும் போது தெரியும்… #SaveVAIGAIfromRSS

கவிதா :

வைகை எங்களது (தமிழர்களின்) கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளம். நாங்கள் இந்தக் காவிக் கும்பல் எங்களது கலாச்சாரத்தை சீரழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS

ராஜ் :

தமிழர்கள் பாசிசத்திற்கும், சங்கியிசத்திற்கும் எதிரானாவர்கள். நாங்கள் ஒருபோதும் இந்துத்துவக் கும்பல் எங்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்கமாட்டோம். கங்கை ஆற்றை காவிகள் அசுத்தப்படுத்தியதிப் போல எங்கள் (வைகை) ஆற்றை அவர்கள் அசுத்தப்படுத்த அனுமதியோம். #SaveVAIGAIfromRSS

தமிழ்நந்தி :

சிவனாக நினைத்து கொண்டு மண்டை ஓடு எலும்பு துண்டுகளோடு சுற்றும் அகோரி! இதுவும் ஒரு வித மூளை பிசகின உதாரணம். கடைசி வரை சிவனையும் காணமுடியாத ஊனக் கண்ணோடு செத்துப் போவது இந்த அகோரிகள் இயல்பு! வடமாநிலங்களுக்கே உரிய சிவன் சாபம் இது! #SaveVAIGAIfromRSS

தமிழ்பித்தன் :

அழகர் இறங்கும் ஆற்றில் அகோரிகளுக்கு என்ன வேலை???? #GetOutRSs #SaveVAIGAIfromRSS

பிரபாகரன் குருசாமி :

ஆடிப்பெருக்கு எந்த ஆற்றுக்கு தொடர்புகொண்ட திருவிழா என்றுகூட தெரியாத இந்த RSS தீவிரவாதிகளிடம் இருந்து வைகை நதியையும் தமிழ் பண்பாட்டையும்காப்பாற்ற வேண்டும். #SaveVAIGAIfromRSS

ஸ்டாலின் ஈ.பி

தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத காவிகள் நம் தமிழரின் தொன்மையான சொத்துக்களுள் ஒன்றான வைகையை மாசுபடுத்த அனுமதிக்கலாமா? அவர்கள் காவி வர்ணம் பூச நம் வைகை என்ன வாரனாசியா? வடக்கானே உங்கள் கலாச்சாரம் உங்களோடு. எங்கள் வைகை எங்களோடு. ஆதலால் நீ ஓடு #SaveVAIGAIfromRSS

கவிதா :

நாங்கள் வைகையை இப்படிக் காண விரும்பவில்லை. #SaveVAIGAIfromRSS

அஷோக் குமார் தவமணி :

காலங்காலமாக, தமிழர்கள் தங்களது குலதெய்வங்களுக்கு கால்நடைகளை பலி கொடுத்து, தங்களது குல வாரிசுகளுக்கு அதனைக் கறி செய்து பகிர்ந்து உண்பர். தற்போது இந்த வழக்கம் ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பலால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது., நாம் அவர்களை வைகைத் திருவிழாவை நடத்த அனுமதித்தோம் என்றால், அவர்கள் நாளை இவ்வழக்கத்தை (கெடா வெட்டும்) நிறுத்தச் சொல்லி நமக்கு உத்தரவிடுவார்கள். #SaveVAIGAIfromRSS

விவேகானந்தன் :

காவி பாஜக வைகை நதியை தேசிய நிர்க் கொள்கையின் கீழ் தனியார்மயப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன் மீதான விவாதத்தைத் திசை திருப்ப, தற்போது காவிக் கும்பல் வைகை திருவிழாவை நடத்தவிருக்கிறது.#SaveVAIGAIfromRSS

அருண் காளிராஜா :

கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்தைக் குறித்து நினைவுபடுத்திப் பாருங்கள். நமது அன்பிற்குரிய சுயமோகி மோடி தனது பெயர் பொறித்த உடுப்பை ஏலத்தில் விட்டு அத்தொகையையும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு தானமளித்தார். ஏதாவது ஒரு சங்கியாவது தைரியமிருந்தால், இன்றுவரைக்கு என்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது எனச் சொல்லட்டும். பின்னர் வைகை திருவிழாவுக்கு வரட்டும்.

வேடிக்கை பார்ப்பவன் :

இந்துத்துவக் குண்டர்களே ! தமிழ் மண்ணை விட்டு வெளியேறுங்கள்! #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

மதுரை மதச்சார்பின்மையின் மண். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா அமைதியான முறையில், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைதியை அழித்து விநாயகர் ஊர்வலத்தைப் போல நிலைமையை மோசமாக்க நினைக்கிறது. #SaveVAIGAIfromRSS

பிரபு விஜயன் :

வைகை ஆறு மதச்சார்பின்மையின் அடையாளம். வைகையில் தமிழ்ச் சமூகத்தால் நடத்தப்படும் சித்திரைத் திருவிழா பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களையும் ஒருங்கிணைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் தற்போது மதக் கலவரங்களைத் தூண்டும் நோக்குடன் வைகை பெருவிழா மற்றும் முட்டாள்தனமான பிற பசுப் பாதுகாப்பு மாநாடுகள் நடத்தவிருக்கிறது. #SaveVAIGAIfromRSS

ஸ்ரீசந்தர் :

ஆர்.எஸ்.எஸ். கும்பல் கங்கை நதியை அழித்தது போல நமது வைகை நதியையும் நமது தமிழ் பாரம்பரியத்தையும், வைகைப் பெருவிழா என்னும் பெயரில் அழிக்கத் திட்டமிடுகிறது. #SaveVAIGAIfromRSS

சபரி ராம்:

நியூட்ரினோ திட்டத்தை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமல்படுத்துவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் வைகையின் ஊற்றுமூலத்தை அழித்துவிட்டு, இங்கு வைகைப் பெருவிழாவை மதுரையில் நடத்தவிருக்கிறது. தமிழர்களாகிய நாங்கள், வைகையை காவிமயமாக்குவதன் மூலம் இப்பிரச்சினையை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் போடும் இந்த தூண்டிலில் நாங்கள் சிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

வைகை ஆற்றங்கரையில் இருக்கும் 2500 ஆண்டு பழமை வாய்ந்த கீழடி அகழ்வாய்வில் எந்த ஒரு மதத்தின் குறியீடுகளும், மதம் சம்பந்தப்பட்ட பொருட்களும் கிடைக்கவில்லை. தங்களது சித்தாந்தத்தை தமிழகத்தில் நிலைநாட்ட முடியாத கையறுநிலையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கடுப்படைந்திருக்கிறது. அவர்கள் தற்போது அதனை அழிக்க வருகிறார்கள். #SaveVAIGAIfromRSS

சாமானியனின் சவுக்கு:

#SaveVAIGAIfromRSS மதுரை அழகர் மீனாட்சிக்கு போட்டியாக காவிக்கும்பல்களின் வைகைமாதாவா..? விரட்டியடிப்போம் வைகைகரையிலிருந்து காவிகளை.. #SaveVAIGAIfromRSS

பிரபு :

ஜுனிதா :

என்னடா இதெல்லாம்? வைகையை காக்க நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பேசவோ இல்ல வைகை தாய் பெற்றெடுத்த கீழடி நாகரிகத்தை பற்றி பேசவோ ஒரு நிகழ்வு கூட நிகழ்ச்சி நிரல்ல காணோம். #savevaigaifromRSS

அப்துல் பஷீத் :

நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்து வைகை நீர்த்தேக்கத்தை உடைக்கத் துடிக்கும் காவி கும்பல் வைகைக்கு விழா நடத்துகிறதாம். தமிழரின் வரலாற்றுப் பெருவிழாவான சித்திரைத் திருவிழாவை, வைகையின் வரலாற்றை காவிமயப்படுத்த 12 நாள் வைகைப் பெருவிழாவை காவிகள் துவக்கியுள்ளனர். #SaveVAIGAIfromRSS

நா. தனசேகரன் :

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழிக்கத் துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.! வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS

அசோக்குமார் தவமணி :

வைகை நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்த நாகரீகம். இவ்விரண்டும் திராவிட நாகரீங்களாக அடையாளங் காணப்பட்டதை ஆரிய இந்துத்துவவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். வைகை நாகரீகத்தை ஒழித்துக்கட்டி பண்டைய தமிழ் வரலாற்றை திருப்பி எழுத மதுரைக்கு வருகிறது. #SaveVAIGAIfromRSS

பிரபு :

அரவிந்தன் :

ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழித்தாள துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.!வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS

ஸ்ரீதர் :

முல்லை பெரியாறு பிரச்சினைக்கு அத்தி வரதரை போல் மறைந்து இருந்த சங்கி கூட்டத்துக்கு இப்போ வைகைல என்ன வேலை?? #SaveVaigaiFromRSS

ஹைதம் :

அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் கங்கையை அசுத்தப்படுத்திவிட்டனர். இப்போது வைகையைக் குறி வைக்கின்றனர். சங்கிகள் நமது நதிகளை அழித்துவிட அனுமதிக்காதீர்கள்.. #SaveVAIGAIfromRSS

இசை :

வைகைக்கும் இந்த மதவாத காட்டுமிராண்டி கும்பலுக்கும் என்ன தொடர்பு? இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு தமிழகத்தை RSS தீவிரவாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார் முதலமைச்சர் @EPSTamilNadu தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள எத்தனை பேக்கரி டீலிங்குகள்! #SaveVAIGAIfromRSS

சாமானியனின் சவுக்கு :

இந்த வருடம் இல்லை என்றாலும் இன்னும் இரண்டு வருடங்களில் வைகை நதியை இந்த கும்பல் ஆக்கிரமிக்கும் இதை கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு கொடுறமாக இருக்கிறது என்று இதை செய்லபடுத்த தான் வைகை பெருவிழா என இந்துதுவ விழா நடத்துகிறது #SaveVaigaiFromRSS

ஜெய்குமார் :

வைகைப் பெருவிழாவா? வைகைக்கு மூடுவிழாவா? நேற்று தாமிரபரணியில் புஷ்கரம்.. இன்று வைகைக்கு பெருவிழாவாம். தமிழர்களின் வரலாற்றை காவிகும்பல் திருட நினைக்கிறது. முறியடிப்போம். #SaveVAIGAIfromRSS

வெங்கட் :

மதுரைக்கார இஸ்லாமியரும் கூடி சேர்ந்து கொண்டாடுற அழகர் திருவிழாதான் ‘வைகை பெருவிழா’. வயித்துலயிருந்த இஸ்லாமிய சிசுவயும் வயித்தக் கிழிச்சு கொன்ன வடநாட்டு காட்டுமிராண்டி சாமியார் கூட்டம் நடத்தனும் நினைக்குறது ‘காட்டுமிராண்டி பெருவிழா’. #SaveVAIGAIfromRSS

மனோ கிட்டு:

வைகையை அழிக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதிகொடுத்துவிட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மூலம் வைகையை குறுக்கி இருபுறமும் சாலை அமைக்கவிட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் கும்பல் வைகைப்பெருவிழா கொண்டாடுவது நாடகமே.. #savevaigaifromRSS

எரிசினக் கொற்றவை :

காவிரி அனில் அகர்வாலுக்கு, தாமிரபரணி கொக்ககோலாவிற்கு, வகையை யாருக்கு விற்க வைகை பெருவிழான்னு ஏமாத்துற? #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

பிரிட்டிஷாரின் காலை நக்கியவர்களே (சங்கிகளே), தமிழ்தேசத்தை விட்டு விலகிநில்லுங்கள்… #SaveVAIGAIfromRSS

சரண் குமார் :

காவிக் கும்பல் மிகச் சிறப்பாக தனது திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. தமிழக அரசும் அதற்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது. முதலில் தாமிரபரணி புஷ்கரம், அடுத்து அத்திவரதர், தற்போது வைகைப் பெருவிழா. #SaveVAIGAIfromRSS

கார்த்திக் :

இந்துத்துவக் குண்டர்களே, தமிழ் மண்ணை விட்டு வெளியேருங்கள் ! #SaveVAIGAIfromRSS

உங்கள் கார்த்திக் :

வைகை என் ஆறு.. அந்தியனே வெளியேறு.. #SaveVaigaiFromRSS


தொகுப்பு : நந்தன்

7 மறுமொழிகள்

  1. ஐயோ பாவம் அத்திவரதர் மதமாற்ற மற்றும் தேசவிரோத கூட்டங்களை ரொம்பவே கலக்கிவிட்டார் போல இருக்கு… கிறிஸ்துவ மதமாற்ற கூட்டங்களின் இந்த மாதிரியான வெறுப்பு பிரச்சாரங்கள் தான் தமிழகத்தில் பிஜேபி வளர்வதற்கு வழி வகுக்கும்…

    என் பார்வையில் ஒரேயடியாக பிஜேபியை ஹிந்துக்களின் அரசியல் கட்சி என்று அடையாளப்படுத்துவது சரியல்ல என்றே நினைக்கிறேன் நாளை பிஜேபியின் வெற்றிக்கு காரணம் ஹிந்துவா தான் காரணம் என்று மற்ற அரசியல் கட்சிகளும் பிஜேபியை விட நாங்கள் ஹிந்துக்களின் நண்பர்கள் என்று கிளம்புவார்கள் (ஏற்கனவே காங்கிரஸ் இதை செய்ய ஆரம்பித்து விட்டது உதாரணம் ஐயப்பன் கோவில் விவகாரம்)… இந்த மாதிரியான நிலைப்பாடு மதவெறிக்கு தான் வழி வகுக்கும்.

    எப்படி தமிழகத்தில் மதசார்பின்மை ஹிந்துக்களை அவமதித்து கொண்டு கிறிஸ்துவ இஸ்லாமிய மதவெறியை வளர்க்கிறார்களோ அதே போல் நாளை ஹிந்துக்களுக்கு ஆதரவு என்று சொல்லி கொண்டு கிறிஸ்துவ இஸ்லாமியர்களை அவமதித்து ஹிந்து மதவெறியை வளர்ப்பார்கள்.

    கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் அவர்களின் கடவுளை வழிபடும் வரையில் எந்த பிரச்னையும் இல்லை ஆனால் ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள்களை பற்றியும், ஹிந்துக்களை பற்றியும் பொய்களை சொல்லி அவமதிக்கும் போது தான் பிரச்னை வருகிறது, இது தான் பிஜேபி RSS போன்ற இயக்கங்களின் தேவையை உருவாக்குகிறது.

    தமிழகத்தின் இன்றைய சூழலில் பிஜேபியை ஆதரிப்பது தான் தமிழக மக்களின் நலனுக்கு நல்லது இல்லை என்றால் வினவு கூட்டங்களும் கிறிஸ்துவ இஸ்லாமிய மதவெறியர்களும் தமிழகத்தில் இன்னொரு காஷ்மீரை உருவாக்கி தமிழகத்தை அழிக்க கொஞ்சம் கூட தயங்க போவதில்லை.

    • எப்பா… இந்த உலகத்துல இப்படி ஒரு நல்ல மனுசனா ?..

      மணி நெம்ப நல்லவரா இருக்காரே…

      மதக்கலவரத்தைத் தூண்டி பாரத மாதாவை வல்லுறவு செய்யுற பொறம்போக்கு தேனா பசங்க இருக்குற பாரதிய ஜனதா கட்சிக்கும் கூட இவ்வளவு ஆதரவா, அன்பா பேசுறாரே… இவரு கண்டிப்பா அடுத்த காந்தியா வருவாரு…

  2. இயேசு கிறிஸ்து மரியாள், அல்லா, முகமது நபி ஆகிய பெயர்கள் இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆர்டிக் பகுதியில் போய் கேட்டாலும் ஐஸ்லாந்து பகுதியில் போய் கேட்டாலும் அண்டார்டிக்காவில் போய் கேட்டாலும் ஐரோப்பாவில் சொன்னாலும் அனைவரும் சட்டென அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால் இந்த அத்திவரதர், சுத்திவரதர் கதை எல்லாம் அப்படி இல்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே நிறைய பேருக்கு தெரியாது. இந்தியாவுக்கு வெளியே சொல்லவே தேவையில்லை. ஏனெனில் அத்திவரதர், சுத்திவர தர் எல்லாம் லோக்கல்ஸ். இஸ்லாமும் கிறிஸ்தவமும் பௌத்தமும் universal religions. இந்து மதம் local cult மட்டுமே. மேற்படி universal மதத்தவர்களுக்கு இந்து மதம் ஒரு பொருட்டே அல்ல. இப்போது தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது, எழுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது நூறாண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்றெல்லாம் கிளப்பி விட்டு பித்தலாட்டம் செய்து காசு பார்க்க ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. கூடவே மதவெறியை தூண்டிவிட்ட மாதிரியும் ஆச்சு. இது போதாமல் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான whatsapp குரூப் புகளை நடத்தி மறைமுகமான மதவெறி பிரச்சாரம் வேறு. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

    • மணிகண்டன் சார் சொல்வாரு… எங்க போயி முடியும்னு…

      நாஜிகளின் concentration campஇல் போய் தான் முடியும்

      கேம்புக்கு பொறுப்பு மணி சார்தான்…

      இப்போவே காக்கா பிடிச்சு வச்சிக்கோங்க…

      அது சரி … நடுல எதுக்கு அல்லா , ஏசு எல்லாம் யுனிவர்சல்னு பிட்டப் போடுறீங்களே…

      • நாஜிகளின் concentration camp போல் இந்தியாவில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களுக்கு எதிராக செய்து இருக்கிறார்கள், அவர்களின் மத தலைவர்களே ஹிந்துக்களுக்கு எதிராக செய்த கொடூரங்களை எல்லாம் விளக்கமாக எழுதி வைத்து இருக்கிறார்கள்.

        Goa Inquisition பற்றிய வரலாற்றை படித்து பாருங்கள், இது போல் இந்தியா முழுவதுமே கிறிஸ்துவர்கள் பல கொடூரங்களை ஹிந்துக்களுக்கு எதிராக செய்து இருக்கிறார்கள், இஸ்லாமியர்களை பற்றி சொல்லவே வேண்டாம் அவர்களின் ஆட்சி காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் மக்கள் தொகையும் குறையும் அளவிற்கு மிக பெரிய கொடுமைகளை ஹிந்துக்களுக்கு எதிராக செய்து இருக்கிறார்கள்.

        குஜராத் கலவரத்தை பற்றி பேசும் உங்களை போன்றவர்கள் கோத்ர ரயில் எரிப்பு பற்றி பேச மாட்டிர்கள்.
        ஜெய் ஸ்ரீராம் பற்றி பேசும் உங்களை போன்றவர்கள் காஷ்மீரில் அல்லாஹு அக்பர் சொல்பவர்கள் மட்டுமே வாழமுடியும் என்று சொல்லி கொலைகளில் ஈடுபட்டவர்கள் பற்றி பேசமாட்டிர்கள்.
        பசு கொலையை பற்றி பேசும் உங்களை போன்ற ஆட்கள் இராமலிங்க கொலை பற்றி பேசமாட்டிர்கள்.

        இந்த காரணங்களால் தான் வினவு போன்றவர்களை நான் நம்புவதில்லை, உங்களை போன்றவர்களிடம் நேர்மை மனிதநேயம் இல்லை, உங்களின் மனதில் இருப்பது வெறும் வெறுப்பு மட்டுமே… இதனால் அழிவு மட்டுமே மிஞ்சும்.

    • ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் கிறிஸ்துவனுக்கும் இஸ்லாமியனுக்கும் அத்திவரதர் யார் என்பது தெரியும்… இது தான் முக்கியம் இந்த அந்நிய மதமாற்றிகளை அத்திவரதரின் வருகை கலக்கி விட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.

  3. நல்லா கத்துங்க…. இன்னும் சத்தமா கத்தனும்…. சில வருசங்களுக்கு முன்னாடி வரைக்கும் இதே வினவு இந்து மத கடவுள கேலி செஞ்சி படம் போடறது மனித உரிமைன்னு பாடம் எடுத்துச்சு…. இந்து திருப்பி அடிக்க ஆரம்பிச்ச பிறகுதான்…. அத நிறுத்தீட்டு ” மக்களிடம் இருக்கும் இயல்பான மத நம்பிக்கைன்னு பதிவு போட ஆரம்பிச்சிருக்கு”. திருப்பி அடிச்சாத்தான் மேலும் அடி வாங்காம இருக்க முடியும்னு இந்துக்களும் கத்துக்கிட்டாங்க. பாப்பான் மேல பழைய கடுப்புல உள்ளவன், பாப்பாத்தி திரும்பி பாக்காதனால கடுப்பானவன், கறுப்பு அசிங்கம்னு தானே நினச்சிக்கிட்டு சிகப்பு தோலு மேல கோபப்படற தாழ்வுமனசுக்காரன், சுத்தமா இருக்கறவங்கள பாத்து கோபப்படறவன், டீசண்டா தெரியறவன பாத்து பொறாமப்படறவன், இவனுங்களாம்தான் இந்து எதிர்ப்பு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. இவனுங்க ஒன்னும் மெஜாரிட்டி கிடையாது. ஆகாவும் முடியாது. வரப்போற கூட்டத்த பாத்தா தெரியும்.

    ஒரு பைத்தியம் universal religions, local cult நு பாடம் எடுக்குது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே. cult நா என்னன்னு மொதல்ல படிச்சிட்டு வரட்டும். இஸ்லாத்துக்கும் கிருஸ்தவத்துக்கும் cult கணகச்சிதமா பொருந்தும். இதுங்களெல்லாம் வினவு கூட்டத்தோட அறிவு ஜீவிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க