( தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்கள் எழுதிய நூற்றாண்டுவாரியான இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்தும் pdf வடிவில் )

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ருபதாம் நூற்றாண்டில் வேறு எந்த தமிழறிஞரும் செய்திராத ஒரு பெரும் தமிழ்ப்பணியை சிறப்பாகச் செய்து முடித்தவர் அறிஞர் மு. அருணாசலம் ஆவார். ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை 15 நூல்களில் 5,404 பக்கங்களில் அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இந்நூல்களுக்கான பொருளடக்கத்தை இறுதியாக 417 பக்கங்களில் பார்க்கர் நிறுவனம் பகுத்து தொகுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பக்கங்களையும் எப்படி ஒரு மனிதன் படிக்க முடியும் என்று நீங்கள் மலைக்க வேண்டாம். இந்நூற்களில் உள்ள முன்னுரைகளை ( குறிப்பாக 13, 14-ம் நூற்றாண்டு முன்னுரைகள் ) நீங்கள் படித்துவிட்டு தொடர்ந்து இந்த நூல்களில் உள்ள பொருளடக்கப் பக்கங்களைப் புரட்டினால் உங்களுக்குத் தேவையான பகுதிகளை கண்டெடுத்து தேவையான பொழுது படித்துக் கொள்ளலாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பொருளடக்கம் சார்ந்த நூலைப் புரட்டி அந்தப் பகுதி எந்த தொகுதியில் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை உடனே தெரிந்து கொள்ளலாம். ஆகவே இந்நூலின் தொகுதிகளைக் கண்டு திகைப்படைய வேண்டியதில்லை.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தமிழ் இலக்கிய வரலாறு : ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு : தமிழ்ப் புலவர் வரலாறு பத்தாம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினோராம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டு : தமிழ்ப் புலவர் வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு : தமிழ்ப் புலவர் வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினைந்தாம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 3

தமிழ் இலக்கிய வரலாறு : பதினேழாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்