ஹைதர் அலி – சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் – பீஜாபூர் தளபதி ரண்தவுல்லாகான்

நண்பர்களே…

பொ.வேல்சாமி

சென்ற வாரம், “சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலைப் பார்த்தேன். என் வழக்கப்படி உடனே அந்நூலை ஒருமுறை புரட்டினேன். அப்பொழுது கண்ணில்பட்ட இரண்டு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒன்று ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு பற்றிய செய்திகள்; இரண்டு சிருங்கேரி மடத்தின் நலனுக்காக பீஜப்பூர் சுல்தானின் படைத்தளபதி ரண்தவுல்லாகானின் செய்த உதவிகளைப் பற்றிய செய்திகள்.

இந்த பீஜப்பூர் சுல்தானிடம் “’சத்ரபதி சிவாஜி”யின் தந்தை துணைப்படைத் தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்திகள் உள்ள பக்கங்களை படங்களாக உங்கள் பார்வைக்குத் தருகின்ற அதே வேளையில் இந்நூலின் pdf வடிவ இணைப்பையும் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : சிருங்கேரி மடத்தை சங்கராச்சாரியார் முதன்முதலாக உருவாக்கப்பட்டது என்று கூறுவார்கள்.

உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஓங்கு பெரும் பீடம் : சிருங்கேரி வியாக்யான பீடத்தின் குரு பரம்பரை வரலாறு (A. D. 788 முதல் 1964 முடிய)

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க