கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !

பாஜக -வின் ஆட்சியில் மனிதர்களை விட மாடுகள் தான் ‘முக்கியம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் உத்திரப் பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வு...

0

“கோமாதாவை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாதால்” உ.பியை சேர்ந்த மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் ஆட்சியர் உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உ.பி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நிச்லால் தெஹ்ஸிலிலுள்ள மாதவலியா கோசாலையில் மாடுகளை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்று அரசாங்கத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய தலைமைச் செயலாளர் ஆர்.கே. திவாரி தெரிவித்தார்.

மாவாட்ட ஆட்சியர் அமர் நாத் உபாத்யயாவுடன், துணை ஆட்சியர், முன்னாள் துணை ஆட்சியர், தலைமை கால்நடை அதிகாரி மற்றும் கால்நடை அதிகாரி ஒருவர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தீவனம் மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கான அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்காக கோசாலையில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை 2,500 என்று பதிவேட்டில் தவறாக எழுதப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் கூறினார். ஆய்விற்குப் பிறகு கோசாலையில் வெறும் 954 மாடுகள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை வேறுபாட்டை அதிகாரிகளால் சரியாக விளக்க முடியவில்லை என்று திவாரி கூறினார். அதிகாரிகளிடம் தீவிரமான கவனக்குறைவு இருந்ததாக அவர் மேலும் கூறினார். மேலும் தீவனம் மற்றும் இதர செலவுகள் குறித்த முறையான பதிவுகள் எதுவும் அங்கு இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் அவர் கூறினார்.

படிக்க:
மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை
♦ ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !

மிக சமீபத்தில் உ.பியிலுள்ள சீதாபூர் மாவட்டதிலுள்ள பள்ளிக்குழந்தைகள் சத்துணவு திட்டத்தின் கீழ் வெறுமனெ ‘மஞ்சள் தண்ணீர் சாப்படு’ சாப்பிடுவதை ஒரு காணொளி காட்சி அம்பலப்படுத்தியது. இதற்கு எந்த அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை குறைந்தது ஒரு ஆய்வு கூட நடத்தப்படவில்லை. ஒரு அதிகாரி மீதும் நடவடிக்கை இல்லை.

உத்திரப்பிரதேசத்தில் பாதி குழந்தைகளுக்கு ஊட்டசத்துக் குறைபாடு இருக்கிறது மேலும் இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில் உத்திரப்பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து அடர்த்தியான முட்டையை குழந்தைகளுக்குக் கொடுக்க சொல்லி மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தினாலும் காவி பாசிசம் படர்ந்துள்ள உ.பி உள்ளிட்ட பசு வளைய மாநில அரசாங்கங்கள் முட்டையை தடை செய்துள்ளன.

உ.பி கோரக்பூரில் சென்ற ஆண்டில் 45 நாட்களில் ஆக்சிஜன் உருளை நிறுத்தப்பட்டதால் மூச்சு விட முடியாமல் 71 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்தனர். ஆனால் துறைசார்ந்த அதிகாரிகள் மீதோ அல்லது நிதியை ஒதுக்காத அரசாங்கம் மீதோ நடவடிக்கை எதுவும் எடுத்ததில்லை. ஆனால் மாட்டுக்கு ஒதுக்கிய நிதிக் கணக்குக்காக ஆட்சியரையே இடைநீக்கம் செய்திருக்கிறது.

நல்லவேளை மாடுகள் சைவம் தான் சாப்பிடுகின்றன. ஒருவேளை அசைவம் சாப்பிடும் உயிரினங்களாக இருந்திருந்தால், மனிதர்களை அறுத்து மாட்டுக்கு உணவாகப் போட்டிருப்பார்கள் சங்கிகள் !


சுகுமார்
செய்தி ஆதாரம் :
♦ UP Suspends District Magistrate, Five Others for ‘Negligence in Cow Protection’.
♦ Video Shows Children in UP School Eating ‘Rice and Turmeric Water’ in Midday Mealசப்ரங் இந்தியா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க