2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியின் தொன்மை,
தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப் பண்பாடு !
கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! பாதுகாப்போம் ! பரப்புவோம் !
அரங்கக் கூட்டம்
30.10.2019 – புதன், மாலை 6.00 மணி,
அண்ணாமலை அரங்கம்,
சாந்தி தியேட்டர் அருகில், கோவை.
சிறப்புரை :
முனைவர் சொ.சாந்தலிங்கம்,
தொல்லியல் ஆய்வாளர் (ஓய்வு), மதுரை.
முனைவர் இரா. ஜெகதீசன்,
தொல்லியல் ஆய்வாளர், கோவை.
அனைவரும் வாரீர்…!
கீழடியில் கிடைத்துள்ள பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்யும் போது, அசோகரின் பிராமி எழுத்துக்களை விட தமிழ் 300 ஆண்டுகள் தொன்மையானது என்று சான்றுபடுத்தப்பட்டுள்ளது. எழுத்துக்கள் சிலரால் மட்டுமல்ல பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த அகழாய்வில் 1,001 ஓடுகள் இத்தகைய எழுத்துவரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன. இது சிந்து சமவெளி நாகரிக எழுத்திற்கும் தமிழிற்கும் இடையே ஒரு தொடர்பையும் காட்டுவதாக உள்ளது.
வேளாண்மை, கைத்தொழில், கட்டிடக்கலை, வணிகம், தொழில்நுட்பம், கலையுணர்வு, அழகுணர்வு, விளையாட்டு என்று தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றி சங்ககால இலக்கியங்களின் சொல்லப்பட்டவை எல்லாம் கற்பனை அல்ல, உண்மை என மெய்ப்பிக்கும் வண்ணம் ஆய்வுகள் நிரூபணமாகி வருகிறது.
வேத காலத்தில் குறிப்பிடப்படும் புராணக் குப்பைகள், அதன் அடிப்படையிலான கடவுள், மதம், சாதி இவை இருந்ததற்கான எந்த அறிகுறியும் கீழடியில் கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
படிக்க:
♦ அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
♦ திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
ஆரிய மரபுதான் இந்திய மரபு, ஆரியர்கள்தான் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று கதைவிட்டு வரும் பார்ப்பனக் கும்பலின் தலைமீது பேரிடியாகக் கீழடி ஆய்வுகள் வந்து இறங்கியுள்ளது. இந்த அகழாய்வானது, தமிழர், இந்தியர் வரலாறு மட்டுமல்ல, தென்னாசியாவின் வரலாறு முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு தன் பலம் தெரியாது என்பது போல் தமிழர்களாகிய நாம் நம் முன்னோர்களின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நம் வரலாறை இருட்டடிப்பு செய்துவந்தனர், தமிழ் மக்களின் எதிரிகள். ஆக, வரலாறு தெரியாதவனால் வரலாற்றை படைக்க முடியாது. எனவே நாம் நம் கீழடி வரலாற்றை பெருமிதத்தோடு கற்போம். அணிதிரண்டு வாரீர்… !
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
கோவை.
தொடர்புக்கு : 88 70 66 1931.
திருப்பூர் மாவட்டத்திலும் இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்துங்கள்