கமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணை அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் குண்டர் படையால் தாக்கப்பட்டதாக காங்கிரஸின் இளைஞர் அமைப்பு தேசிய மாணவர் சங்கம் (NSUI) தெரிவித்துள்ளது.

அகமதாபாத்தில் பால்டி பகுதியில் உள்ள ஏ.பி.வி.பி. அலுவலகத்தின் அருகே நடந்த போராட்டத்தின் போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள், செயற்பாட்டாளார்கள் போராடி வரும் வரும் சூழலில் ஜே.என்.யூ (JNU) மாணவர்களுக்கு எதிரான ஏ.பி.வி.பி (ABVP) நடத்திய தாக்குதலை கண்டித்து இந்த போரட்டத்தை நடத்தியதாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

என்.எஸ்.யூ.ஐ. பொதுச்செயலாளர் நிகில் சவானி தலையில் தடியால் தாக்கப்படுவதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்று காட்டுகிறது. காங்கிரஸ் தலைவர் ஹார்திக் பட்டேலுக்கு நெருக்கமானவரான சவானியின் மீது, போராட்டம் நடந்த இடத்தில் காவல்துறையினர் முன்பாகவே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதனை சமூக வலைத்தளங்களில் பரவலாக மாணவர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஸ்ரீவத்சா என்பவர் தனது டிவிட்டில், “ அகமதாபாத் ஏ.பி.வி.பி மற்றும் பி.ஒய்.ஜெ.எம் அமைப்புகளின் தலைவர் என்.எஸ்.யூ.ஐ-ன் (NSUI) நிகில் சவானியின் தலையில் இரும்பு கம்பியினால் எப்படி தாக்கினார் என்பதைப் பாருங்கள். கடுமையாக காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் முன்பேயே பிற ஏ.பி.வி.பியினர் என்.எஸ்.யூ.ஐயினரை தக்குகின்றனர். குஜராத்தில் பாசிசத்தின் ஆட்டம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

படிக்க :
இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !
♦ ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !

தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அகமதாபாத்தில் உள்ள வி.எஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் மாணவர்களின் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இரு அமைப்பினரும் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர், மேலும் இந்த மோதலில் இரு தரப்பிலிருந்தும் தலா ஐந்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காயமடைந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் (Press Trust of India) கூறியிருக்கிறது.

என்.எஸ்.யூ.ஐ பொதுச்செயலாளர் நிகில் சவானி.

தங்களது உறுப்பினர்கள் ஏபிவிபியால் “கொடூரமாக தாக்கப்பட்டனர்” என்று என்.எஸ்.யூ.ஐ ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது. அரசாங்கத்தின் “பாசிச சக்திகளுக்கு” எதிராக நாடு ஒன்றுபட வேண்டுமென்று அது கேட்டுக் கொண்டது.

என்.எஸ்.யூ.ஐ-ன் போராட்டம் அமைதியாகவே நடைபெற்றது என்று மற்றொரு என்.எஸ்.யூ.ஐ. பொதுச் செயலாளர் பவிக் சோலங்கி கூறினார். இருப்பினும், “ஏபிவிபியைச் சேர்ந்த குண்டர்கள் திடீரென உருட்டுக்கட்டைகள், கற்கள் மற்றும் இரும்புக்குழாய்களை கொண்டு எங்களைத் தாக்கினார்கள். போலீஸ் முன்னிலையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சவானி உட்பட எங்களது ஐந்து உறுப்பினர்கள் காயமடைந்தனர்” அவர் மேலும் கூறினார்.

ஜனவரி 5-ம் தேதி டெல்லியில் உள்ள ஜே.என்.யுவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக என்.எஸ்.யூ.ஐ அமைப்பினர் ஏபிவிபி அலுவலகத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாட்ஸ்அப் மூலம் தாக்குதல் நடத்த ஏபிவிபி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளது தி வயர் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

என்.எஸ்.யூ.ஐ செயற்பாட்டாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் தனது டிவிட்டர் பதிவில் “திடமாக இருங்கள் பதில் வன்முறையில் ஈடுபட வேண்டாம். இந்த குண்டர்களுக்கு நல்லது எதுவும் தெரியாது. ஒருபோதும் அவர்களின் நிலைக்கு கீழ் இறங்க வேண்டாம். நம்முடைய இந்தியாவின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு துணை நிற்போம்.” என கூறியுள்ளார்.

தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புகாரளிக்கச் சென்ற காங்கிரஸ் மாணவர் சங்கத்தினரிடமிருந்து புகாரை வாங்க வெகுவாக மறுத்திருக்கிறது, குஜராத் போலீசு. கடும் போராட்டத்திற்கு பின்னரே புகாரை எடுத்துக் கொண்டது. படிப்படியாக அமல்படுத்தப்படும் மோடியின் இந்து ராஷ்டிரத்தில் ஜனநாயகத்துக்கு மதிப்பில்லை என்பதும், இனி குண்டாந்தடிகளுக்குத்தான் மதிப்பு என்பதையுமே படிப்பினையாக நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது மோடி அரசு!


சுகுமார்
நன்றி : தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க