சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்

இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ''சகாக்களின் சங்கமம்'' நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்கறிஞர் அருள்மொழி, தோழர் கனகராஜ், தோழர் மகிழ்நன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.

டதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் ”சகாக்களின் சங்கமம்” நிகழ்ச்சி கடந்த ஜனவரி-5 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ”குடியுரிமை சட்டம்: ஏன், எதற்கு, எப்படி?” என்ற தலைப்பில் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்களும்; ”வெங்காய பொருளாதாரமும், குடியுரிமை மறுப்பும்…” என்ற தலைப்பில் தோழர் கனகராஜ் அவர்களும்; ”என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் தோழர் மகிழ்நன் அவர்களும் உரையாற்றினர். இந்த சிறப்புரைகளின் காணொளிகள்!

பாஜக கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கான இந்து ராஷ்டிரத்தின் மனுதர்ம சட்டங்கள்தான் என்பதை வழக்கறிஞர் அருள்மொழி விவரித்துப் பேசினார்!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் மோடி அரசு எவ்வாறு தனது அரசின் தோல்விகளை மூடி மறைக்கிறது என்பதை தோழர் கனகராஜ் விளக்கினார்.

தரீதியாக நம்மை பிளவுபடுத்தும் பாஜக-வை வர்க்கமாய் ஒன்றிணைந்து எதிர்த்தால்தான் சி.ஏ.ஏ. – என்.ஆர்.சி போன்ற மக்கள் விரோத திட்டங்களை உடைக்க முடியும் என்பதை வரலாற்றுரீதியான அனுபவங்களிலிருந்து விரிவாக விளக்கினார் தோழர் மகிழ்நன்.

ன்றைய பாசிச அரசியல் சூழலை ஹிப் ஹாப் பாடல் வடிவில் பாடினார் இந்த இளைஞர்.


வினவு களச் செய்தியாளர்
தொகுப்பு :
வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க