அஞ்சாதே ! போராடு ! மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் ! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு !

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் !
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !
அஞ்சாதே போராடு !

மக்கள் அதிகாரம் மாநாடு !

நாள் : 23 பிப்ரவரி, ஞாயிறு மாலை 5 மணி,
இடம் : திருச்சி உழவர் சந்தை.

மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை :
தோழர் சூர்யா, கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தலைமை :
தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

தொடக்க உரை :
நீதிபதி கோபால கவுடா, மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

உரையாற்றுவோர் :
திரு. சசிகாந்த் செந்தில்,
ஐ.ஏ.எஸ்., (ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர்)
வழக்கறிஞர் பாலன், பெங்களூரு
தோழர் தியாகு , பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
திரு. லெனின் பாரதி, திரைப்பட இயக்குநர்
திரு. பாலாஜி, ஜெ.என்.யூ மாணவர் (JNUSU முன்னாள் தலைவர்), டெல்லி
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கலை நிகழ்ச்சி :
ம.க.இ.க. கலைக்குழு

நன்றியுரை :
தோழர் செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

வினவு நேரலை !

இரண்டாம் பாகம் :

முதல் பாகம் :

காணத் தவறாதீர்கள் !

முகநூல் நேரலை :

3 மறுமொழிகள்

  1. நம்பிக்கையூட்டிய மாநாடு…
    மக்கள் அதிகாரமே-மக்களிடமே அதிகாரமே தீர்வு.
    வாழ்த்துக்கள்!
    மாநாட்டு திடலில் முன்கூட்டியே இஸ்லாமிய தாய்மார்கள், பெண்கள்,ஆண்கள்,குழந்தைகளின் தொடர் போராட்டம் நல்ல முன்னுதாரணம். அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.
    அவர்களுக்கு,பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.நம் ஆதரவும்.

    “எதிர்க்கப்படாத ஆதிக்கம் பாசிசமாக மாறும்! “

  2. எழுந்து நில்லு, எழுந்து நில்லு, எழுந்து நில்லு!!!!

    எழுந்து நில்லு,

    துனிந்து நில்லு

    அடக்குமுறைய எதித்து நில்லு!

    எழிந்து நில்லு, எழுந்து நில்லு, எழுந்து நில்லு!!

    நீ சுகமாய் வாழ்ந்தது போதும்,

    உன் தலமுற சுகமாய் வாழ…. எழுந்து நில்லு,
    துனிந்து நில்லு,
    எதித்து நில்லு!!

    குண்டர்கள் கூட்டம்,

    அது நாட்ட அழிக்கிற கூட்டம்!!

    உன்ன உன் நாடு அழைக்குதூ..

    உன்ன உன் நாடு அழைக்குதூ..

    எழுந்து நில்லு,

    துனிந்து நில்லு,

    அடக்குமுறைய எதித்து நில்லு!!

    சங்கி கூட்டம்…
    சங்கி கூட்டம்… சந்தி சிரிக்க போவுது..

    எழுந்து நில்லு, துனிந்து நில்லு, எதித்து நில்லு!!

    கொழந்த புள்ளைய…
    கொழந்த புள்ளைய…
    ரேப்பு பன்னுது.

    ஏழை எளிய மக்கள வெட்டி சாய்க்குது!!

    சின்ன வனிகன வாட்டி வதைக்குது!!!

    கொள்ள கார கும்பல சட்டம் போட்டு காக்குது!!

    குற்றம் செஞ்ச கூட்டத்த கூட்டி வச்சு காக்குது!!

    தொழுவும் இடத்த இடித்து தள்ளுது!!

    நீதிமன்றத்த வெலைக்கு வாங்குது!!

    எதித்து தீர்ப்பு சொன்னா ஜர்ஜ கொல்லுது!!

    எழுந்து நில்லு!! துனிந்து நில்லு, அடக்குமுறைய எதித்து நில்லு!!

    நல்லவுங்க வாழ முடியல…

    நாலுபேரு கூடி நின்னு பேச முடியல!!

    எழுந்து நில்லு, துனிந்து நில்லு, அடக்கு முறைய எதிர்த்து நில்லு!!

    அது உன் வீரம் முன்னே குணிந்து போகும் கோழைகள் கூட்டம்!!

    எழுந்து நில்லு, துனிந்து நில்லு, அடக்குமுறைய எதித்து நில்லு!!

    இது கயவர்கள் போட்ட கருப்பு சட்டம்!!

    மனித குலத்த நசுக்கி வைக்கும் கருப்பு சட்டம்!!

    அரசாலும் ஆனவத்தாலே ஆடுது அந்த ஆனவ கூட்டம்!!

    உன் வீரம் முன்னே ஆடி ஓடி அடங்க போவுது….!!

    வெகு சீக்கிரம்…
    உன் வீரம் முன்னே ஆடி ஓடி அடங்க போவுது….!!

    சங்கி கூட்டம் சந்தி சிரிக்க போவுது!!

    எழுந்து நில்லு, துனிந்து நில்லு!!

    என்னார்சிய எதித்து நில்லு!!
    என்னார்சிய எதித்து நில்லு!!
    என்னார்சிய எதித்து நில்லு!!
    என்னார்சிய எதித்து நில்லு!!
    என்னார்சிய எதித்து நில்லு!!

  3. முஸ்லிம், முஸ்லீம்கள் என்று கூக்குரல் போடும் அரசியல் வாதிகளே! உங்கள் பகுத்தறிவை கொஞ்சம் பயன் படுத்துங்கள். முஸ்லிம்கள் நேராக வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. பார்ப்பணர்கள் போன்று பாரசீகம் ஆண்ட மன்னர்களால் துரத்தப்பட்ட அகதிகளும் அல்ல. முஸ்லிம்கள் இங்கே ஆரம்ப காலம் முதலே மண்ணின் மைந்தர்களாக, பூர்வீக திராவிட இனமாக, வாழ்ந்து வருகிறவர்கள். இடையிலே இங்கே நுழைந்த பார்ப்பணர்கள் தங்கள் ஜாதிகள் உள்ள மதத்தை புகுத்தி மக்களை பிரித்து அடிமைப் படுத்தினார்கள். நல்ல தொரு வாய்ப்பாக பாரசீக முகலாலயர்கள் இங்கே படை எடுத்து வந்து ஆட்சியைப் பிடித்தார்கள். நீண்ட காலம் ஆண்டார்கள். பாரதத்தில் இருக்கும் ஜாதியை ஒழிக்க முயன்றார்கள் முடியவே இல்லை. பின்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தும் ஜாதியை ஒழிக்க முடியவே முடியலே. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆதிக்க ஜாதிகள்தான் ஆட்சியை பிடித்துக் கொண்டார்கள்.

    ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நன்நெறியும் “ஒன்றே இறைவன்” “அவனிற்றி யாருமில்லை” என்கின்ற உயரிய கொள்கையும் கொண்ட புனித இஸ்லாம் மார்க்கம் இங்கே வாழ்ந்தவர்களை மிகவும் கவர்ந்தது. பாரதத்தில் வாழ்ந்த பகுத்தறிவு உள்ள மக்கள் எல்லோரும் முழு மனதுடன் விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம். ஜாதிக் கொடுமை களிலிருந்து நாங்கள் முழுவதுமாக சுதந்திரம் பெற்றோம். முஸ்லிம்கள் என்ற பெயர் பெற்றோம்.

    இதை அறியாத அறிவிலிகள்தான் இன்னும் மதத்தை பற்றியே பேசுகிறார்கள். இதை அறிந்ததனால் பார்ப்பணர்கள் முஸ்லிம்களை மிகவும் வெறுக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க