பெரம்பலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி என ரவுடியிசத்தை கட்டுப்படுத்தியும், இளைஞர்களுக்கு மறுவாழ்விற்கான வழிகளை ஏற்படுத்தி மக்களின் அச்சத்தை போக்குவது தொடர்பாக 23.06.2020 அன்று காலை 11 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சிபிஎம் மாவட்ட தலைவர் தோழர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் ஞானசேகரன், மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் மற்றும் பெரம்பலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் சோபன் பாபு மற்றும் தோழர் வெங்கடாச்சலம், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட தலைவர், தோழர் தாமோதரன், மற்றும் தோழர் ராஜேஷ் குமார், தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஐயா ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ஐயா ராஜேந்திரன், டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் மன்றம் தோழர் ஆனந்தராஜ், திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர் கலையரசி, எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் திரு ஷாஜகான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, திரு அபூபக்கர் சித்திக், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி. தோழர் செல்வமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் திரு. ஷர்புதீன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் கருணாநிதி, சி.ஐ.டி.யு தோழர் அகஸ்டின், திராவிடர் கழகத்தின் தோழர் தங்கராசு மற்றும் தோழர் ஆறுமுகம், பாளையம் தேமுதிக திரு. ஸ்ரீதரன், ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

மனுவில், “பெரம்பலூர் ரவுடிகளின் கூடாரமாக மாறி வருவதையும் மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் கொலை சம்பவங்களை காவல்துறை ஏராளமான ரவுடிகளை கைது செய்து வருகிறது. இந்த ரவுடிகளின் குற்றப் பின்னணி கண்டறிந்து பிணையில் வரமுடியாத அளவுக்கு கடுமையான சட்டப்பிரிவுகளில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மீட்டு மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்து தருமாறும், குற்றவாளிகளுக்கு துணைபோன காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அவர், “இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருப்பதும், குடிவெறி, கஞ்சா போதையில் சுற்றி திரிந்து ரவுடிகளாக மாறி வருகின்றனர். ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக” தெரிவித்தார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

காணொளி மூலம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மனுவை முழுமையாக படித்து விட்டேன். நீங்கள் கூறியிருக்கும் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், ரவுடிகளை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 35-க்கும் மேற்பட்ட தோழர்கள், தலைவர்கள் பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றது ரவுடிகளை கட்டுப்படுத்த மக்கள் மேற்கொள்ளும் முதல்கட்ட நடவடிக்கையாக உள்ளது.

படிக்க:
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !
♦ ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !

இதற்கு முன்பு மக்கள் அதிகாரம் சார்பாக நகர் முழுவதும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தவும், அதற்கு போலீஸ் உடந்தையாக இருந்தது, என சுவரொட்டி பிரச்சாரம் செய்தோம். காவல் துறையினரே அதை கிழித்து ரவுடிகளுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதையும் வெளிப்படுத்திக் கொண்டனர். பெரம்பலூர் கொலை நகரமாக மாறி வருகிறது என திமுக மாவட்ட செயலாளர் தனது கண்டன அறிக்கையை கடந்த 10ஆம் தேதி வெளியிட்டுள்ளார். சிபிஎம் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர் செல்லத்துரை கட்சியின் சார்பாக புகார் மனு தலைமை செயலர் வரை அனுப்பியுள்ளார். வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் பல ரவுடிகளால் பாதிப்புகளுக்கு ஆளாகி ,குடும்ப உறவுகளை இழந்து அச்சத்தில் உள்ளனர்.

கல்வி, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைக்கு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். குடிவெறி, கஞ்சாபோதையை மறக்க பொழுதுபோக்கு அம்சங்களான உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள், படிப்பகங்கள் என உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து ரவுடிகளுக்கு எதிராக போராடுவது, மக்களின் அச்சத்தை போக்க செயல்பட வேண்டும் என கூறினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 94454 75157.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க