அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவலை ஏற்று விவசாயிகளை ஒடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை மத்திய அரசாங்கமே திரும்பப் பெறு! என்கிற முழக்கத்தை முன்வைத்து, போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து, கையெழுத்து இயக்கமும் அதன் தொடர்ச்சியாக ஜூலை 27-2020 அன்று தமிழகம் முழுவதும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் மற்றும் பல்வேறு கட்சிகள், ஜனநாயக சக்திகள் இணைந்து மதுரை ஒத்தக்கடையில் ஜூலை 27 அன்று காலை 10.30 மணி அளவில் கருப்புக் கொடி ஏந்தி மனிதச் சுவர் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் தோழர் சரவணன் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ் ஆர்ப்பட்டத்தைத் தொடங்கி வைத்தார். மதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு மாரநாடு முன்னிலை வகித்தார். சி பி எம் -ன் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர் கலைச்செல்வன், ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த தோழர் விடுதலைவீரன் ஆகியோர் பங்கேற்று கன்டன உரையாற்றினார்கள். திரு இளங்குமரன் (மதிமுக) நன்றியுரையாற்றி ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எழுச்சி முழக்கத்தோடு ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள்..
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை, யா. ஒத்தக்கடை.
தொடர்புக்கு : 63832 43495.