2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு 2021-ல் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டனர். 2020-ல் 1.53 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டதை விட இது 7.2% அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 29 அன்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் பற்றிய தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை சுமார் 1.39 லட்சமாக இருந்தது.
2021 ஆம் ஆண்டில், தற்கொலை விகிதம் – ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை – 12 ஆக இருந்தது. இது 1967 ஆம் ஆண்டிலிருந்து தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகளின் அதிகபட்ச விகிதமாகும். இதுவரை, நாட்டில் 2010-ம் ஆண்டுதான் அதிக தற்கொலை விகிதம் – 11.3 – பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2021-ல் 22,207 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 18,925 பேர், மத்தியப் பிரதேசத்தில் 14,965 பேர், மேற்கு வங்கத்தில் 13,500 பேர் மற்றும் கர்நாடகாவில் 13,056 பேர். இந்த ஐந்து மாநிலங்களும் சேர்ந்து நாட்டில் 50.4% தற்கொலைகளால் இறந்ததாக அறிக்கை கூறுகிறது.
படிக்க : மகாராஷ்டிரா: 137 விவசாயிகள் தற்கொலை – கண்டுகொள்ளாத அரசு!
கடந்த ஆண்டு, கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது என அறிக்கை குறிப்பிடுகிறது. மொத்த தற்கொலை வழக்குகளில் அவர்கள் 33.2% மற்றும் 18.6% ஆக உள்ளனர்.
தொழிலைப் பொறுத்தவரை, தினசரி ஊதியம் பெறுபவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். 42,000 வழக்குகளில், 2021-ல் பதிவுசெய்யப்பட்ட 1,64,033 தற்கொலை பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் தினசரி ஊதியம் பெறுபவர்.
2020-ஆம் ஆண்டிலும், தற்கொலையால் இறந்தவர்களின் அதிகபட்சமாக 153,052 பேரில் தினசரி ஊதியம் பெறுபவர்கள் 37,666 பேர். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது ஆயிரக்கணக்கான தினசரி ஊதியம் பெறுபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்ற தரவு குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 5,563 விவசாயத் தொழிலாளர்கள் உட்பட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 10,881 பேர் தற்கொலைகளால் இறந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
“2021 ஆம் ஆண்டில் மொத்தப் பெண்களில் 51.5% குடும்பப்பெண்கள் [45,026 இல் 23,179] மற்றும் தற்கொலை செய்து கொண்ட மொத்த பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 14.1% [1,64,033 இல் 23,179]” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
படிக்க : கொரோனா ஊரடங்கு 2020 : தினக்கூலிகளின் தற்கொலை விகிதம் இரட்டிப்பு
கொரோனாவிற்கு முன்பும் ஜி.எஸ்.டி வரி – பணமதிப்பழிப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம் சிறுதொழிலளை அழைத்தது. கோரோனா பெரும்தொற்று காலங்களில் உழைக்கும் மக்களை கைவிட்டது மோடி அரசு. முறையான மருத்துவ உதவிகள் வழங்கவில்லை; கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை. திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். நடந்தே சொந்த ஊருக்கு சென்ற அவலமும் நிகழ்ந்தது. பல்வேறு மருத்துவ கட்டமைப்பு வசதியே இல்லை என்பது அம்பலமானது. வட இந்தியாவில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் குறைபாட்டால் பலவேறு மரணங்கள் நிகழ்ந்தன என்பதை நாம் அறிவோம். எனினும் அதானி அம்பானிகளின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
தொடர்ந்து உழைக்கும் மக்களை வஞ்சித்து கார்ப்பரேட் முதலாளிகளை வாழவைக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை!
புகழ்