த்தரப்பிரதேச மாநிலத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance) நிறுவனத்தில் தவணைத் தொகையை வசூலிக்கும் வேலை பார்த்து வந்த ஊழியர், பணி அழுத்தம் காரணமாக தன்னுடைய மனைவிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட தருண் சக்சேனா (Tarun Saxena) தனது பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்த அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் வீட்டு வேலைக்கு வந்த நபர்தான், தருண் இறந்து கிடந்ததைப் பார்த்து மற்றவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தருண் தனது மனைவிக்கு எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில், “நான் முடிந்த அளவு முயன்றும் கூட நிறுவனம் அளித்த இலக்கை அடைய முடியவில்லை. ஒரு சில காரணங்களால் சில நிலுவைகளைப் பெற முடியவில்லை. அதனால் என்னுடைய மேலாளரிடம் அவகாசம் வழங்குமாறு கேட்டேன். ஆனால், மேலாளர் முடிந்தால் இலக்கை அடைந்துவிடு; இல்லையேல் வேலையை விட்டுச் சென்றுவிடு என்று கூறினார்” என்று தன்மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒருபுறம் வேலை போய்விடுமோ என்கிற பயம், மறுபுறம் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் போன்றவற்றாலும், வேலை அழுத்தம் காரணமாகவும் 45 நாட்களாகத் தூங்கவில்லை. எப்போதாவது தான் சாப்பிட முடிந்தது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டேன்” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “எனது குழந்தைகளுக்கு இந்த ஆண்டு முழுவதுக்குமான கல்விக் கட்டணத்தை செழுத்திவிட்டேன். எனது குடும்பத்தினருக்கு இரண்டாவது மாடியில் வீடு கட்டிக் கொடுத்தால் இனிமேலாவது அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள். நான் இறந்த பிறகு தனது காப்பீட்டுத் தொகையை குடும்பத்திற்கு வழங்கிவிடுங்கள். இவர் (மேலாளர்) தான் என் மரணத்திற்குக் காரணம். அவர் மீது போலீசில் புகார் அளித்து விடுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள்..” என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


படிக்க: இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்


கடந்த வாரம் புனேவில் உள்ள எர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) நிறுவனத்தில் பட்டயக் கணக்காளராக பணியாற்றிய 26 வயதான அன்னா செபஸ்டியன் பேராயில் (Anna Sebastian Perayil) தனக்குக் கொடுக்கப்பட்ட பணி அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இறந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் வேலை அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், லாபத்திற்காகவும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கூடுதல் வேலையினை கொடுத்து மன அழுத்தத்திற்கு ஆளாக்கி அவர்களைக் கொலை செய்து வருகின்றன. வேலையின்மை மற்றும் வேலை அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வது என்பது அதிகரித்து வருகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க