கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03-08-2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்தும் !
  • வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுத் துறையினரையும்,
    சி.ஏ.ஏ போராட்டத்தில் சிறைபடுத்திய இஸ்லாமியர்களையும் உடனே விடுதலை செய்யக் கோரியும்!
  • கருப்பர் கூட்டம் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்!
  • கடவுளுக்காக சவுண்டு விடும் பாசிச பா.ஜ.க.-வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03.08.2020 அன்று காலை 11:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் உமாபதி, தமிழ் தேச மக்கள் முன்னணியின் தோழர் செந்தில் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க