PP Letter head

பத்திரிகைச் செய்தி

06.08.2020

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

ன்பார்ந்த நண்பர்களே!

வணக்கம். கீற்று இணைய தளத்தில் 4-8-2020 அன்று ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் “சீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது திட்டமிட்டு அவதூறு கூறப்பட்டுள்ளது.

“சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள். அதற்குத் தலைமையின் எதிர்வினை “அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்று தகவல் தெரிவித்தவர்களிடமே கேள்வி கேட்டதுதான்.”

இது ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த திரு.ஜெயகாந்த்சிங் என்பவர் அவர் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்டபோது ‘சூறாவளி’ எனும் பெயரில் அவர் நடத்திய வலைத் தளத்தில் எழுதிய அவதூறுதான். பல வருடங்களாக சீந்துவாரற்று கிடந்த அவதூறை தூசி தட்டி எடுத்து வேறு இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். தான் எழுப்பிய மாபெரும் குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதாரத்தைக் கூட இத்தனை ஆண்டுகளாக ஏன் திரட்டவில்லை என அவருடன் சேர்ந்து எழுதும் ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவினர் கேள்வி கேட்காமல் அந்த அவதூறை அப்படியே வாந்தி எடுத்துள்ளனர்.

எவ்வித முகாந்திரமும் இல்லாமல் போகின்ற போக்கில் அவர் கோடிகளில் சொத்து சேர்த்துள்ளார் என்று இவர்கள் சொல்வதற்கும் பா.ஜ.க. பாசிஸ்டுகளின் பிரச்சார முறைக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் போலீசு எப்.ஐ.ஆர் போட்டுவிட்டால் குற்றசாட்டப்பட்டவர் தான் இனி, தான் தவறு செய்யவில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமாம்.

இந்த காவி பாசிஸ்டுகளின் ‘நீதி பரிபாலன’ முறையை தான் இவர்களும் முன்வைக்கிறார்கள். நாங்கள் குற்றஞ்சாட்டிவிட்டோம், முகாந்திரம், ஆதாரம் என்று யாராவது அவர்களிடம் கேட்டால், குற்றம் செய்யவில்லை என நீங்கள் நிரூபியுங்கள் எனத் திருப்பி கேட்கிறார்கள்.

தோழர் ராஜு தன் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாரும் தெரிந்து கொள்ளக் கூடிய வெளிப்படையானதுதான். திரு.ஜெய்காந்த்சிங்கும் தோழர் ராஜுவும் பல்வேறு போராட்டங்களில் அக்காலத்தில் இணைந்து ஈடுபட்டது விருதாச்சலம் வட்டாரம் அறிந்ததே. அதுமட்டுமன்றி தோழர்.ராஜுவின் குடும்பத்தில் ஒரு நபராகவும் அவர் பழகி வந்துள்ளார். அப்பேற்பட்ட ‘தோழரால்’ ஆதாரத்தைக் காட்ட முடியவில்லையேன்றால் என்னவென்பது. குற்றச்சாட்டு வைத்த ஜெயகாந்த் சிங்கிற்கு இது பொய் என்பது நன்கு தெரியும்.

படிக்க:
அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தினமலர் போன்று அவதூறுகளை அவிழ்த்துவிட்டால், மக்களுக்காக பணியாற்றும் அமைப்புகளின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும்தான் அது பயன்படுமே ஒழிய, சொல்பவர்களின் நோக்கத்திற்குகூட அவை பயனளிக்காது. இதை சொல்வதற்கு காரணம் பொதுவாழ்க்கையில் குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும், விலைமதிப்பில்லாத ஒரே சொத்து அவர்களின் நேர்மைதான். அதனை அவதூறால் சிதைக்க முயல்வது எத்தகைய அயோக்கியத்தனம்.

கீற்று இணையத் தளம் என்பது முற்போக்கானவர்கள், பகுத்தறிவாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் அறியப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மீதும், அமைப்பிலுள்ள தோழர்கள் மீதும் அரசியல் ரீதியாக அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை, தனிநபர்களாக நாங்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. எனினும் கீற்று ஓர் நேர்மையான தளம் என்றால் மக்களுக்காக செயல்படும் அமைப்பின் தலைவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம், அடிப்படை ஆதாரம் என்ன என்பதைக் கேட்டு தீர விசாரித்த பின்னர் தான் இந்த கட்டுரையை பதிப்பித்து இருக்க வேண்டும்.

மேலும் பல்வேறு இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் சங்கமமாக இருக்கிற கீற்று இணையதளம் தோழர் ராஜு பற்றி விசாரித்து தெரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. எனவே இது போன்ற அவதூறுகளை பரப்புவதை கீற்று இணையத் தளம் இனியாவது நிறுத்திக் கொள்ளவும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மீது அவதூறாக வெளிவந்த பகுதிகளை மேற்கூறிய கட்டுரையில் இருந்து உடனே நீக்கவும் வேண்டும். தங்களது தவறை பரிசீலிக்க வேண்டும்.

தோழர் ராஜு பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர்களிடம் அதுதொடர்பாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் கேளுங்கள். அதை எடுத்துக் கொண்டு விருத்தாசலம் வாருங்கள். தோழர் ராஜு அவர்களின் சொத்து விபரங்களை பற்றியும், வாழ்வாதாரத்திற்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றியும், எல்லா வகையிலும் பதில் அளிக்க அவர் எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் குழு
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

3 மறுமொழிகள்

 1. ‘எதிரி என்றுமே எதிரிதான், நண்பன் தான் பரிசீலிக்கப்பட வேண்டியவன் ‘என்ற வாக்குக்கு உகந்த சங்கதியாக உள்ளது…

 2. ஐயா ஆம்பள்ளி & கோ. கீற்றுத் தளத்தில் எழுதிய கட்டுரையின் மீது சில விமர்சனங்கள்…

  1. //அவ்வாறு வழிகாட்டப்படும் நூற்றுக்கணக்கான தோழர்கள்//

  இந்த இடத்தில் தோழர்களாக இருப்பவர்கள்…

  //தமது வெகுளித்தனமான ஆதரவாளர்களையும், அமைப்பிலுள்ள தமது கொத்தடிமைகளையும் நம்ப வைப்பதற்காக//

  இந்த இடத்தில் கொத்தடிமைகளாக மாறிவிட்டார்கள்…

  //புரட்சிகர உணர்வோடு இணைந்துச் செயல்பட முன்வரும் இளைஞர்களை//

  கொத்தடிமைகள் இந்த இடத்தில் புரட்சி உணர்வான இளைஞராகிவிட்டனர்…

  //இந்த விபரங்கள் தெரியாமல் இவர்கள் முற்போக்கான புரட்சிகரத் தன்மை உடையவர்கள் என்று அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்//

  புரட்சி உணர்வு மிக்க இளைஞராக இருந்தவர்கள் இந்த இடத்தில் முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாக மாறிவிட்டனர்…

  //உள்ளே இருக்கும் புரட்சிகர சக்திகளும் அதனை புரட்சிகர அமைப்பாக அங்கீகரிக்கும் ஆதரவாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்//

  கொத்தடிமைகள், முட்டுக்கொடுப்பவர்கள் இறுதியில் புரட்சிகர சக்தியாக மாறிவிட்டனர்…

  இந்த பக்கம் ஒரு உருட்டு அந்த பக்கம் ஒரு உருட்டு! ஈயம் பூசனமாதிரியும் இருக்கனும், ஈயம் பூசாத மாதிரியும் இருக்கனும். சினிமா காமெடி அளவுக்குதான் இந்த கட்டுரை வொர்த்து. ஆனால் இதில் ஒரு கண்ணோட்டம் வெளிப்படுகிறது, அதை கண்டிக்க வேண்டும். அதாவது அணிகளை முட்டாளாக கருதும் சீரழிந்த அதிகாரத்துவ திமிர்தனத்தையும், மக்களை விட தன்னை பெரிய ‘அறிவாளியாக’ நினைத்துக்கொள்ளும் தனிநபர்வாத சிறுபிள்ளை தனத்தையும்.

  2. //அத்தகைய தோழர்களை அவமதித்து வெளியேற்றி பின்னர் நடுத் தெருவில் நிறுத்தி விடும்//

  ஓ! இது தான் உங்க பிரச்சனையா? உலக வரலாற்றில் மக்கள் நலனுக்காக பலர் தமது இன்னுயிரை தியாகம் செய்தனர், செய்து வருகின்றனர். அவர்கள் யாரும் எதையும் “எதிர்பார்ப்பதில்லை”. நீங்கள் வீசேசமானவர் போல! நல்லது! இது ஒரு குறுங்குழுவாதியின், அற்பவாதியின் புலம்பல்! அதற்குமேல் ஒரு வெங்காயமும் இல்லை.

  3. //சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள். அதற்குத் தலைமையின் எதிர்வினை “அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்”, என்று தகவல் தெரிவித்தவர்களிடமே கேள்வி கேட்டதுதான்//

  அப்பொழுது நீங்க இந்த அமைப்புகளில் இருந்தீங்களே (‘அது வேற வாய்’ என்று சொல்கிறீர்களா?), நீங்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள் என்பதை விளக்கினால் நல்லாயிருக்கும். உங்களுக்கு பித்தம் அதிகரித்துவிட்டது என நினைக்கிறேன்.

  4. //குற்றம் சாட்டியவர்களையே அதை நிரூபிக்கச் சொல்வது என்பது குறைந்தபட்ச ஜனநாயக நேர்மை கூட இல்லாத செயல், புரட்சிகர நடைமுறையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.//

  ஸப்பா முடியல! ஆதாரம் இருந்தால் மட்டும் தான் நாம் ஒருவர் மீது குற்றமே சாட்ட முடியும்! குற்றம் சாட்டிய பிறகு ஆதாரத்தை தேட வேண்டும் என்பது வடிவேல் சொல்வது போல் “புதுசாயில்ல இருக்கு!”

  5. பிறகு இந்த கட்டுரையில் ஒரு முறைக்கு பல முறை படித்து தேவையற்ற விசியங்களை நீக்க முயற்சித்து பாருங்கள், அப்பொழுது தான் தெரியும் எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று.

  6. // ஒரு புரட்சிகர அமைப்பின் நடைமுறையின் அடிப்படையில் பரிசீலிக்கும் போதுதான் இந்தச் சீரழிவின் முழு பரிமாணமும் தெளிவாகும். ஒரு புரட்சிகர தொழிற்சங்கத் தலைமைக் குழுவில் இருக்கும் ஒருவரது சொந்த வாழ்க்கையும் அவரது நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் அரசியல் தலைமையாலும், தொழிற்சங்கத் தலைமையாலும் மாதாந்திர அடிப்படையில் வழிகாட்டப் படுகின்றன, வழிகாட்டப்பட வேண்டும்.//
  //திரு தங்கராசு என்ற தனிநபர் மட்டும் தொடர்புடைய விஷயம் இல்லை.//

  ஐயா நீங்கள் குமுதம் இதழுக்கு ‘கிசு கிசு’ எழுத போகலாம், பொருத்தமாக இருக்கும்.

  இப்படி கற்பனையில் பேசுவது தான் மார்க்சியமா? இது வரை நீங்கள் வாட்ஸப்பில் வெளியிட்டது, உங்களது பிளாகில் வெளியிட்டது என அத்தனையையும் படித்துள்ளேன். ஒரு சில விசியங்கள் மட்டும் (நூற்றுக்கு 5 விழுக்காடு இருக்கலாம்) பரிசீலிக்கும் வகையில் உள்ளது. மற்றபடி விசியமே இல்லை எல்லாமே ஏட்டுச்சுரைக்காய் தான். உங்களில் மனதில் தேன்றுவதெல்லாம் மார்க்சிய தத்துவமாகிவிடாது. நீங்க என்னாதான் உருண்டாலும், புரண்டாலும் ஒட்டுற ‘மண்ணு’ தான் ஒட்டும். போய் Complan குடியுங்க.

  இப்படிக்கு:
  கொத்தடிமை, பண்ணையடிமை, கூலி அடிமைகளில் ஒருவன், நிச்சயமாக ஆம்பள்ளி ஐயாவை போன்று எஜமானன், பண்ணையார், முதலாளிகளில் ஒருவன் நான் அல்ல!

  (உயிரை துட்சமாக கருதி பணியாற்றிக்கொண்டிருக்கும் தோழர்களை இழிவாக பேசும், உழைப்பை மதிக்க தெரியாத ஆம்பள்ளி போன்ற நபர்கள் இனி வைச்சு செய்யப்படுவார்கள்!)

  • அருமையாக சொன்னிங்க தமிழ் இந்த ஆம்புலன்ஸ் அன் கோவில் சில ஜால்ரா இருக்கு பாருங்க அதுங்க அவுங்கள மார்க்ஸாவே நினைத்து கொள்ளுதுங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க