புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த சாரம் என்ன ? அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்று விளக்குகிறார், பேராசிரியர் வீ. அரசு. பாருங்கள்... பகிருங்கள்...

மோடி அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து தமது இந்து ராஷ்டிரக் கனவுக்கும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் ஏதுவான ‘புதிய கல்விக் கொள்கையை’ நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனை தமிழக மக்களும், மாணவர் அமைப்புகளும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் விளைவாக ஒவ்வொரு முறையும் பின்வாங்கியுள்ளது மோடி அரசு.

எனினும், தனது திணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதன் உச்சமாக தற்போதைய கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, எவ்வித எதிர்ப்பும் இன்றி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பார்க்கிறது மோடி அரசு.

நாம் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டிய அவசியச் சூழலில் உள்ளோம். எனவே இப்புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த சாரம் என்ன ? அதில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன ? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு அதன் காணொளி உங்களுக்காக. பாருங்கள்… பகிருங்கள்…