மோடி அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து தமது இந்து ராஷ்டிரக் கனவுக்கும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் ஏதுவான ‘புதிய கல்விக் கொள்கையை’ நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனை தமிழக மக்களும், மாணவர் அமைப்புகளும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் விளைவாக ஒவ்வொரு முறையும் பின்வாங்கியுள்ளது மோடி அரசு.
எனினும், தனது திணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதன் உச்சமாக தற்போதைய கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, எவ்வித எதிர்ப்பும் இன்றி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பார்க்கிறது மோடி அரசு.
நாம் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டிய அவசியச் சூழலில் உள்ளோம். எனவே இப்புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த சாரம் என்ன ? அதில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன ? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு அதன் காணொளி உங்களுக்காக. பாருங்கள்… பகிருங்கள்…
“இதனை தமிழக மக்களும், மாணவர் அமைப்புகளும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் விளைவாக ஒவ்வொரு முறையும் பின்வாங்கியுள்ளது மோடி அரசு”
உங்கள் போராட்டங்களை கண்டு மோடியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் குலை நடுங்கிப் போய் விட்டார்கள்.
மேற்கண்ட வரிகளை படிக்கும் போது சிரிப்புதான் வந்தது. வினவு கும்பல் தான் ஒரு விளக்கெண்ணெய் கும்பல் என மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முப்பது சொச்சம் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அரசியல் ரீதியில் பெரும்பாலான காலங்களில் முக்கியத்துவம் இல்லாத ஒரு மாநிலம். இந்த மாநிலத்தில் இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத ஒரு கட்சி மத்தியில் அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்து நினைத்ததை செய்ய முடியும். முன்னர் நடந்தது இது. இப்போதும் நடக்கிறது. இனியும் நடக்கும். இதை நினைத்து தமிழ்நாட்டு மக்கள் உண்மையில் விசனப்பட வேண்டும். உள்ளூரில் வீர வசனம் பேசிக்கொண்டு பித்தலாட்டம் செய்யும் திராவிட கட்சிகள், கம்யூனிஸ்ட் சில்வண்டுகள் ஆகிய மண் குதிரைகளை நம்புவதற்காக அவர்கள் அச்சப்பட வேண்டும். பக்கத்து நாட்டு உதவியுடன் அவ்வளவு பெரிய ஆயுதப் போராட்டம் நடத்திய காஷ்மீரையே அதன் சுயாட்சியை பிடுங்கி இரண்டு துண்டுகளாக உடைத்து சட்டசபை கூட இல்லாத யூனியன் பிரதேசங்களாக மாற்றி கேவலப்படுத்தி இருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். உங்கள் போராட்டங்களை கண்டுதான் அவர்கள் கதி கலங்குகிறார்களா? அட விளக்கெண்ணைகளா!. பில்டப் கொடுப்பதற்கும் அளவு வேண்டாமா? தமிழ்நாட்டுக்கு வந்து போன மத்திய அமைச்சர் ஒருவர் இங்கே வீதிக்கு வீதி தெருநாய்களின் சத்தம் அதிகம் என சொன்னதாக படித்தேன்.
பெரியசாமி ஐயா அவர்களுக்கு,
NEP என்கிற ‘இந்தப்புள்ளியிலிருந்துதான் ‘பால்க்கனைசேசன்’ தொடங்கப்போகிறதோ?
(Balkanisation of Indian continent)