ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே!

பாசிச மோடி அரசு 2014-ல் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடித்துக்கொண்டிருந்தது. இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா சூழலில் மக்கள் வாழ்விழந்து செத்துக் கொண்டிருக்கும் போது பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத இந்த நிலையில் பெரும்பான்மை மாணவர்களின் கல்வியை பறித்து மாணவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.

மூன்று வயதில் இருந்தே மும்மொழிக் கல்வியை படிக்க வேண்டும் என்று செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்கின்றனர். ஏழை மாணவர்களின் அடிப்படை கல்வி கற்கும் உரிமையை பறிக்க 3, 5,8 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைத்து, “அவனவன் அப்பன் தொழிலை செய்யட்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் நவீன வடிவத்தில் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .

இனி அனைத்து கல்வி நிறுவனங்களும் தனியார் முதலாளிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். இவையின்றி உயர்கல்விக்கு செல்ல அனைத்து படிப்புகளுக்கும் (கலைக் கல்லூரிகள் உட்பட) நீட் போன்ற அகில இந்திய அளவில் பொதுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். அதே போல நாடு முழுவதும் ஒரே மாதிரி பாடமுறையின் மூலம் பல்தேசிய இனங்களின் கலை இலக்கிய பண்பாடுகளையும் ஒழிக்க பார்க்கிறது மோடி அரசு.

மேலும் கல்வியின் மீது மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இதில் பல ஜனநாயக அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கின்றனர். நமது கல்வி உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரையும் இந்த ஆர்ப்பட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறது புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி.

நம் அடுத்த தலைமுறையின் கல்வியைக் காக்க வீதியில் களமிறங்குவோம் !

இவண்:
பு.மா.இ.மு.
தருமபுரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க