ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! | தோழர் ராஜூ உரை

ஸ்டெர்லைட் ஆலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது. தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டம் மற்றும் 15 பேரின் உயிர் தியாகம் ஆகியவற்றின் பலன்

தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக சென்னை உயர்நீதி மன்றம் “தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரிதான்” என தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பிற்காக 15 பேர் தங்களின் இன்னுயிரை விலையாகக் கொடுத்துள்ளனர்.

100 நாள் நடந்த இப்போராட்டத்தின் தொடக்கம் முதலே, போராட்டத்தை சீர்குலைக்கவும், மக்களை பிளவுபடுத்தவும் அரசும் போலீசும் முயற்சி செய்தன. ஆனாலும் அவற்றையும் மீறி வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் போராடும் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் உறுதியுடன் எதிர்த்து நின்றனர். அதுமட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் “ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்!” என கோரிக்கை வைத்தது.

அச்சூழலில் பாஜக மட்டும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களை ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘தேசவிரோதி’ என்றும் முத்திரைகுத்த முயன்றது. பிற அரசியல்கட்சிகள் அனைத்தும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தான் ஜாலியன்வாலாபாக் படுகொலையையொத்த மே 22, தூத்துக்குடி படுகொலை அரங்கேறியது. இவ்வளவுக்கும் பின்னர்தான் தற்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பின் பின்னணியில் நடந்த விவகாரங்கள் குறித்து தெளிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ. காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க