ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத் சிங்கின் 114 – வது பிறந்தநாள் !

டலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பெரியகுப்பம் கிராமத்தில்
புமாஇமு தோழர். மணிகண்டன் தலைமையில் நடந்தது. இதில் கிராம மாணவர்கள், இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் போராட்ட வரலாறு பேசப்பட்டது. இதோடு நீட், புதிய கல்விக் கொள்கை, விவசாய மசோதா, மின்சார மசோதா என பாசிச மோடி அரசால் அவசர அவசரமாக போடப்பட்ட அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக உள்ள RSS-BJP கும்பலை விரட்ட நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

டலூர் மாவட்டம், கோ.பூவனூர் பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் உறுப்பினர் தோழர். கார்த்தி அவர்களின் தலைமையில் அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கோ.பூவனூர் கிராம மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தகவல்:
தோழர். மணியரசன் (மாவட்ட செயலாளர்)
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. – கடலூர்.
தொடர்புக்கு : 97888 08110

000

படிக்க :
♦ தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
♦ தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?

டலூரில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் 114- வது பிறந்த நாள் விழா !

கடலூர், பெரியார் சிலை அருகே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத்சிங்கின் 114-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பகத்சிங் இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்த வரலாறு மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை புரட்சிகரமாக எதிர்கொண்ட வரலாறு பற்றி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் உணர்வுபூர்வமாக உரையாற்றினர்.

தலைமை :
தோழர்.வெங்கடேசன், உறுப்பினர், புமாஇமு.

சிறப்புரை :
தோழர். வெண்புறாகுமார் (ஒருங்கிணைப்பாளர்), அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு.

தோழர்.பாலு (மண்டல ஒருங்கிணைப்பாளர்), மக்கள் அதிகாரம்.

இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்-97888 08110

000

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் – 113 – வது பிறந்தநாள்!

மாணவர்களே! இளைஞர்களே!!

# அதிகரிக்கும் வேலையின்மைக்கு முடிவுகட்டுவோம்!
# மாணவர்களை படுகொலை செய்யும் நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம்!
# இந்து ராஷ்டிரத்திற்கான புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!
# அவசர சட்டங்கள் மூலம் நாட்டை பாசிசமயமாக்கும் RSS-BJP கும்பலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்!

– ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் இன்று 28-09-2020 காலை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்ப்பாக கொடி ஏற்றி பகத்சிங் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் பாலன் தலைமை தாங்கினார்.

மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா, பு.மா.இ.மு. தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, ஆகியோர் இன்றைய சூழலில் ஏன் பகத்சிங் பாதையை முன்னெடுக்க வேண்டும் என்பதனை விளக்கியும், திருச்சியில் ஆர்எஸ்எஸ்- பிஜேபி கும்பலால் பெரியார் சிலை அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும் பேசினார்கள். அதனை தொடர்ந்து பு.மா.இ.மு. மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க