இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !

இழந்த நம் உரிமைகளை மீட்க எதிர்வரும் நவம்பர் 26 அன்று வீதியில் ஒன்றிணைந்து போராட அறைகூவல் விடுக்கிறார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !

0

கொரோனாவை ஒட்டி பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இப்படி ஒரு வேலை நிறுத்தம் நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று முதலாளிகளும் அரசு ஒரே குரலில் பேசுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் இப்படி ஒரு வேலை நிறுத்தம் அவசியமா ? ஏற்கெனவே வேலையிழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு வருமானம் இல்லாத சூழலில் ஒருநாள் வேலைநிறுத்தத்தின் காரணமாக அவர்களுக்கு இழப்பு ஏற்படாதா ?

நாடு முழுவதும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுவணிகர்கள், சிறு தொழில் முனைவோர், மாணவர்கள்  என அனைவரின் வாழ்வாதாரங்களே பறிபோகும் நிலையை இந்தக் கொரோனா சூழலைப் பயன்படுத்தி பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் உண்டாக்கியிருக்கிறது மோடி அரசு.

மொத்த வாழ்வாதாரத்திற்கு முன்னால் ஒருநாள் சம்பளம் பொருட்டல்லவே ! போராடிப் பெற்ற நம் உரிமைகளைப் பறித்து நம்மை நடைபிணங்களாக்கத் துடிக்கும் மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளை அம்பலப்படுத்தி, நவம்பர் 26 அன்று, நம் உரிமை மீட்க வீதியில் ஒன்றிணைந்து போராட அறைகூவல் விடுக்கிறார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !

பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க