போகிப் பண்டிகையில் தேவையற்றதை எரிக்கும் விதமாக வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்தது.
அதனடிப்படையில் கடந்த 13/01/2021 அன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. மாசிலாமணி அவர்களின் தலைமையில் வேளாண் சட்ட நகலெரிப்புப் போராட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
படிக்க :
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
இந்தப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி தோழர் பி. பழனிவேல் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், DYFI தோழர் சிவா, SFI மாவட்ட செயலாளர் தோழர் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் தோழர் பாலதண்டாயுதம், தோழர் மாரியப்பன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம், தோழர் ஆசாத் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
படங்கள்:
இந்தப் போராட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டு வேளாண் சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன.
தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்
தொடர்பு : 8220716242
இந்தப் பதிவின் தலைப்பு தஞ்சை மக்கள் அதிகாரம் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்ததைப் போன்ற பொருளைத் தருகிறது. ஆனால், செய்தியின் உள்ளே, இப்போராட்டத்தை அகில இந்திய கிஸான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தஞ்சை மாவட்டக் கிளை நடத்தியதாகப் பதிவாகியிருக்கிறது. எனவே, இப்பதிவிற்கு இடப்பட்டிருக்கும் தலைப்பு முரண்பாடனதாக மட்டுமல்ல, நாணயமற்றதாகவும் உள்ளது.
வணக்கம் பிரகாஷ்,
தலைப்பில் அப்படிப் போட்டு நாணயமற்ற வகையில் பெருமை தேடுவது எமது நோக்கமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் என்று எங்கும் குறிப்பிடவில்லை.. தஞ்சை மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பங்கேற்று அனுப்பிய செய்தி என்ற அடிப்படையிலேயே தலைப்பு அவ்வாறு போடப்பட்டது.
மக்கள் அதிகாரம் பங்கேற்று அனுப்பிய செய்தியாக இருந்தாலும், தலைப்பு இவ்வாறு இட்டிருப்பது தவறானது என்பதுதான் எனது கருத்து. தலைப்பு நான் குறிப்பிட்ட பொருளைத் தருவதாக இருக்கிறதா, இல்லையா என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்துவிட்டீர்கள்.