குடியரசு தினவிழா அன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த 30-01-2021 அன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருந்தது. இந்தப் போராட்டத்திற்கு எடப்பாடி அரசு அனுமதி மறுத்ததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் காஞ்சிபுரம் பகுதி தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

This slideshow requires JavaScript.

இதில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக பேசிய தோழர் திலகவதி, எடப்பாடியை மட்டுமல்ல, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசையும் நோக்கி “எடப்பாடி உண்பது சோறா? மலமா?” என்ற கேள்வியை எழுப்பினார். இது வெறும் அம்பானி, அதானிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல, கல்வி, மருத்துவம் போன்று அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிதி மூலதன கும்பல் இந்த விவசாயத் துறையும், குறிப்பாக கிராம பொருளாதாரத்தைச் சூறையாடி விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைப்பதன் மூலம், சோற்றுக்குக் கூட அந்நிய நாடுகளை கையேந்தி நிற்கும் பிச்சைக்காரனாக நமது மக்களையும், விவசாயிகளையும் நிற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக பேசினார்.

மேலும் அடையாள ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் மூலமாக இந்த அரசை நிர்பந்திக்க முடியாது, டெல்லியில் போராடும் விவசாயிகளை போல, உயிரேபோனாலும் பரவாயில்லை என்று அஞ்சாமல் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்த அரசுடன் நேருக்கு நேர் மோதும் போது மட்டும்தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியும். அதுவரை நமது போராட்டம் ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினார்.

இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்களும் பொதுமக்களும் இணைந்து கலந்து கொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் .

கில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து, டெல்லியில் விவசாயிகள் ஜன.26 நடத்திய டிராக்டர் பேரணியில் போலிசின் தாக்குதலை கண்டித்து  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 30.01.2021 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

இதில், சென்னை பகுதி மக்கள் அதிகாரம்  தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க