கொரோனா முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தற்போது இரண்டாம் அலையில் வடமாநிலங்கள் முழுவது மருத்துவமனைகளில் இடமில்லாம், ஆக்சிஜன் இல்லாமல், தடுப்பூசிகள் இல்லாமல், இறந்தவர்களை இடுகாட்டில் எறிக்கமுடியாமல் மிகபெரும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை அரசே தயாரிக்காமல், தனியார் நிறுவனங்கள் இலாபமிட்ட வைத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சிக்கும் அரசை  தோழர் அமிர்தா இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

000

பாகம் 1 : தூத்துக்குடியில் நடைபெற்ற லட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்ற 100 நாள் போராட்டத்தில் போலீசின் கொலை செயல்களை பற்றி கலந்தில் இருந்து பார்த்த தோழர் குருசாமி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அதன் பின் தூத்துக்குடி மக்களுக்கு நிகழ்ந்த சொல்லவொன்னா துயரங்கள் பற்றியும் இந்த காணொளியில் விளக்குகிறார்.

000

பாகம் 2 : ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நாடகத்தை அறங்கேற்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும் வேதாந்தம். அதற்கு துணைப்போகும் மத்திய-மாநில அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றத்தை தோழர் மருது மற்றும் தோழர் குருராமி ஆகியோர் இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்கள்.

000

பாகம் 3 : அரசியல் கட்சிகளை நம்புங்கள், தேர்தலில் ஓட்டுப்போட்டால் பிரச்சனை தீரும் என்று சொன்னவர்கள் தற்போது ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்களாம் என ஓட்டுக்கட்சிகள் கூறியதை அடுத்து தங்கள் கருத்துக்களை வேறுவிதமாக மாற்றும் பச்சோந்தி தனங்களை தோழர் மருது மற்றும் தோழர் குருராமி ஆகியோர் இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்கள்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

1 மறுமொழி

 1. 2018 இல் ஸ்டெரிலைட் ஆலையை மூடு –
  2021 இல் ஸ்டெரிலைட் ஆலையை அகற்று –

  என்பது சாலச் சிறந்த வேத வாக்கியம். வேதாந்தாவை அடித்து விரட்ட வந்த வேத வாக்கியம் . தோழர் குருசாமி அவர்களும், தோழர் மருது அவர்களும் மிக ஆழமாக உரையாடியிருக்கிறார்கள் .
  உயிரோட்டம் இருப்பதால் தான் உணர்வுகள் கொந்தளிக்கின்றன .

  – மருது பாண்டியன் –
  பத்திரிகையாளர் ( உசிலம்பட்டி )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க