தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா ஊரடங்கு காலக் கட்டத்தில் பெரும்பாண்மையான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்று. மேலும், தற்போது நிகழும் இந்த மோடி அரசின் காவி – கார்ப்பரேட் பாசிச சூழலில் தொழிலாளர் நல திருத்தச் சட்டங்கள் எனக் கொண்டு வந்து தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்க முயற்சிக்கிறது.
எட்டு மணிநேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் எனப் பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்த மே நாள் தியாகிகளின் வீரம் செறிந்தத் தியாகத்தை கருத்தில் கொண்டு இந்த கொரோனா சூழலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாழ்வை சூறையாடும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மே தினத்தை உயர்த்திப்பிடிப்போம்! என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக ஆலைகளின் வாயில் செங்கொடி ஏற்றிக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
படிக்க :
♦ உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !
♦ உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
திருவள்ளூர் :
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள டி.ஐ.மெட்டல் பார்மிங் ஆலையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் இணைப்பு சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் தலைவர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் செங்கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மிகவும் ஆர்வமாக கலந்துக் கொண்டுள்ளனர்.
***
சாய் மீர்ரா இனோஃபார்ம் ஆலையிலும் மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழரும், மாவட்ட செயலாளருமான தோழர் சரவணன் அவர்கள் செங்கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து வைத்த பின்னர் சிறப்புரையாற்றினார்.
***
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இணைப்பு சங்கமான ஏசியன் ரிப்ரோ கிராபிக்ஸ் தொழிலாளர்கள் கிளையில் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான தோழர் சரவணன் அவர்கள் செங்கொடியேற்றி தொழிலாளர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
***
தூசான் ஆலையின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் இணைப்பு சங்கம் சார்பாக பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ஆ.க.சிவா அவர்கள் செங்கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
***
டியூப் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா I.B.P ஆலையின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டத்தின் இணைப்பு சங்கம் சார்பாக ஆலையின் சிறப்புத் தலைவர் ப.விஜயகுமார் அவர்கள் செங்கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
***
T.P.I தொழிலாளர் ஆலையில் அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்பு குழு தோழருமான சரவணன் அவர்கள் ஆலையில் செங்கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அதில் பெருந்திரளான தோழர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
***
திருச்சி :
திருச்சி மாவட்டத்தில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் உத்திராபதி அவர்கள் மக்கள் வாழ்வை சூறையாடும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார்.
***
ஓசூர் :
ஓசூர் கமாஸ் ஆலை வாயிலில் தோழர் சங்கர் அவர்கள் செங்கொடியேற்றி, மே தின தியாகங்கள் குறித்து தொழிளாலர்கள் மத்தியில் உற்சாகமாக சிறப்புரையாற்றினார்.
***
வேலூர் :
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்ணனி சார்பாக மே தினத்தையொட்டி கொடியேற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களும், சங்க தோழர்களும் ஆர்வமாக பங்கேற்றனர்.
***
தஞ்சை :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்ணனி சார்பாக தஞ்சை பகுதியில் பெயர் பலகை திறக்கப்பட்டது, மேலும் செங்கொடியேற்றி மே நாளை உயர்த்திப்பிடிப்பது குறித்து உரையாடல் நடத்தி தொழிலாளர்களுக்கு உணர்வூட்டப்பட்டது.
***
காஞ்சிபுரம் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனியின் சார்பாக காஞ்சிபுரம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் ஆர்வமாக கவனித்து ஆதரவளித்தனர்.
***
மதுரை :
மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகில் மே தினத்தையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னனி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்களும் பொதுமக்களும் உற்சாகமாக கலந்துக்கொண்டனர்.
***
உடுமலை :
மக்கள் அதிகாரம் சார்பில் உடுமலையில் மே தினத்தையொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில் கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை அமுல்படுத்தும் இந்த அரசின் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதின் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
***
கோவை :
கோவையில் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மக்கள் அதிகாரம் தோழர் சங்கர் அவர்கள் தலைமையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன், பகுதி தோழர் ஆறுச்சாமி ஆகியோர் உரையாற்றினர்.
***
கடலூர் :
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக் கூண்டு அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் மே தினத்தையொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தொகுப்பு : வினவு செய்தியாளர்