ஸ்ரேலியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேமில்’ ஒரு மூன்றடுக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து நீண்டிருந்த குழாயில் இஸ்ரேலின் கொடிகள்.தனது அதிகாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக, மிதமான தென்றலிலும் அது அசைவது அச்சமூட்டும் விதமாக இருந்தது.

அதிகார எல்லையை குறிப்பதற்காகவே இஸ்ரேலியர்கள் கொடிகளை பறக்கவிட்டு பாலஸ்தீனியர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டிருந்தனர்.அந்த வீட்டின் முன்புறம் பெரிய எழுத்துகளில் ஆனால் கிறுக்கலான ஹீப்ரு மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. தங்களது எல்லைக்குள் மகன்கள் திரும்ப வருகிறார்கள்
இது பைபிள் வாசகம். மதத்திற்கான ஒரு கூட்டத்தின் குரல். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீனத்தை தங்களுடைய புனித உரிமையாக பார்க்கிறார்கள்.

காம் அல்ஜவொனி பகுதியிலிருக்கும் 500 பாலஸ்தீனியர்களுக்கு இந்த வீடு ஒரு பயங்கரமான கடந்த காலத்தையும், எதிர்நோக்கியிருக்கும் இருண்ட எதிர்காலத்தையும் காட்டும் நினைவுசின்னமாக நிலைத்திருக்கிறது.

படிக்க:
♦ மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை
♦ கொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்

மூன்று தலைமுறைகளாக ஹாவி வசித்து வரும் வீட்டில் இப்போது குடியேறிய இஸ்ரேலியர்கள் அவர்கள் இருக்கக் கூடாது என தடுக்கிறார்கள் என்றால், இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கும் உண்மைகளுக்கு ஒரு அத்தாட்சியாகும்.

எட்டு குடும்பங்களை சேர்ந்த 28 சிறுவர்கள் உட்பட மொத்தம் 78 பேர், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்துவருகிறார்கள். இப்போது அவர்களது வீடு மற்றும் சொத்துக்களை, பறித்து கொண்டு விரட்டியடிக்கப் போவதாக மிரட்டி வருகிறார்கள், அங்கு குடியேறியவர்கள்.

அதில் நான்கு குடும்பங்கள், இந்த மாத ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். அந்த பகுதியில் நடந்த மரணத்தை ஒட்டி இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் வெளியேற்றுவதை தள்ளிபோட்டிருக்கிறது.

பாலஸ்தீன பகுதிகளில் “குடியேறியவர்களின் (இஸ்ரேலியர்கள்) அமைப்பு” அந்த பகுதியில் வாழ்ந்து வரும் ‘பதினைந்து குடும்பங்களின் உரிமையை ரத்து செய்து அவர்கள் இப்போது இருக்கின்ற வீடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த குடும்பங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி தெரியும். ஆனால் ஒரு ஐம்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற்றினால் எங்கே போவது? என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனக் கொடியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த இடத்தின் முன் போராடும் பாலஸ்தீனியர்

யூதர்களின் ஆதிக்கத்தை யூதர்கள் அல்லாதவர்களிடம் உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களை கொண்டு இயங்கும் நீதிமன்றங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வழக்குகளை இரக்கமறற முறையில் விசாரிக்கும் நடைமுறைகளை கொண்டது. அதிகாரமில்லாத பாலஸ்தீனிய அரசியல் தலைவர்கள், கண்முன்னே நடக்கும் அநியாயங்களை அறிந்தும் உலகநாடுகளின் அக்கறையில்லாத்தன்மை கடைசியில் ஏதோ ஒன்று முறிவதை பார்த்ததாக தெரிகிறது.

அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஜெருசலேத்தில் மீதி இருக்கக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தினமும் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேத்திலும் சமீப நாட்களில் மற்றும் வாரங்களில் இந்த எதிர்ப்பு பரவிவருகிறது.

அவர்கள் ஆயுதமேந்திய இஸ்ரேலிய போலீசு மற்றும் துருப்புகளின் மிருகத்தனமான தாக்குதலை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கறிஞர்கள் மற்றும் வீர்ர்கள் ஆகியோரால் கைவிடப்பட்டு சோர்ந்த மனநிலையில் இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் தெளிவான கோபத்தை அடக்குவதில் இதுவரை தோல்விதான் கிடைத்துள்ளது.

ஜெருசலத்தில் 1967-ல் கிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ததைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இஸ்ரேலியர்களின் வெற்றி ஊர்வலத்தின் பாதையை பாலஸ்தீனியர்களின் போராட்டம் காரணமாக இஸ்ரேலிய அதிகாரிகளே மாற்ற வேண்டியதாயிற்று. உண்மையில் இதன் மூலம் போராட்டக்கார்ர்கள் தீர்மானகரமாக தங்களை நிருபித்துள்ளார்கள்

.தினமும் முகத்திலறைவதை போல பெரிய ஹீப்ரு எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள தங்களது அண்மைய வரலாறை இங்கே இருக்கும் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்

2009-ல் ஹாவிஸ் ஹானொன் குடும்பத்தினரோடு (மொத்தமாக 55 பேர்) வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு உடமையான பொருள்கள் அனைத்தும் திறந்தவெளி மைதானத்தில் வீசியெறியப்பட்டன. பக்கத்திலிருக்கும் குடியிருப்புவாசிகளிடம் அந்த நினைவுகள் பசுமையாக பதிந்து இருக்கின்றன. ”இஸ்ரேலிய படைகள் வீட்டுக்கதவை தகர்த்து சிறுவர்களை அநியாயமாக தெருவில் வீசி எறிந்தனர்” என்று எலெக்ட்ரானிக் இன்டிஃபடாவிடம் ரஷா புடெரி என்பவர் கூறினார்..

ரஷாவின் குடும்பவீடு ஹாவி வீட்டைத் தாண்டி அமைந்துள்ளது. அங்குதான் அவளது பெற்றோர்கள் சமீரா தஜானி மற்றும் அடெல் புடெரி வாழ்கிறார்கள். குடும்ப வீட்டிலிருந்து ஆகஸ்ட் 2-ம் தேதி அவர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.

ரஷா அந்த வீட்டில் வாழுகின்ற மூன்றாம் தலைமுறை உறுப்பினர்

தஜானி யின் முன்னோர்கள் அவர்களது ஜெருசலேம் பகுதி கிராமமான பாகா வை விட்டு 1948ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபின் இந்த பகுதிக்கு வந்து தற்சமயம் வாழும் வீட்டில் வசிக்க துவங்கினார்கள்.

தங்களை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர் ஆனால் அகதிகள் முகாமை தவிர்த்துவிட்டு முதலில் தங்களது உறவினர்களுடன் சிரியாவிலும் அதன்பிறகு ஜோர்டானிலும் கிழக்கு ஜெருசலேமுக்கு 1949-ல் திரும்ப வரும் வரை இருந்தனர்.

தங்களது மீதி காலத்தை கிழக்கு ஜெருசலேத்தில் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்து அங்கேதான் வளர்ந்தனர்.

அந்த பகுதியிலிருக்கும் மற்ற குடும்பங்களை போலவே அவர்களது குழந்தைகளும் மீண்டும் வீடற்றவர்களாக ஆகப்போகிறார்கள்.எங்களுக்கு ரொம்ப காலத்திற்கு முன்னாடியே இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்திருந்தோம்” என்கிறார் ரஷா.

போலீசுடன் வாக்குவாதம் செய்யும் போராட்டக்காரர்கள்

அங்கே வளர்ந்தபோது அவர்களது அருகாமை வீடுகளில்குடியேறிகளாக வந்தவர்கள் கண்களில் எப்போதும் இப்படியான ஒருபார்வையை பார்க்கலாம். .அந்த வீட்டை எந்த காரணகாரியமும் இன்றி சுற்றி வந்து முறைத்து பார்த்துக் கொண்டிருப்பார்கள் .ரகசியமாக முக்கியமான விசயம்போல ஒருவருக்கொருவர் பேசிக்கோள்வார்கள். சிலபேர் எங்களது வீட்டின் மீது கல்லெறிவதும் உண்டு.எங்களது அம்மா மற்றும் உறவினர்கள் எக்காரணத்தை கொண்டும் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிடாதீர்கள் என எச்சரித்துக் கொண்டேயிருந்தனர். என கொடுமையான நாட்களை நினைவு கூர்கிறார் ரஷா.

அங்கிருந்த எங்களது வீடுகள்ஐநா சபையின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான அமைப்பான UNRWA மற்றும் ஜோர்டான அரசின் கூட்டு முயற்சியால் 1956 –ல்’ கட்டப்பட்டன.

1948-ல் பாலஸ்தீன இனத்தையே துடைத்தெறிதலை நோக்கமாக கொண்ட நிகழ்வானநக்பா’வுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறியவர்களுக்காக 28 குடியிருப்பு வாரியங்கள் கட்டப்ட்டன.

அந்த வீடுகளுக்கு பிரதிபலனாக தங்களது அகதிகள் தகுதியை 28 குடும்பங்கள் விட்டுத்தந்தன. 1948-ல் இஸ்ரேல் அப்போது உருவாகியிருக்கவில்லை என்றாலும் பாலஸ்தினியர்கள் இப்போது இருக்கக்கூடிய நிலம் மற்றும சொத்துகள் ஆகியவை முன்னர் யூத குடும்பங்களுக்கு சொந்தமான இடங்கள் என குற்றம் சாட்டப்பட்டு வழக்குகள் இப்போது போடப்பட்டுள்ளன.

யூதர்கள்எங்களது சொத்துக்களக்கு உரிமை கொண்டாடுகின்றனர்’ என்றால் அதற்கான சட்ட அடிப்படைகள்குறிப்பாக இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டதே காரணம். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களின் சொத்துக்களை தங்களின் பொறுப்புக்கு மாற்றிக்கொள்ள என்று போடப்பட்ட தனிச்சிறப்பு சட்டமாகும்

இதன் மூலம் உரிமை பாராட்டும் யூதர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் அதேசமயம் பாலஸ்தினியர்களுக்கு அதே உதவியை மறுப்பதும் இஸ்ரேலின் சட்டத்தில் புனிதமாக பாதுகாக்கப்படுகிறது..

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1950ல்இல்லாதவர்கள் சொத்துரிமை சட்டம்என்ற ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக பக்கத்து நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நோக்கத்திற்கான வரைவு திட்டமாகும். அதன் மூலம் அவர்களைஇல்லாதவர்களாகஅறிவித்து அவர்களது சொத்துக்களை இஸ்ரேல் அரசு தனது சட்ட வரம்புக்குள் கொண்டுவந்து வைத்துக்கொண்டது.

வேறு நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த யூதர்களுக்கு அந்த வீடுகள் உடைமையாக்கப்பட்டன. யூதர்கள் எங்கு பிறந்திருந்த போதிலும்இஸ்ரேலுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேலுக்குள் திரும்ப வருவதற்கே உரிமை மறுக்கப்பட்டது.

1967-ல் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ஆக்ரமித்த்து.அதை அடுத்து 1970-ல் சட்டம் மற்றும் நிர்வாக விசயங்கள் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்த்து. ஜோர்டான் கட்டுப்பாட்டில் 1948-லிருந்து வந்த சொத்துக்களை இஸ்ரேலிய யூதர்களுக்கு உரிமை கொண்டாட அனுமதித்தது. இந்த உரிமைகள் எதுவும் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஷெய்க் ஜார்ராவில் கார்ம் அல்ஜௌனி நிலங்களின் பராமரிப்பு கொஞ்ச காலத்திற்கு இஸ்ரேல் அரசாங்கத்தின் காப்பாளர் ஜெனரல் பொறுப்பிலிருந்த்து. அதன் பிறகு இரண்டு கமிட்டிகளிடம்ஷெபார்டிக் சமூகக் குழு, க்நிஸெட் இஸ்ரேல்ஆகியவற்றிடம் கைமாற்றி விடப்பட்டது.

அனைத்து 28 பாலஸ்தீனிய குடும்பங்களுக்கு எதிராக முதலில் வழக்குகள் போடப்பட்டபோது. 1970-களில் சட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தன. 2008 வரை ஒன்றுமில்லை, அதற்கு பிறகு அமெரிக்காவை பூர்விகமாக கொண்டநஹாலாட் சிமோன் இன்டர்நேஷனல்’ என்ற குடியேறிகளின் குழு அந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமைகளை வாங்கியதும், முதல் குடும்பம் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

நஹாலாட் சிமோன் கார்ம் அல்ஜௌனி பகுதியிலுள்ள நிலங்களிலிருந்து அனைத்து பாலஸ்தீனியர்களையும் விரட்டுவதையே தனது பிரதான நோக்கமாக வைத்திருக்கிறது.அடுத்து தற்போதுள்ள வீடுகளை இடித்து தள்ளிவிட்டு புதிதாக குடியேறிவர்களுக்கான திட்டம் ஒன்றைசிமோன் ஹாட்சாதிக்என்ற பெயரில் 200 குடியிருப்புகளை கட்டுவதற்காக தயாரித்திருக்கிறது.

2009-ல் கர்ட் குடும்பம் வசித்து வந்த அவர்களது சொந்த வீட்டின் பாதியை இஸ்ரேல குடியேறிகள் ஆக்கிரமித்து கொண்டனர். இரண்டு அந்நிய குடும்பங்களின் தினசரி நிகழ்வுகள், கோபதாபங்கள் அவர்களது அந்தரங்கங்கள் அனைத்தையும் நடுவில் ஒரு பெட்ஷீட் மட்டுமே பிரித்தது. இதிலிருந்து அவர்களது வாழ்க்கையின் கோரத்தன்மையை உணரலாம்.

இதை என்றைக்கும் நிறுத்த மாட்டார்கள். மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவு தொல்லைகள், கேட்கக் கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்துதல் தங்களது நாயை பழக்கி நம்மை பார்த்தவுடன் குரைக்கவைத்து பயமுறுத்துவது, தேவையில்லாமல் போலீசை கூப்பிட்டுவைத்து நம்மை பற்றி ஏதாவது பொய் புகார் சொல்வது அல்லது நமது இடத்தில் அவர்கள் பார்ட்டிகளை நடத்தி, வேண்டுமென்றே இடைஞ்சல் கொடுப்பது எல்லாத்துக்கும் மேலே ஆளில்லாத நமது வீட்டுக்குள் அந்த குடியேறிகள் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை வீட்டுக்கு வரும் நாம் பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்படும்?என்று எலக்ட்ரானிக் இன்டிபாடா வுக்கு அளித்த பேட்டியில் மொஹமது எல்கர்ட் மனவேதனையுடன் சொல்கிறார்..

தங்களது சொந்த வீட்டில் வசிக்கும் உரிமைக்காக 1972-லிருந்து இஸ்ரேலிய நீதிமன்றங்களில் கர்ட் மற்றும் அவரைப் போன்றவர்கள் போராடி வருகிறார்கள்.

மொஹமது எல்கர்ட் டின் பாட்டி தனது 103 வயதில் இறக்கும்போது கூடநிச்சயமாக நமக்கு உரிமையான இந்த வீட்டில் நாம் நிலையாக வசிக்கும் காலம் வரும்என்ற நம்பிக்கை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு எனது பாட்டி உயிருடன் இருந்திருந்தால் இது அவருக்கு நான்காவது வலுக்கட்டாயமான இடமாறுதலாக இருக்கும். அல்ஹக் ஒரு சட்டஉரிமைக்கான குழு மற்றும் நிறைய பாலஸ்தீனிய அமைப்புகள் #SaveSheikJarrahக்காக சமூக ஊடகங்கள் மூலமான பேச்சரங்கம் ஏப்ரல் 14-ல் நடைபெற்றது. அதில்.எல்கர்ட் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார். ஆனால் அதன்மூலம் நம்பிக்கையான செய்திகள் வெளிவரவில்லை.

பிப்ரவரி 15-ல் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் கொடுத்திருக்கும் ஒரு வழிகாட்டல்படி நான்கு குடும்பங்களின் அதிலிருக்கும் மொத்தம் முப்பது பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன..வீட்டை விட்டு அவர்கள் அனைவரும் மே 2 ந்தேதிக்குள் வெளியேற வேண்டுமென நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

வீட்டைவிட்டு வெளியேறுவது மட்டுமல்ல தாமதபடுத்திய இந்த இடைவெளி காலத்துக்காக அந்த குடும்பங்கள் சட்ட செலவுக்களுக்கான கட்டணமாக ஒவ்வொருவரும் 21000 டாலர்களுக்கும் மேலாக நகாலாட் ஷிமோனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.

25 பேர் கொண்ட மூன்று வேறு குடும்பங்களும் ஆகஸ்ட் மாதம் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அவர்களும் ஒரு குடும்பத்திற்கு 9000 டாலர் வீதம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ரஷா பதெரி குடும்பம் அவற்றில் ஒன்று.

உயிர்வாழும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக எங்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு எங்கே தூங்குவது என்பது தான் பிரதான கவலையாக இருக்கிறது.இங்கே ஒருவருக்கும் வாழ வழி இல்லை” என்கிறார் ரஷா.

வேறு போக்கிடம் எதுவுமில்லை

கிழக்கு ஜெருசலம் முழுதும் யுத மயமாக்குவதுஇந்த ஒற்றைக் குறிக்கோளை நிறைவேற்றிட தோதாக நகரத்திலிருந்து பாலஸ்தீனியர்களை விரட்டியடிக்க தீவிர வலதுசாரி அமைப்புகளால் பணம் கொடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கும்பல்களுடன் நடக்கும் ஒரு பரந்த போர்களத்தின் முன்னணி களமாக ஷேக் ஜாரா இருக்கிறது.

ஜெருசலத்தை அடித்தளமாக கொண்ட அல்க்யுட்ஸ் அமைப்பை சேர்ந்த .ஃபயருஸ் சார்கவியின் வாதப்படி1967 லிருந்து இஸ்ரேலின் நோக்கம் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை ஜெருசலத்தின் பொதுமக்கள் தொகையில் 40 சதத்திற்கு கீழே கொண்டு வந்து விடவேண்டும்என்பதுதான்.

இஸ்ரேலின்மாஸ்டர்பிளான் 2000”-ல் இது குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குள் வேறுபாடு காட்டாத நகர அளவிலான நகர்புற மற்றும் மண்டலதிட்டம்.

மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வருவதற்காக இடமாறுதல் பற்றிய வேறுபட்ட கொள்கைகளை திட்டமிட்டு அவற்றை ஜெருசலத்தில் அமுல்படுத்தினர்என்று சார்கவி எலக்ட்ரானிக் இன்டிபாடா வுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். (Al-Quds – that is the Arabic name of the city of Jerusalem.)

க்ராஸ்ருட்ஸ் அல்குட்ஸ்” என்ற அமைப்பு ஜெருசலத்தில் இயங்கும் பல்வேறு குழுக்களை ஒன்றுபடுத்துவதைபாலஸ்தீனிய இனம் இங்கே வாழஉரிமை வேண்டும்என்பதற்கான ஒரு செயல்முறையாக வகுத்து செயல்படுகிறது. .2011 ல் இந்த அமைப்பு துவங்கப்பட்டதிலிருந்துகிழக்கு ஜெருசலத்தில் பாலஸ்தீன இனத்தில் இருக்கும் பிரிவுகள் பற்றிஆராய்ச்சி செய்து வருகிறது.

இஸ்ரேலிய நீதித்துறை குடியேறியவர்களின் அமைப்புகள் மற்றும் இஸரேலிய ஆக்ரமிப்பு சக்திகள் ஆகியவற்றுக்கிடையே தெளிவான வலைப்பின்னல் கூட்டு செயல்பாடு இருப்பதாக சார்கவி குறிப்பிடுகிறார். இம்மாதிரியான கூட்டு செயல்பாடு தான் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அமைப்புரீதியான பாகுபாட்டை எளிதாக அமுல்படுத்த உதவுகிறது.

வழக்குகள் கோர்ட்டுகள் வழியாக செல்வதற்கான வழியை துடைத்தெறியும் போது குடியேறியவர்களின் இருப்பு மற்றும் அதே போன்று போலீசு துறையில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருவதும் அங்கு இருக்கும் பூர்வகுடிகளை நிலையான பயத்திலேயே இருத்திவைக்கிறது.

அவர்களிடம் கேமராக்கள் இருக்கின்றன. அதைக்கொண்டு ஏதோ குற்றவாளிகளை கண்காணிப்பது போல நமது எல்லா நகர்வுகளையும் அசைவுகளையும் படம் பிடிக்கிறார்கள். அந்த பகுதியை சேர்ந்திராத குடியேறிகள் கூட பக்கத்து வீடுகளுக்கு வருவது போல வருகின்றனர். அவர்கள் அனைவரது கைகளிலும் ஆயுதங்கள் இருக்கும். அவர்கள் எப்போதும் நாங்கள் ஏதோ தவறு செய்து விட்டதை போல போலீசை கூப்பிட்டு எங்களை மிரட்டுவார்கள்”. ஆரிப் ஹம்மத் 70 வயது பெரியவர் எலக்ட்ரானிக் இன்டிபாடாவிடம் புலம்புகிறார்.

ஹம்மத் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஷேய்க் ஜாரா விலுள்ள காம் அல்ஜவொனி பகுதியில்.அவரது குடும்பம் 1948-ல் ஹைஃபாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபின் இங்கு வந்து வசித்து வருகிறார்கள். எட்டு உறவினர்களுடன் வாழும் அவருக்கு பேத்தி பிறந்து 18 மாதங்களே ஆகின்றன. என்றாலும் வீட்டிலிருந்து வெளியேற்றபடும் ஆகஸ்ட் மாதத்தை எதிர்நோக்கியிருக்கிறார். ”இங்கே நம்மை சுற்றி அபாயங்கள் அழுத்தங்கள் சூழ்நிலைகள் மனஅழுத்தத்தை கொண்டு வந்து விடும்.என்றாலும் நான் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லைஹம்மத் கூறுகிறார்.

வரைமுறையில்லாமல் நீண்டகாலத்திற்கு இழுத்துச்செல்லப்படும் வழக்குகள் அதன் நடைமுறையால் ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகின்றனஎன்கிறார் க்ராஸ்ருட்ஸ் அல்கட்ஸ் அமைப்பைச் சேர்ந்த சார்க்வி.

நியாயமான சண்டை அல்ல :

அவர்கள் மத்தியில்குடியேறிகள்கெட்டவர்கள் என்றும்மற்றவர்கள் நல்லவர்கள்என்ற உணர்வு எப்போதும் இருக்கிறது. குறைந்தபட்சம் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. ஆம், சட்டம் இருக்கிறது. ஆனால் அது இனவெறி கொண்டதாக இருக்கிறதுஅவரே சொல்கிறார்.

இதை காட்டாமல் இருப்பதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இங்கே அரசு இருக்கிறது சட்டம் இருக்கிறது சட்டம் ஒழுங்கு இருக்கிறது மற்றும் இங்கே சட்ட உதவிபெறாதவர்கள் நாடுகடத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவரே தொடர்ந்துஇல்லை எல்லாமே இனவெறி பிடித்திருப்பவை. இந்த சட்டமியற்றும் கிளைகள் அதன் அமுலாக்கம் இங்கு இருக்கின்ற அத்தனையும் எல்லாமே

எல்லா ஏழு குடும்பங்களும் தாங்கள் வெளியேற்றபடுவதை நிறுத்தக்கோரி எந்த நீதிமன்றத்திலும் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மெல்லியதாக இருக்கின்றன, என்கிறார் அஸீல் அலபாஜெ அல் கட்க் கின் ஒரு சட்ட ஆலோசகர்.

படிக்க:
♦ இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
♦ போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

கிழக்கு ஜெருசலமில் இருக்கும் அனைத்து குடும்பங்களின் அனுபவம் உணர்த்துவது ஒரு மாஜிஸ்ட்ரெட் கோர்ட்டிலிருந்து வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டால் நீங்கள் வலுலுக்கட்டாயமாக வெளியேற்றபடுமுன் இது ஒரு காலபகுதி யாகும் என்பதை குறிக்கிறதுஎன்கிறார் அல்பஜே

சர்வதேச கவனத்தை கவருவதற்காக சமூக ஊடகங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது சளைக்காமல் வழக்காடுவது ஆகியவற்றில் அங்கிருக்கும் பாலஸ்தீனியர்களும் அவரகளுக்கான செயற்பாட்டாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஷேய்க் ஜாரா வில் வசிப்பவர்கள் 191 பாலஸ்தீனியர்கள் உட்பட 500 பேர் இஸ்ரேலி மற்றும் சர்வதேச உரிமைகள் அமைப்பு ஆகியவை ஏப்ரல் 22 அன்று சர்வதேச குற்ற நீதிமன்றத்திடம் (ICC) ஒரு முறையீடு செய்துள்ளனர்.

(ICC) சர்வதேச நீதிமன்றம் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் இழைக்கப்பட்ட போர்குற்றங்களை பற்றிய விசாரணையை செய்துகொண்டிருக்கிறது. அதனுடன் கிழக்கு ஜெருசலமில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் பாலஸ்தீனியர்களின் நிலைமை குறித்தும் அந்த விசாரணையில் சேர்க்ககுமாறு கோரியுள்ளனர்.

அதேசமயம் அங்கே குடியிருப்பவரகள் தங்கள் முன்னால் காத்திருக்கும் போராட்டங்களுக்கும் தாங்களே முன்னின்று வழிநடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குழந்தையாக, இங்கே குடியேறியவர்களின் நடவடிக்கைகள் எவ்வளவு கொடூரமானவை என பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இது ஒரு சொத்து இழப்பு என்ற அளவில் தொடங்கி முடிவதல்ல. மனரீதியான தொல்லைகள், பொருளாதாரம் வறண்டு போதல் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. இது ஒரு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் போராட்டம்என்கிறார் மொகமது எல்கர்ட் ..

கட்டுரையாளர் : கெல்லி குன்ஸ்ல், அமெரிக்க சுயாதின பத்திரிக்கையாளர்
தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : ElectronicIntifada

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க