அகில இந்திய பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் ஓய்வூதியர் சங்கம்.
தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம், திருச்சி
தொடர்புக்கு : 94861 03547

பத்திரிகைச் செய்தி

11.6.2021

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை இழுத்து மூடுவதற்கு உச்சகட்ட சதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2019-ல் மத்திய அமைச்சரவை கூடி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்வதற்காக சில முக்கிய முடிவுகளை எடுத்தது. மத்திய அமைச்சரவையின் முடிவின்படி 85,000 ஊழியர்கள், அதிகாரிகள் விருப்ப ஓய்வு திட்டத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு மாறாக 2021 மார்ச்-ல் 4G வழங்குவதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4G சேவை வழங்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு தடுத்துவிட்டது. செல் தொலைபேசி சேவையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போட்டியை சமாளிக்க முடியாமல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மார்ச் 2021 அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகர் திரு.விஜயராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அறிஞர்கள் குழு பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4G கருவிகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. நோக்கியா, எரிக்சன் போன்ற உலகளாவிய விற்பனையாளர்களிடம் உபகரணங்கள் வாங்க அரசு அனுமதிக்கவில்லை.

கடும் நிதி நெருக்கடி, ஊழியர் பற்றாக்குறை, பிற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக சேவை வழங்க முடியாமல் மிகப் பெரும் நெருக்கடியில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சிக்கியுள்ளது.

படிக்க :
♦ பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?
♦ பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !

இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்றம் பொதுநலவழக்கு ஒன்றில் கீழ்க்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்துள்ளது. “தொலைத்தொடர்பு சேவை உலகு தழுவிய அளவில் 5 மேம்படுத்தப்பட்ட சேவை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எதற்காக காலாவதியான 4G உபகரணங்களை கேட்டு வழக்குத் தொடுத்து இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளது.

மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனம் 5G உயர்தொழில்நுட்ப சேவையை வழங்க உடனடியாக, தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
எஸ்.காமராஜ்,
மாநிலச் செயலாளர் ,
அகில இந்திய பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் ஓய்வூதியர் சங்கம்.
தமிழ்நாடு வட்டம்.
திருச்சி
9486103547.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க