மிழக உழைக்கும் மக்கள் முன்னணி புதிய தொழிற் சங்க அமைப்பின் துவக்க விழா 31.1.2021 அன்று நடைபெற்றது. துவக்க விழாவிற்கு என்.மணி தலைமை வகித்தார். திருச்சி தொழிற்சங்கத் தலைவர் எஸ்.காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். நெய்வேலி ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சேகர்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தலைவர் கே.லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சங்கத்தின் செயலாளர் விருதை.காந்தி, மின்வாரிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் சேக்கிழார், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் மதிவாணன், வாகன ஓட்டிகள் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் உரையாற்றினார்கள்.

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர் சுந்தர்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். தனது வாழ்த்துரையில் இன்றைய நிலைமையில் தொழிலாளி வர்க்கம் போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். அத்தகைய தலைமையைத் தரக்கூடியதாக இந்தத் தொழிற்சங்கம் இருக்கும் என்றார்.

தோழர் சுந்தர்ராஜ் வாழ்த்துரை

மத்திய அரசு அனைத்துத் தொழிலாளர் விரோத சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும், மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் :

புதுடில்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்கும் மத்திய அரசிற்கு கண்டனம்!

திருச்சியில் நடந்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி கூட்டத்தில் தீர்மானம்!

புதுடில்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் மெத்தனமாக நடந்துக் கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சியில் தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் சார்பற்ற முறையில், தொழிலாளர்களின் உரிமைகளை சமரசம் இன்றி காக்கும் பொருட்டு தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி என்ற அமைப்பு கடந்த ஜன31-ஆம் தேதி திருச்சியில் துவங்கப்பட்டது. அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பி.எஸ்.என்.எல், ரயில்வே, என்.எல்.சி உள்ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகளும், தமிழக போக்குவரத்து, சிவில் சப்ளை, உள்ளாட்சி, மின்சார வாரியம் உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

திருச்சியில் நடந்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னணியின் துவக்க விழாவில் அதன் தலைவர் கடலூர் எம்.சேகர் முன்னணியின் நோக்கம் குறித்து பேசினார்.

கூட்டத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து துறை தொழிலாளர் சம்மேளனம் தலைவர் திருச்சி என்.மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்க தலைவர் திருவாரூர் ஹெச்.அழகிரி, தமிழ்நாடு  மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் பொதுச்செயலாளர் சேக்கிழார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் காமராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட அகில இந்திய தொலைத்தொடர்பு துறை துணைத்தலைவர் சென்னை சி.கே.மதிவாணன், இன்றைய தொழிற்சங்கங்களின் நிலையையும், தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.

படிக்க :
♦ பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற கிளை அமைப்புகளின் நிர்வாகிகளை கொண்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் 51 பேர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஓருங்கிணைந்து, தமிழக உழைக்கும் மக்கள் முன்னணியின் தலைவராக பி.எச்.சி.எம் காந்தி, பொதுச் செயலளராக கடலூர் எம்.சேகர், பொருளாளராக கடலுார் ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் இந்தியாவில் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், விவசாயிகள் மீது தடியடி நடத்திய மத்திய அரசை கண்டித்தும், 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலசட்டங்களை 3-ஆக குறைத்து,  சட்டரீதியான உரிமைகளைப் பறித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், திருத்தப்பட்ட சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, உரிமையைப் பறிக்கும் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்து, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், நியாயமானக் கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் செவிலியர் சங்கத்திற்கு ஆதரவை அளிப்பது, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் செயல்பாட்டை முடக்குவதை கைவிட்டு 4ஜி உரிமத்தை வழங்க வலியுறுத்தியும், மின்களப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், உள்ளாட்சி துறை தூய்மை பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வலியுறுத்தியும், தமிழக சமூக நலத்துறையில் 75 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் சம்பளம் வழங்கக் கோரியும், தனியார் வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறை, போக்குவரத்துறை விதிக்கும் கண்மூடித்தனமான கட்டணங்களை நிறுத்தக்கோரியும், என்எல்சி பயிற்சி பொறியாளர் தேர்வில் தமிழகத்தை சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர்.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து  சங்க பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன், தமிழக அரசு பணியாளர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், தமிழக உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் க.அறவாழி, சென்னை வீட்டு வேலை செய்யும் பெண்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் காமாட்சி, சென்னை ஷேர் ஆட்டோ சங்க தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பி.எஸ்.என்.எல் தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கடலூர் ஆனந்தன் நன்றி கூறினார்.

தகவல் :
M.சேகர், பொதுச் செயலாளர்,
தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி.

3 மறுமொழிகள்

  1. ஏற்கனவே புஜதொமு உள்ள போது இது என்ன புதிய சங்கம்?

    புகதொமு வை கை கழுவி விட்டீர்களா?

    • வினவு சார்ந்திருக்கும் அரசியல் அமைப்புக்கும் இந்த த.நா.உ.ம.மு தொழிற்சங்கத்துக்கும் எத்தொடர்பும் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க