ஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பல ’பக்தாள்கள்’ கேட்ட கேள்விகளுக்கு வரிசையாகப் பதில் அளித்துள்ளார். அதில் ஒரு பக்தாள், “ஏன் நீங்கள் சுற்றுச் சூழல் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

இதற்குப் பதில் அளித்த சத்குரு, உலகில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 33% பேர் இந்தியாவில்தான் இருப்பதாகவும், இதற்குக் காரணம் நமது மண்ணில் போதுமான சத்து இல்லை என்றும் அதன் காரணமாகவே நமக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலை இருக்கும் போது, தான் எப்படி சுற்றுச் சூழல் குறித்துப் பேசாமல் இருக்க முடியும் என்று கேட்டுள்ளார்.

படிக்க :
♦ அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!
♦ யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

வெள்ளியங்கிரி மலைப் பகுதியை மொட்டையடித்து, அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு, யானைகளின் வழித்தடத்தை மறித்து ஆதியோகி சிவனின் சிலையையும், ஆசிரம கட்டிடங்களையும் கட்டிக் கொண்டு அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த இயற்கையையும் சீரழித்த ஜக்கி தான் இவ்வாறு பேசியிருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகத்தையாவது கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காகத்தான் தாம் பல்வேறு ஆன்மிகப் பயிற்சிகளை இலவசமாக வழங்கிவருவதாகவும் கூறியிருக்கிறார்.

இலவச ஆன்மீகம், யோகா பயிற்சி ஆகியவை எல்லாம் பெரிய மீனைப் பிடிக்க தூண்டிலில் மாட்டப்படும் சிறிய மீன்கள்தான். பெரும் கார்ப்பரேட் ஆன்மீக மாஃபியாவாக வளர்ந்து நிற்கும் ஜக்கி வாசுதேவ், இயற்கையை அழிப்பதற்கும் சொத்து சேர்ப்பதற்கும் பயன்படுத்தும் தூண்டில் மீன்கள்தான் ஆன்மீகமும், சுற்றுச் சூழல் ‘அட்வைஸ்’ பம்மாத்துக்களும் !

ஜக்கியின் ஃபார்முலா ஒன்றுதான். அது, “ஆன்மிகம் உனக்கு !! ஆஸ்தி எனக்கு !!”

ஆன்மீகம் மக்களுக்கு; ஆஸ்தி அவர்களுக்கு…!


கருத்துப்படம் : மு. துரை